FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on March 10, 2013, 11:49:07 PM
-
நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
பெண்ணின் இலக்கணமாம்
நிரந்து நடந்தால் திமிர்
நேர்கொண்டு பார்த்தால்
வெட்கம் அற்றவள்
பாரதியே பார் இந்த சதியே ..
காலம் காலமாய்
பெண்ணின் கனவுகளை
காவு கொண்டவர் தாம்
கண்ணியமாக
பெண்கள் தினத்தை பற்றி
வெகுவாக சொல்கிறார்கள்
எத்தனை பெண்களுக்கு தெரியும்
இன்று தமக்குரிய நாள் என்று ..?
ஓடி ஆடி களைத்து ஓய்ந்தவளுக்கு
ஒரு மிடறு தண்ணீர்
யாரவது இன்று கொடுத்தீர்களா ?
குழம்புக்கு புளி இல்லை
சோறுக்கு உப்பில்லை என்பீர்
துப்புக் கேட்டவரே ...
தாயை தாயக பார்க்கும் நீங்கள்
மனைவியை பேயாய் பார்பதேனோ ?
பெண்ணுக்கு எதிரி பெண்தான்
பெண்மையை போற்ற சொல்வதில்
பெரிதாய் குறை காண ஒன்றில்லை
பெண்மை என்பதை இனம் கண்டால்தானே
நீவீர் பெண் என்பவளை மதிக்க .
மாவு அட்டும் அம்மி கல்லு அவள்
அதனால்தான் எதுவென்றாலும்
உறைக்காது என்று உளறி கொட்டுகின்றனர்
வக்கிர எண்ணம் கொண்ட வாழ்க்கை துணைகள் .
துவைத்து போடும் வாஷிங் மிசின் அவள்
அதனால்தான் தானோ
உங்கள் அழுக்கெல்லாம் அவளால்
தினம் தினம் அகற்றப் படுகிறது ..
கூலி இல்லா சமையல் காரி இவள்
தாலி என்று வேலி போட்டு
கேலி பேசி வருத்துகின்றீர்கள் .
பெண்ணாய் பிறந்ததானலோ
ஆண் கொள்ளும் போக பொருள் ஆனாள் ?
வன் புணர்வு கொள்ளும் வக்கிரங்களே
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்
உங்களை உலகுக்கு தந்த வாசல் ஒன்றை
உருக்குலைப்பது உமக்கு தெரியும் .
பெண்கள் பிரதமராகலாம்
வீராங்கனைகலாகலாம்
வெற்றி வாகை சூடும் முயற்சியாலர்ககலாம்
வீடு கூட்டும் ஆயா ஆகலாம்
விளையாடும் குழந்தை ஆகலாம்
மைக் பிடிக்கும் பேச்சாளர் ஆகலாம்
கவிதை புனையும் கற்பனா சக்தி ஆகலாம்
கற்பென்று வந்துவிட்டால்
கப்பென்று ஓடி ஒளியும்
பெண்கள் தான் இவர்கள் ...
ஆயுதம் செய்வோம்
அதில் ஆளுமை வெல்வோம்
கூடி களித்திடும் கூத்தியர் மத்தியில்
ஆடி திரிந்திடும் ஆண்மையை அறுப்போம் .
காவியம் செய்வோம் அதில் ஓவியம் ஆவோம்
காத்திடும் ஆடவர்க்கு எல்லாம்
கணம் சூக்குமம் ஆவோம் .
வாக்கது கொள்வோம்
வாய்மையே வெல்வோம்
சாக்காடு வரினும்
பெண்மை சாகாது வாழ்வோம் .