FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on March 02, 2013, 10:53:53 AM

Title: வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!
Post by: kanmani on March 02, 2013, 10:53:53 AM
காலை உணவு உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் காலை உணவானது நீண்ட இடைவெளிக்குப் பின் உண்பதால், உடலில் அன்றைய நாளுக்கு தேவையான சக்தியானது , காலை உணவை உண்ட பின்பு தான் கிடைக்கிறது. ஆகவே எப்பொழுது வேண்டுமானாலும் உண்ணாமல் இருக்கலாம். ஆனால் காலையில் மட்டும் உண்ணாமல் இருக்க கூடாது.

அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்காக நிறைய ரெசிபிக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எளிமையாக செய்யும் வண்ணமும், பலருக்கும் பிடித்தது என்று சொன்னால் சாண்ட்விச். இத்தகைய சாண்ட்விச் காலை உணவாக மட்டுமின்றி, மாலையில் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடக்கூடியது.

சாண்ட்விச் ரெசிபிக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில எளிய வகை சாண்ட்விச் ரெசிபிக்களைப் படித்து பார்த்து, பிடித்ததை வீட்டில் சமைத்து சாப்பிடுவோமா!!!


Title: Re: வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!
Post by: kanmani on March 02, 2013, 10:59:07 AM
காளான் பன்னீர் சாண்ட்விச்

நிறைய பேருக்கு சாண்ட்விச் என்றால் மிகவும் பிடிக்கும். சிலர் அதனை காலை உணவாகவும் சாப்பிடுவார்கள். அதிலும் சாண்ட்விச்சில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் இதில் சைவம் மற்றும் அசைவம் என்று இரண்டிலுமே உள்ளன. ஆனால் சைவ பிரியர்களுக்கு, அவைச உணவின் சுவையை கொடுக்கும் வகையில் சைவத்தில் காளான் உள்ளது.

எனவே அத்தகைய காளான் மற்றும் பன்னீரை வைத்து சுவையான முறையில் சாண்ட்விச் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைக்கும். சரி, இப்போது அத்தகைய காளான் பன்னீர் சாண்ட்விச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

 பிரட் - 6 துண்டு
காளான் - 8 (நறுக்கியது)
பன்னீர் - 100 கிராம் (துருவியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
தக்காளி - 2 (சிறியது மற்றும் நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 3
மிளகு - 6
ஓமம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், ஓமம் மற்றும் கிராம்பு போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் வெங்காயம் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் பன்னீர் மற்றும் காளான் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்து இறக்க வேண்டும்.

அடுத்து, பிரட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து, அதில் இந்த காளான் கலவையை வைத்து,
மற்றோரு பிரட்டை அதன் மேல் வைத்து, இரண்டாக நறுக்கி பரிமாற வேண்டும்.

இப்போது சுவையான காளான் பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!

Title: Re: வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!
Post by: kanmani on March 02, 2013, 11:01:09 AM
மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச்


பொதுவாக சாண்ட்விச்சை கடைகளில் சாப்பிட்டால், அவற்றில் நிறைய கொழுப்புக்கள், கலோரிகள் போன்றவை இருக்கும். ஆனால் அவற்றையே வீட்டிலேயே பிடித்தவாறு, வேண்டிய காய்கறிகள் வைத்து சமைத்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும். குறிப்பாக இந்த மாதிரியான சாண்ட்விச் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

எனவே இதனை காலை வேளையில் செய்து கொடுத்தால், அவர்கள் உடல் நலம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் சாண்ட்விச்சில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச்சை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போமா!!!
 தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் - 8 (டோஸ்ட் செய்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
 சீஸ் - 1/2 கப் (துருவியது)
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கேரட்டை போட்டு வதக்க வேண்டும்.

 பின்னர் அதில் மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு 3-4 நிமிடம் வதக்கி, இறக்கி விட வேண்டும். பிறகு அதில் துருவிய சீஸை போட்டு, ஒரு முறை கிளறி விட வேண்டும்.

 பின்பு பிரட்டை வைத்து, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.

பின் அந்த சாண்ட்விச்சை ஒரு பேனில் லேசாக எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது சத்தான மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச் ரெடி!!!


Title: Re: வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!
Post by: kanmani on March 02, 2013, 11:03:29 AM
ஃபுரூட் சாண்ட்விச்

தற்போது சாண்ட்விச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் சாண்ட்விச் மூலம் உடலை ஆரோக்கியமாக வைக்கலாம். எப்படியெனில் சில சாண்ட்விச்-களை பிடித்த காய்கறிகள், பழங்களை வைத்து, அடுப்பில்லாமல் தயார் செய்து சாப்பிடலாம்.

 அதிலும் குழந்தைகளுக்கு காலை வேளையில் பழங்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் பிரட் துண்டுகள் இருந்தால், அவற்றை வைத்து, ஒரு சாண்ட்விச் செய்து கொடுக்கலாம். இப்போது அந்த மாதிரியான சாண்ட்விச்-களை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 6
வாழைப்பழம் - 2 (நறுக்கியது)
மாதுளை விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் - 1 (நறுக்கியது)
அன்னாசி ஜாம் - 1/2 கப்
கருப்பு உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/2 கப்
ஸ்ட்ராபெர்ரி - 3-4 (நறுக்கியது)

 செய்முறை:

 முதலில் பிரட் துண்டுகளின் பக்கவாட்டில் உள்ளவற்றை வெட்டி எடுத்துவிட வேண்டும்.

பின்னர் பிரட்டின் ஒரு பக்கத்தில் வெண்ணெயையும், மறுபக்கத்தில் அன்னாசி ஜாமையும் தடவி, ஒரு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் மாதுளை விதைகளை, வெண்ணெய் தடவிய பக்கத்தில் அழகாக வைக்க வேண்டும்.

பின்பு அதன் மேல் கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் மிளகு தூளை தூவ வேண்டும்.

 பின் அந்த பிரட் துண்டுகளை, வரிசையாக அடுக்கி வைத்து, இரண்டாக வெட்டி, ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரித்து பரிமாற வேண்டும்.

 இப்போது அருமையான ஃபுரூட் சாண்விட்ச் ரெடி!!!


Title: Re: வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!
Post by: kanmani on March 02, 2013, 11:05:06 AM
ஈஸியான... முட்டை சாண்விட்ச்[/b

நிறைய பேர் காலை நேரத்தில் சாப்பிட நேரம் இல்லை என்பதற்காக எதையும் சாப்பிடாமல், ஆபிஸிற்கு செல்கின்றனர். ஆனால் அவ்வாறு செல்வதால் உடல் நிலை தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது ஈஸியாக செய்து சாப்பிடும் வகையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் முட்டையை வைத்து, ஒரு சாண்விட்ச் செய்து சாப்பிடலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

 முட்டை - 4
பிரட் - 4 துண்டுகள்
 தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
 கொத்தமல்லி - 1/2 கப்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பைப் போட்டு வதக்கவும்.

அதற்குள் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, பாலையும் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகுத் தூள், போட்டு, கலந்து கொள்ளவும்.

 வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஊற்றி, கிளறவும். அவ்வாறு கிளறும் போது தீயை சற்று குறைவில் வைத்து, சிறிது நேரம் வேக விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

 இப்போது ஒரு பிரட் துண்டை எடுத்துக் கொண்டு, அதில் வெண்ணெயை தடவி, முட்டையில் பாதியை வைத்து, மற்றொரு பிரட்டிலும் வெண்ணெயை தடவி, மூட வேண்டும். இதேப் போல் மற்ற இரண்டு பிரட்களையும் செய்ய வேண்டும்.

 இப்போது ஈஸியான முட்டை சாண்விட்ச் ரெடி!!! இதனை தக்காளி சாஸ்-உடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.


Title: Re: வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!
Post by: kanmani on March 02, 2013, 11:08:46 AM
குடைமிளகாய் சான்விட்ச்!!!

காலை உணவு தான் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் காலை உணவானது நீண்ட இடைவெளிக்குப் பின் உண்பதால், உடலில் அன்றைய நாளுக்கு தேவையான சக்தியானது அப்போது தான் கிடைக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் உண்ணாமல் இருக்கலாம்.

ஆனால் காலையில் மட்டும் உண்ணாமல் இருக்க கூடாது. அத்தகைய காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு சான்விட் தான் மிகவும் சிறந்தது. இப்போது அந்த சான்விட்சில் குடைமிளகாய் சான்விட்ச் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள் :

குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பிரட் - 4-8
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சீஸ் - 2-3
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் குடைமிளகாய், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரட்-ன் முனைகளை வெட்டி அகற்றி விடவும்.
2. பின் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது வெண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு சிறிது உப்பைத் தூவி, 2 நிமிடம் வதக்கி இறக்கி விடவும்.
3. பிறகு பிரட்-ன் இரண்டு புறமும் வெண்ணெயை தடவி, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைக்கவும்.
4. பின் அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து, மிளகுத்தூள் மற்றும் உப்பை தூவவும்.
5. ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, அதில் இந்த பிரட்-ஐ வைத்து சிறிது வெண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சூடு செய்யவும். இப்போது சூடான சுவையான குடைமிளகாய் சான்விட்ச் ரெடி!!!

 வேண்டுமென்றால் அழகுக்காக இதன்மேல் சிறிது முட்டைகோஸை நறுக்கி தூவி, தக்காளி சாஸ் விட்டு சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள், அதில் முட்டையை ஆம்லெட் செய்தோ அல்லது பொரியல் செய்து வைத்தோ சாப்பிடலாம். மேலும் வேறு எதாவது காய்கறிகள் சேர்க்க வேண்டுமென்றாலும், காய்கறிகளை எண்ணெயில் வறுத்து பயன்படுத்தலாம். பிரட்டில் வெள்ளை பிரட்டிற்கு பதிலாக ப்ரௌன் பிரட்டை பயன்படுத்தலாம்.

ஏனெனில் ப்ரௌன் பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.

Title: Re: வித்தியாசமான சுவையுடைய சாண்ட்விச் ரெசிபிக்கள்!!!
Post by: kanmani on March 02, 2013, 11:09:46 AM
சிக்கன் சாண்ட்விச்

சிக்கனில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி இதில் உடலுக்கு வேண்டிய நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. இதுவரை இத்தகைய சிக்கனை வைத்து கிரேவி, குழம்பு, வறுவல், 65 என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். சிலருக்கு சிக்கனை வைத்து சாண்ட்விச் செய்தால் மிகவும் பிடிக்கும்.

ஆனால் அதனை கடைகளில் மட்டும் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது அதனை வீட்டிலேயே ஈஸியாக சுவையான ருசியில் செய்து சாப்பிடலாம். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

tasty chicken sandwich
தேவையான பொருட்கள்:

பிரட் - 6 துண்டுகள்
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் (வேக வைத்து, கொத்தியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - தேவையான அளவு
வெங்காயம் - 1
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி, கொத்திய சிக்கன், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.

பின்னர் பிரட் துண்டுகளை எடுத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி, அதன்மேல் தக்காளி சாஸ் தடவி, பின் ஒரு பிரட்டின் நடுவில் சிக்கனை வைத்து, வெண்ணெய் தடவிய மற்றொரு பிரட்டை வைத்து பரிமாறவும்.

இப்போது சுவையான சிக்கன் சாண்ட்விச் ரெடி!!!