FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on March 15, 2013, 12:38:04 AM
-
மைதா - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - 1 பின்ச்
முட்டை - 1
எண்ணை - சிறிது
ஃபில்லிங்கிற்கு
===========
சாசேஜ் - 6 வில்லைகளாக நறுக்கியது
வெங்காயம் - 1
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முதலில் மைதாவை தண்ணீர்,உப்பு சேர்த்து தோசை மாவை விட சிறிது நீர்க்க கரைத்துக் கொள்ளவும் ஆப்ப மாவு போல நீர்த்தும் இருக்கக் கூடாது
முட்டையை அடித்து தனியே வைக்கவும்
1 ஸ்பூன் எண்ணை கயவைத்து வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை வதக்கி சாசேஜை சேர்த்து நன்கு வதக்கவும்
மிளகு தூள் சேர்த்து இறக்கவும்
ஒரு பரந்த நான் ஸ்டிக் பேனை காயவைத்து சூடேறியதும் மைதா தோசை கலவையை ஊற்றி சுழற்றவும்
அது வேகும் முமுன்பே3 ஸ்பூன் சாசேஜ் கலவையை பரவலாக வைக்கவும்
அதன் மேல் முட்டை கலவையை ஸ்பூனில் எடுத்து தேய்த்து விட்டால் கலவை ஒட்டிக் கொள்ளும்
ஓரங்களில் எண்ணை சேர்க்கவும்
பிறகு மூடி வைத்து வெந்ததும் பாதியாக மடித்து விடவும்
இப்போது மடித்த தோசை போக மீதம் பாதி இடம் காலியாக இருக்கும் அதில் மைதா தோசை கலவையை பரவலாக ஊற்றி அதே போல் சாசேஜ் கலவையை பரப்பி முட்டை தேய்த்து வைக்கவும்
பிறகு முன்னமே மடக்கிய தோசையினை மடித்து பிறகு ஊற்றிய தோசையின் மேல் மடிக்கவும்
இதே முறையில் இரண்டு மூன்று லேயர்களாக செய்யலாம் அதற்கு மேலும் செய்யலாம்
அல்லது வெறுமனே ஒரு லேயராக மட்டும் சுலபமாக செய்தும் எடுக்கலாம்
ஆனால் பக்குவமாக திருப்பி போடாவிட்டால் எல்லா லேயரும் ஒட்டுமொத்தமாக கழண்டு விழவும் வாய்ப்புண்டு
Note:
இதே முறையில் சிக்கன் கவலை,வெஜிடபிள் கலவை,முட்டை கலவை ,சோயா மீல் மசாலா கூட சேர்த்து செய்து எடுக்கலாம்