FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on October 08, 2011, 01:59:14 PM
-
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.
மருத்துவ குணங்கள்
கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.
கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
-
nalla payanulla thagaval... ;)
-
Nandrigal...!