FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 07, 2011, 07:26:19 PM

Title: மரண தண்டனை எனக்கா???
Post by: ஸ்ருதி on October 07, 2011, 07:26:19 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-pv9HgIGrOuA%2FTc6VUpbNHXI%2FAAAAAAAAABc%2FsLv5DlKsyRA%2Fs1600%2Fanti-abortion.png&hash=210fa41be4ef911a78866ca1c79b67b4110cc0dd)

மகிழ்ச்சியோடு நீ!!!
இருட்டுக்குள்தான்
சிலகாலம்
என தெரிந்தும்
மகிழ்ந்தேன் நானும்....
நான் செய்யும்
சிறு குறும்புகளை
நீ ரசிப்பாய் என்று..
நினைத்து இருந்தேன்..
எனக்காக ஆசைஆசையாக
நீ உண்ணும் உணவுக்காய்
காத்திருந்தேன்......

என்னை பற்றியே
உன் நினைவு இருக்கும்என்று
சந்தோஷத்தில் இருந்தேன்....

உன்னையே உருக்கி
என்னை உருவாக்கும்
உன்னை கண்டு
இன்முகம் மகிழ்ந்து
புன்னகை சிந்த காத்து இருந்தேன்....

உன் இரத்ததையே
உயிராக தரும்
உன்னை காண துடித்தேன்...
ஆனால்-நீயோ
தப்பி தவறாக
உருவானது என்று
உன் கருவறையையே
என் கல்லறையாக்க
துணிவாய்
என்று நினைக்கவில்லை

தவறாக உருவானேனா??
என்ன கொடுமை!!
தவறு செய்தது நீ..
மரண தண்டனை எனக்கா???

பிள்ளை வரும் கேட்பவர்
பல பேர் இருக்க தப்பி
உன் கருவில் உருவானது
தவறு தான்.....

உன்னை எட்டி
உதைத்தால் வலிக்கும்
என்று என்னை தூக்கி
வீச துணிந்தாயோ!!!
உதைக்கமாட்டேன் அம்மா
எனக்கு வாழ்வு கொடு!!!!

அம்மா!!!
இந்த வார்த்தை இனி
உன்னை கூப்பிட
உலகத்துக்கு வர போவது
இல்லை....

எல்லா தவறும் போகட்டும்..
என்னை அழிக்க
நினைப்பதையாவது
முறையோடு செய்துவிடு....
முறையில்லாமல்
அதையும் செய்து
என்னோடு நீயும்
மாண்டு விடாதே!!!!

என் கண்கள் கலங்குவதை
உன்னால் காணமுடியாது...
கருவிலே எனக்கு ஏன்
இந்த தூக்கு தண்டனை அம்மா!!!!

Title: Re: மரண தண்டனை எனக்கா???
Post by: Global Angel on October 07, 2011, 08:30:10 PM
:'( nice kavithaidi..... thaai matumala sila thaaikalal  sisukalumthan kasta padukiraarkal  >:(
Title: Re: மரண தண்டனை எனக்கா???
Post by: ஸ்ருதி on October 09, 2011, 06:31:41 PM
adiye unnai thavira vera yarum inga responce panrathu illai di poems ku...
ennamo ponga
Title: Re: மரண தண்டனை எனக்கா???
Post by: RemO on October 10, 2011, 03:19:07 AM
பிள்ளை வரும் கேட்பவர்
பல பேர் இருக்க தப்பி

Shruthi kavithai nalarukku
Tamila eluthum pothu ipadi spelling mistak varama parthukonka

Title: Re: மரண தண்டனை எனக்கா???
Post by: RemO on October 10, 2011, 03:20:26 AM
adiye unnai thavira vera yarum inga responce panrathu illai di poems ku...
ennamo ponga


Ha ha dont feel
ini nan vanthutenla