FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ammu on March 22, 2013, 11:02:01 AM
-
ஆயுதம் கண்டரிந்தவனுக்கு
அறிவில்லாமல் இருந்திருக்கலாம்
ரத்தம் சிந்தாத பூமியாய் இருதிருக்கும்
தீவிரவாத கூட்டத்துக்குள்
நேர்மை இல்லாமல் இருந்திருக்கலாம்
அமைதி அலங்கரித்திருக்கும்
கதாநாயகிக்கு சிறிது வயது
ஏறாமல் இருந்திருக்கலாம்
60 வயது நாயகனின் தாய் கதாபத்திரம்
பொருந்தாமல் போய்இருக்கும்
அட நான் கூட காதலிக்காமல்
இருந்திருக்கலாம்
கவிதை கிறுக்கி கரங்கள்
சிவக்காமல் இருந்திருக்கும்
-
இருந்திருக்கலாம்,இருந்திருக்கலாம்,
இருந்திருந்தால்,இத்தகும்
வித்தக.இனிகவி.பிறந்திருக்குமா????
-
இப்படி எத்தனை இருந்திருக்கலாம் .... இருக்கும்போது சந்தோசப்படும் மனது அதன் தாகத்துக்கு உள்பட்டு வருந்திரும்போதுதான் இத்தகைய கேள்விகள் உருவாகின்றது அதை அழகான கவிதையாய் கொடுதிருகிங்க அம்மு இனிய கவிதை