FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on March 18, 2013, 12:20:07 PM

Title: மக்காச்சோள ரவை கிச்சடி
Post by: kanmani on March 18, 2013, 12:20:07 PM
என்னென்ன தேவை?

மக்காச்சோள ரவை -  1 கப்,
பொடியாக நறுக்கிய காய்கள் - ஒரு கப் (பட்டாணி, கேரட், உருளைக்
கிழங்கு, பீன்ஸ்),
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
பொடியாக நறுக்கிய சிறிய தக்காளி - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சைமிளகாய் -  5,
எலுமிச்சைப்பழ ஜூஸ் -  ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது,
மஞ்சள் தூள் - கால் சிட்டிகை,
தண்ணீர் - இரண்டரை கப்,
உப்பு - தேவையான அளவு.
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?

அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கி, காய்களை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்க்கவும்.  தண்ணீர் கொதி வந்தவுடன் எலுமிச்சைப்பழ ஜூஸ், உப்பு சேர்த்து தணலைக் குறைத்து வைத்து ரவையை தூவியது போல் கொட்டிக் கிளறவும்.  கடாயை மூடி 15 நிமிடங்கள் மிகக் குறைந்த தணலில் வேகவிடவும்.

இடையில் ஒரு முறை கிளறிவிடவும். கொத்தமல்லி தழை தூவி தேங்காய் சட்னி, பீர்க்கங்காய் பச்சடியுடன் பரிமாறவும்.4 மக்காச்சோள ரவை வேக  சிறிது நேரம் எடுக்கும். குழைவாக இருக்க விரும்புபவர்கள் இன்னும் அரை கப் தண்ணீர் அதிகம் சேர்க்கலாம். வதக்கும் போதே மஞ்சள் தூள்  சேர்ப்பதால் காய்கள் நிறம் மாறாமல் இருக்கும். எலுமிச்சைப்பழ ஜூஸை கொதித்தவுடன் விட்டால் கசப்படிக்காது. சமமாகப் பரவும்.