கோடைகாலத்தில் காட்டன் ஆடைகள் தான் சிறந்ததாக இருக்கும். அதிலும் இந்தியாவில் அடிக்கும் வெயிலுக்கு சொல்லவே வேண்டாம். எனவே தான் பெரும்பாலும் இந்தியாவில் கோடைகாலத்தில் காட்டன் ஆடைகளை அதிகம் அணிய விரும்புவார்கள். இல்லையெனில் சருமமானது பெரும் எரிச்சலுக்கு உண்டாகி, பின் சருமத்தில் அரிப்புகள், வியர்வையால் ஏற்படும் கொப்புளங்கள் என்று உடலில் பிரச்சனைகள் ஏற்படும்.
அதிலும் கோடைகாலத்தில் மட்டும் எந்த ஒரு விஷேசமும் வராமல் இருக்குமா என்ன? ஆகவே இந்த காலத்தில் அதிகமாக மேக்-கப் செய்யும் பெண்கள், உடுத்தும் ஆடைகளில் எவ்வளவு கவனமாக இருக்கமாட்டார்கள். அத்தகைய பெண்களுக்கு சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, இந்தியாவில் பெண்களின் பாரம்பரிய உடையான புடவையில் காட்டன் புடவையை அணிந்தால் சரியாக இருக்கும். மேலும் இந்தியாவில் நிறைய பிரபலமான காட்டன் புடவைகள் உள்ளன. அத்தகைய புடவைகளை விரும்பாத பெண்களே இருக்கமாட்டார்கள்.
அதிலும் காட்டன் புடவைகளில் எம்ராய்டரி, பார்டர், முந்தானை போன்றவற்றில் வண்ணமயமான டிசைன்கள் உள்ளது. இப்போது அத்தகைய காட்டன் புடவையை விரும்பும் பெண்களுக்காக, இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஒருசில காட்டன் புடவைகளின் பெயர்களையும், அதன் சிறப்பையும் பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய புடவைகள் எந்த விதமான விழாக்களின் போதும் அணியக்கூடியதாக இருக்கும். சரி, அந்த காட்டன் புடவைகளைப் பார்ப்போமா!!!
டாண்ட் புடவை (Tant)
பெங்காலி புடவைகளுள் ஒன்றான டாண்ட் புடவை மிகவும் அழகாக வசீகரத்துடன் இருக்கும். இந்த புடவையில் நிறைய டிசைன்கள் உள்ளன. இந்த வகையான காட்டன் புடவையின் அழகு என்னவென்றால், அது கஞ்சி போட்டது போல் எப்போதும் இருக்கும்.
காதி புடவை (Khadi)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613102-khadi-600.jpg&hash=04b29876ddeacf52bb3699a39d278d9cd240aeb2)
காதிப் புடவையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் இந்த புடவையின் நூல் மிகவும் மிருதுவாக இருப்பதால், இதனை வெயில் காலத்தில் உடுத்தினால் மிகவும் அருமையாக இருக்கும்.
டக்காய் புடவை (Dhakai)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613130-dhakai-600.jpg&hash=e1b855a5438e86f7361e7ef6ace004a2f2e75793)
பங்களாதேஷில் உள்ள டாக்காயில் தயாரிக்கப்பட்டது தான் டக்காய் சேலை. இந்த சேலையில் சிறத்தது என்னவென்றால் அதன் எம்பிராய்டரி தான்.
லக்னோவி சிகான் (Lucknowi Chikan)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613192-lucknowichikan-600.jpg&hash=7bf12d3df11f91fa453274ae56a2b9309d1a8478)
இந்த வகையான புடவை லக்னோவில் நெய்யப்பட்டது. இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், இதன் எம்பிராய்டரிக்கு பயன்படுத்தும் மாறுபட்ட நிறங்களில் இருக்கும் நூல்கள் தான்.
சாம்பல்பூரி (Sambalpuri)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613225-sambalpuri-600.jpg&hash=0d9ab59ea765df6cee5a7145929f929ae8c052e8)
ஒடிஸா சேலை மிகவும் பிரபலமான ஒரு காட்டன் புடவை. இந்த புடவை ஒடிஸாவில் இருந்து பல்வேறு அடர்ந்த நிறங்களைக் கொண்ட முந்தானைகளைக் கொண்டது.
காஞ்சிபுரம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613254-kanjeevaram-600.jpg&hash=625fa2b25e67910456eace50e5cf88a68f017497)
காஞ்சிபுரம் என்றாலே புடவை தான் ஞாபகம் வரும். அதிலும் திருமணப் பட்டுப் புடவை தான் பிரபலமானது. அதே சமயம், காட்டன் புடவையுட் இங்கு மிகவும் சூப்பராக இருக்கும்.
கோட்கி (Kotki)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613291-kotki-600.jpg&hash=5e2f7d7b57ed8acbc608456baad93f5d299dc371)
கோட்கி என்பது ஒரு பெங்காலி டிசைன். அதிலும் இந்த டிசைனானது கோவில் மதில்களை அழகான வண்ணங்களால் வரைந்தது போன்று வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும்.
பொம்கை (Bomkai)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613331-bomkai-600.jpg&hash=2ef977d6b4edab4e0e5dda4001845dcfb6c35e5d)
ஒடிஸாவில் உள்ள சாம்பல்பூரில் நெய்யப்படும் புடவைகளுள் மற்றொன்று தான் பொம்கை. இந்த சேலையில் முந்தானை மட்டுமின்றி, சேலையின் உடல் முழுவதும் ஜரிகையால் ஆன புள்ளியும், மிகவும் சிறிய பார்டரும் உள்ளது.
பொச்சம்பள்ளி (Pochampally)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613375-pochampally-600.jpg&hash=2c2fba3fec845a37a972cffb48eb945d18039845)
தென்னிந்தியாவில் உள்ள காட்டன் புடவைகளில் பொச்சம்பள்ளியும் ஒன்று. இந்த புடவையின் சிறப்பு வண்ணமயமான டிசைன்கள் தான்.
கோட்டா (Kota)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F18-1363613427-kota-600.jpg&hash=63356e1e2a3bf73cd42e91ca9e350058b1303b48)
ராஜஸ்தானில் மிகவும் பிரபலம் தான் கோட்டா. இந்த சேலையை சாதாணைமாகவோ அல்லது வீட்டில் ஏதேனும் பூஜை போன்றவற்றின் போதும் உடுத்துவதற்கு சிறந்ததாக இருக்கும்.