FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on October 08, 2011, 03:51:08 PM

Title: அமைதிக்கான நோபல் பரிசு 3 பெண்களுக்கு
Post by: ஸ்ருதி on October 08, 2011, 03:51:08 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.koodal.com%2Fnews%2F2011%2Foctober%2F10-8-2011-1-johnson-sirleaf--gbowee--karma.jpg&hash=aca0a06b1e740fca84437f748d498c8842ca0195)
அமைதிக்கான நோபல் பரிசு 3 பெண்களுக்கு கிடைத்து இருக்கிறது. இவர்கள், பெண்களின் உரிமைக்காக போராடியவர்கள்.

உலகத்தலைவர்களில் அமைதிக்காக போராடும் தலைவர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு, அமைதிக்கான நோபல் பரிசை ஆண்டு தோறும் சுவீடன் நாட்டின் நோபல் கமிட்டி வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று அமைதிக்கான நோபல் பரிசு, 3 பெண்களுக்கு கூட்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பரிசுக்குரிய 3 பெண்கள் பற்றிய விவரம் வருமாறு:-

1. எல்லின் ஜான்சன் சர்லீப் : இவர் லைபீரியா நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். 72 வயதான இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ஆப்பிரிக்க நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண் ஜனாதிபதி இவரே. இவர் இந்த மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற அரசு எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டும் சர்லீப் மீது இருக்கிறது. என்றாலும் இந்த குற்றச்சாட்டை நோபல் கமிட்டி புறக்கணித்து, அவருக்கு பரிசை அளிக்கிறது.

2. லேமாக் கோவீ: இவரும் லைபீரியா நாட்டை சேர்ந்தவர். பெண்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை திறம்பட செய்தவர். கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்கள் அடங்கிய குழுவை அமைத்து போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவினார். மேலும் போர் என்ற பெயரில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து போராடினார். இதில் வெற்றியும் பெற்றார். 2009-ம் ஆண்டு இவருக்கு 'மிகவும் தைரியசாலியான பெண்' என்ற பட்டம் கிடைத்தது.

3. தவாகுல் கர்மான். ஏமன் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 32. இவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெண் எழுத்தாளர்களை ஒன்றாக திரட்டி, மன்னர் அலி அப்துல்லா சாலேக்கு எதிராக போராடினார். பெண்களின் உரிமையை நிலை நாட்டினார். இவரது தந்தை மன்னரின் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தார். என்றாலும் அவர் தனது போராட்டத்தை விட்டு விடவில்லை. பெண்களின் உரிமைக்காக போராடிய இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று பெண்களுக்கும் கூட்டாக நோபல் பரிசை அறிவித்த நோபல் கமிட்டி, "உலகில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் தழைக்கும். இருபாலாருக்கும் சம வாய்ப்புகளும், சம அந்தஸ்தும் கொடுக்கப்பட வேண்டும்" என்று கூறி இருக்கிறது.

ஏமன் நாட்டை சேர்ந்த தவாகுல் கர்மான், தனக்கு பரிசு கிடைத்து இருப்பது பற்றி கூறுகையில், "இந்த பரிசை, ஏமன் நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கும், சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். ஏமன் நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும். நவீன ஏமன் நாட்டில் பெண்களுக்கு இன்னும் முழு உரிமைகள் பெறும் வரை ஓய மாட்டோம். முழு வெற்றி பெறும் வரை அமைதியான முறையில் போராடுவோம்" என்று தெரிவித்தார்.
Title: Re: அமைதிக்கான நோபல் பரிசு 3 பெண்களுக்கு
Post by: Global Angel on October 08, 2011, 06:17:16 PM
koodiya seekram kadalaikana nobal parisu gab kum , nokkaikaana nobal muttaikkumkidaikum ;D ;D ;D ;D ;D