FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on March 15, 2013, 12:37:05 AM
-
மீன் தலை- 1 (மீடியம் சைஸ் சங்கரா அல்லது ஆவோலி மீன் தலை)
வெண்டைக்காய்- 3
கத்திரிக்காய்- 1(சிறியது) (நீளமான வகை கத்திரிக்காய் சுவையாக இருக்கும்)
தக்காளி- 1
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
புளி- நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள்- 1மேசைக்கரண்டி (காரத்துக்கு ஏற்ப)
தனியா தூள்- ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
வறுத்து பொடித்த சீரக பொடி- 1தேக்கரண்டி
பெருஞ்சீரக பொடி- 1தேக்கரண்டி
வறுத்து பொடித்த வெந்தயம்- 1/4தேக்கரண்டி
எண்ணெய்- 2மேசைக்கரண்டி
கெட்டி தேங்காய் பால்- 1/4 கப்
கடுகு- 1/2தேக்கரண்டி
கறிவேப்பிலை- 3இனுக்கு
உப்பு- தேவையான அளவு
சற்று பெரிய சைஸ் மீனின் தலையை சுத்தம் செய்து வைக்கவும்.
வாணலியில் 1மேசைக்கரண்டி எண்ணெய் சூடாக்கி நீளமாக வெட்டிய வெண்டைக்காய், கத்திரிக்காயை தனித்தனியே 1நிமிடம் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயோடு மேலும் 1மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கி கடுகு கறிவேப்பிலை தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வெந்தய பொடி தவிர மற்ற பொடிவகைகள் எல்லாம் சேர்த்து மேலும் 2நிமிடம் வதக்கி புளிக்கரைசல், உப்பு, 1கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்ததும் சுத்தம் செய்த மீன் தலையை சேர்க்கவும்.
5நிமிடம் கழித்து மீன் தலையை பக்குவமாக உடைந்து விடாமல் திருப்பி விடவும்.
மீண்டும் 5நிமிடம் கொதித்ததும் சிறு தீயில் வைத்து தேங்காய் பால், வதக்கிய வெண்டைக்காய், கத்திரிக்காய் சேர்த்து சிறுதீயில் வைத்து மேலும் 5நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியாக வெந்தயப்பொடி தூவி இறக்கவும்.
சுவையான ஃபிஷ் ஹெட் கறி தயார்.
Note:
சிங்கப்பூரின் பிரபலமான இந்திய உணவு வகைகளில் ஃபிஷ் ஹெட் கறிக்கு முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். இது எனக்குப் பிடித்த முறை.