FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: RemO on October 11, 2011, 09:44:37 AM

Title: முட்டை வாங்குவது எப்படி? டிப்ஸ்
Post by: RemO on October 11, 2011, 09:44:37 AM
எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.
இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்.

நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை கொடுத்துவிட்டால் முட்டை மார்க் போட்டுவிடப்போகிறார்கள் என்று, அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி முட்டை மார்க் வாங்குவதில் தான் ஒரு கிக் இருக்கும்.

முட்டைகள் அவை என் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை, தேர்வானாலும் சரி, சாப்பாடானுலும் சரி,முட்டைகள் எனக்கு பிடித்தவை.

முன்பே சொன்னது போல் முட்டை வாங்குவது ஒரு கலை, அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் தேர்வு சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்துவிடுவார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து எழுத முடியாதாம், (அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று) .

உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி(பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடிசனல் பேப்பர் வாங்கும், அடப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள மெயின் பேப்பரை முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த அடிஸ்னல் பேப்பர் கேட்கும் அந்த புள்ள.

ஸ்கூலில் எல்லாம் அடிஸ்னல் பேப்பர் கேட்டு வாங்கினா ஒரு தனி மரியாதை, நமக்கு எழுத தெரிஞ்ச மேட்டருக்கு தேதி, பெயர், தேர்வு எண் என்று மூன்று வரி போதும் இதில் எங்கே இருந்து முப்பது வரி + முப்பது வரி +முப்பது வரி + முப்பது வரி,எழுதி அடிஸ்னல் பேப்பர் வாங்குவது????

இருந்தாலும் ஒரு கூடப்படிக்கும் புள்ளைய பக்கத்தில் வெச்சுக்கிட்டு எழுதாம எப்படி உட்காந்து இருப்பது? அது இழுக்கு என்று எழுத ஆரம்பிச்சா பேனாவுக்கு பேப்பரில் ஏதோ ஸ்பீட் பிரேக் இருப்பது போல் நகரவே நகராது.

இருந்தாலும் பேப்பரை நிறப்பி அடிஸ்னல் பேப்பர் வாங்கனுமே, அதுக்கு நான் கண்டு பிடித்த டெக்னிக் பேப்பரின் நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்
எழுத வேண்டிய இடம் டக்குன்னு சின்னதாகிவிடும். எல்லோரும் எழுதி முடிச்சுதான் டெக்ரேட் செய்வாங்க ஆனா நாம எல்லாம் வெறும் பேப்பரையே டெக்ரேட் செஞ்சவோம். அதுபோல் எழுதும் பொழுது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் ஒரு பத்தியே எழுதும் அளவுக்கு இடம் விடுவேன்.

டெக்ரேட் எல்லாம் செஞ்சு முடிஞ்ச பிறகு ஈயத்தின் பயன்கள் என்ன?என்று இருக்கும் கேள்விக்கு இட்லி பானைக்கு ஈயம் பூச பயம் படுகிறது, சட்டி பானைகளுக்கு ஈயம் பூசவும் அப்படி பூசுவதால் பாத்திரம் சீக்கிரம் வீனாகமலும் சூடு எளிதில் பரவவும் பயன் படுகிறது என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எழுதி பேப்பரை நிறப்புவேன். பக்கத்தில் இருக்கும் புள்ள அடே இவனும் என்னமோ எழுதி மெயின் பேப்பரை முடிச்சுட்டானே என்று பார்க்கும். அப்ப நம்ம கெத்தா எழுந்திருச்சு சார் பேப்பர் என்று கேட்கும் பொழுது அப்படியே கிளாசே நம்ம திரும்பி பார்க்கும் பாருங்க! நொம்ப பெருமையாக இருக்கும், இதுக்காகவே என்ன என்னமோ எழுதி அடிசனல் மேல அடிசனல் வாங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன்.

பேப்பரை நிறப்ப நான் செய்த டெக்னிக்ஸ்

1) பேப்பரின் நான்கு புறமும் மார்ஜின் விட்டு பொட்டி கட்டனும்.

2) ஒருவரிக்கும் அடுத்தவரிக்கும் இடையில்





இம்புட்டு கேப்பாவது இருக்கனும்.

3) கொஸ்டின் நம்பரை மட்டும் எழுதி பதில் எழுத கூடாது.

ஏதேனும் 3 க்கு சிறு குறிப்பு வரைக என்று கொஸ்டின் பேப்பரில் இருந்தால் அதையே திரும்ப எழுதி, கேள்வியை எழுதி பின் பதிலை எழுதவேண்டும்.

4)பொருத்துக என்று இருந்தால் கொஸ்டின் பேப்பரில் இருப்பதை அப்படியே எழுதி திரும்ப நாமும் நம் பங்குக்கும் அதை சரி செய்ய முயற்சிக்கனும்.

இப்படி கஸ்டப்பட்டு எல்லா டெக்னிக்கையும் உபயோகித்து எழுதிய பிறகு
பேப்பர் கொடுக்கும் பொழுது முட்டை மார்க் வாங்க எதுக்குடா இத்தனை பேப்பர் வாங்கின என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் பழக்கம் ஆகிவிட்டது.

enaku mail la van thathu ithu:D en sontha kathai ila :D
Title: Re: முட்டை வாங்குவது எப்படி? டிப்ஸ்
Post by: Global Angel on October 11, 2011, 07:41:58 PM
muttai vaangurathuku ivlo poratama.... :D :D
Title: Re: முட்டை வாங்குவது எப்படி? டிப்ஸ்
Post by: RemO on October 12, 2011, 12:31:14 AM
Aama athelam vangi partha than theriyum ena kastamnu
ethum eluthama koduthalum antha vaathiyar 2 mark potu vaipan  :D :D