உணவில் உப்பின் அளவை குறைத்தால் இதயநோய் எச்சரிக்கை தகவல்!!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F486547_353841238054716_1307992443_n.jpg&hash=2ad856a4d99f2d82597cff4e87aad2f12a224359) (http://www.friendstamilchat.com)
குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயத் தொடர்பான நோய்கள் வரும் என சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு அதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது என்ற கருத்து மருத்துவர்களிடையே உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களுடன் வரும் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுவர்.
ஆனால், மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக அவ்வாறு உப்பைக் குறைத்துக்கொள்வதே மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் பெரிய வெடிகுண்டை வீசியுள்ளது.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளஹ்டு.
இந்த ஆய்வு தொடர்பாக மருத்துவ ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் கூறுகையில், "உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
"நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்" என்று இருதய நிபுணர்கள் சங்கத்தின் அறிவியல் ஆலோசகர் கெய்த் பெர்டிணாண்ட் தெரிவித்துள்ளார். இது மேற்படி ஆய்வு முடிவிற்குச் சாதகமானதாகவே உள்ளது.
அதே சமயம், "உணவில் உப்பைக் குறைப்பதால் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை" என்று பேராசிரியர் கிரஹாம் மெக்கிரிகோர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருந்தாலும் உணவில் தொடர்ச்சியாக உப்பின் அளவினைக் குறைத்துக் கொண்டு வருவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதில்லை என்பது மட்டும் உறுதி. அவரவர் உடல் எடைக்கேற்ப, தினசரி ஒரு குறிப்பிட்ட அளவாவது உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. —