நக அழகிற்கு எளிய குறிப்புகள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FMar%2Feedbcbf7-c12d-48ca-b70f-66cc55512ccc_S_secvpf.gif&hash=008e0e51c2eed20c1a862b122c9d2b3148178c78)
நல்ல ஆரோக்கியத்துடனும், பளபளப்புடனும் தென்படும் நகங்கள், கைகளுக்கு கவர்ச்சி தரும். மனித உடம்பின் ஆரோக்கியம் நகங்களில் தென்படும். நல்ல ஆரோக்கியமுடைய நகம், இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். உடம்பில் இரும்புச் சத்துக் குறைவாக இருந்தால், நகங்கள் நிறத்தை இழந்து, வெளிறி விடும்
நக எனாமல் பூசிக் கொண்டால், நகங்கள் நன்கு தோற்றமளிக்கும். தண்ணீராலும் மற்றும் வேறு கறைகளாலும் பாதிக்கப்படாமலும் இருக்கும். நகப் பூச்சை இளக்குவதற்கு, நகப் பூச்சு ரிமூவரைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நகத்திலிட்ட பூச்சு உரிந்து போய்விடும். நக எனாமல் காய்ந்த பின் ஒருமுறை லேசாக, "கிளியர் நெயில் வார்னிஷ்' பூச வேண்டும். டிப்ஸ்..
• நகத்தை அஸ்ட்ரின்ஜென்ட் லோஷன் பஞ்சால் துடைத்து, அதன் பிறகு நகப் பூச்சை போட வேண்டும். நகத்தில் ஈரம் இருக்கும் பொழுது, பூச்சு போடக் கூடாது.
• நக பாலிஷ்சை போடுவதற்கு முன், ஒரு கோட், "கிளியர் வார்னீஷ்' தடவ வேண்டும். வார்னீஷ் காய்ந்த பிறகு நக பாலிஷ்சை பூச வேண்டும். நக பாலிஷ் விரைவில் உதிராதிருக்க கிளியர் வார்னீஷ் உதவும்.
• நக பாலிஷ் அடர்த்தியாக போடக் கூடாது. இரண்டு அல்லது மூன்று தடவை லேசாக பூச வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு தான் மறுமுறை பூச வேண்டும்.
• நகத்திற்கு நக பாலிஷ் போடுவதற்கு முன், நகக் கண்களில் கொஞ்சம் வாசலினோ அல்லது கோல்டு கிரீமோ போட வேண்டும். நக பாலிஷ் நன்கு உலர்ந்த பின், வாசலினை துடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் நக பாலிஷ் நகக் கண்களில் படாமல் தடுக்க முடியும்.
• நக பாலிஷ் நகத்திற்கு போடும் போது, நகக் கண்களின் இரு புறத்திலும் ஒரு மில்லி மீட்டர் இடைவெளி விட்டு பட்டையாக போட வேண்டும். இது, நகங்களின் நீளம் கூடுதலாகத் தோற்றமளிக்க உதவும்.
• நக எனாமல் பூசிக் கொண்டால், நகங்கள் நன்கு தோற்றமளிக்கும். தண்ணீராலும் மற்றும் வேறு கறைகளாலும் பாதிக்கப்படாமலும் இருக்கும்.
• நக பாலிஷ்சை இளக்குவதற்கு, நக பாலிஷ் ரிமூவரைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நகத்திலிட்ட நக பாலிஷ் உரிந்து போய்விடும்.