FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 10, 2011, 08:17:00 PM

Title: அங்காடி தெரு..
Post by: ஸ்ருதி on October 10, 2011, 08:17:00 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffiles.stv.tv%2Fimg%2Farticles%2F94032-gamesindias-beggars-eye-commonwealth-windfall-200.jpg&hash=90aa34e8e2741ccf564083d4090f3bf89621716e)
பாமரரும்
பணக்காரர்களும்
பணத்தை பணமாக
பாராமல்
பகட்டுக்காக சிலரும்
வறுமையிலும்
சுய கவுரவதிற்காய்
சிலரும்
எண்ணியதை வந்து
வாங்கி செல்லும்
ஒரே தெரு...

கோடிகள் புரளும்
நகரம்...
கூட்டமே உனக்கு ஓய்வே
இல்லையோ ?
நினைக்க தோன்றும்
மனது...

தினமும் வியாபாரம்
சலிக்காமல் நடக்கும்
ஒரே தெரு...
பார்த்தவர்கள் கூட
படமாக்க தோன்றிய
ஒரே தெரு..

மங்கலத்துக்கும்
அமங்கலதுக்கும்
ஒரே கடையில்
துணி எடுக்கும்
ஒரே தெரு....

கண்டும் காணாமலும்
பல காரியங்கள்
நொடியில் நடந்தேறும்
ஒரே தெரு...

ஏனோ காண சகிக்கவில்லை
புழுவாய் ஊறி செல்லும்
மனிதனை....
கூட நெரிசலில்
ஊறி செல்லுகையில்
ஐயோ என கதறும்
மனது...

விலங்கினை காக்கும்
சமூகம்
ஏனோ இவரை மறந்தது...????

பரிதாபத்தில் சிலரும்
அருவருப்பில் சிலரும்
கடந்து போகையில்
என் மனம்
அங்கே இருந்து
நகர மறுக்கிறது...
நகர மறுத்தது மனமே..
என்னை நகராமல்
நகர்த்தி சென்றது
பெருங்கூட்டம்...

பல கோடியை
அனாயாசகமாக அரசியலாக்கும்
அரசியல் கயவர்களுக்கு 
இந்த அவலங்கள் ஏனோ
கண்ணில் புலப்படவில்லை???

எல்லாம் இருந்தும்
வாழ மறுக்கும்
கோழை நான்...
எதுவுமே இல்லாமல்
வாழ்ந்து துடிக்கும்
ஜீவனை காணுகையில்
ஏதோ ஒன்று என்னை
தலை குனிய வைக்கிறது...
Title: Re: அங்காடி தெரு..
Post by: Global Angel on October 10, 2011, 09:17:14 PM
nice  ;)

Quote
எல்லாம் இருந்தும்
வாழ மறுக்கும்
கோழை நான்...
எதுவுமே இல்லாமல்
வாழ்ந்து துடிக்கும்
ஜீவனை காணுகையில்
ஏதோ ஒன்று என்னை
தலை குனிய வைக்கிறது...
Title: Re: அங்காடி தெரு..
Post by: RemO on October 11, 2011, 11:20:14 AM

"பரிதாபத்தில் சிலரும்
அருவருப்பில் சிலரும்
கடந்து போகையில்
என் மனம்
அங்கே இருந்து
நகர மறுக்கிறது"...

"எல்லாம் இருந்தும்
வாழ மறுக்கும்
கோழை நான்...
எதுவுமே இல்லாமல்
வாழ்ந்து துடிக்கும்
ஜீவனை காணுகையில்
ஏதோ ஒன்று என்னை
தலை குனிய வைக்கிறது"...


very nice words
nala karuthu
inimelavathu mood out akama iruntha sari :D