FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on March 22, 2013, 09:45:24 AM
-
மூல் (Moule) - ஒரு கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
பட்டர் - 50 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு பாக்கெட்
காய்ந்த பார்ஸ்லே - ஒரு மேசைக்கரண்டி
ஆல் ஹெர்பல் இலை - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - கால் மேசைக்கரண்டி
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். மூலின் மேல் ஒட்டி இருக்கும் சிப்பிகளை கத்தியால் சுரண்டி சுத்தம் செய்யவும். சிப்பிகளுக்கு இடையில் காய்ந்த இலை போல் இருக்கும். அதை இழுத்தால் வந்து விடும். பின் அனைத்தையும் சுத்தமாக கழுவவும்.
ஒரு வாயகன்ற பெரிய சட்டியில் பட்டரை உருகவிடவும்.
அதில் பூண்டை பொன்னிறமாக வதக்கவும்.
பின் வெங்காயத்தைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் ஹெர்பல் இலை, பார்ஸ்லே இலை, மிளகுத் தூளைப் போடவும்.
தீயை சற்று அதிகமாக வைத்து சுத்தம் செய்த மூலைப் போட்டு அனைத்தும் வாய் திறக்கும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
அனைத்தும் வாய் திறந்து தண்ணீர் நிறைய விடும்.
தண்ணீர் பாதியாக வற்றியதும் க்ரீமை ஊற்றவும்.
இரண்டு நிமிடம் கழித்து கொஞ்சம் கிரேவியாக வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். ப்ரெஞ்ச் ப்ரையுடன் சூடாக சாப்பிடவும்.
மூலில் கடல் தண்ணீர் இருப்பதால் உப்பாகத்தான் இருக்கும். ஆகையால் கால் மேசைக்கரண்டி உப்பே போதுமானது .ஃப்ரான்ஸில் மிகவும் பிரபலமான உணவு இது. கிறிஸ்துமஸ் நேரத்தில் அவசியம் அவர்கள் உணவு பட்டியலில் இடம் பெறும் உணவு. மூலத்திற்கு நல்லது. கால்சியம் அதிகம் உள்ளது.