FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 02, 2013, 08:06:46 AM

Title: ~ அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்...!! ~
Post by: MysteRy on March 02, 2013, 08:06:46 AM
அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்...!!

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/12195_343102005789978_618156921_n.jpg)


1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.

2) கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிருந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது.

3) ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

4) கருமையான உதடு சிவப்பாக - பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.

5) உப்பு கலக்காத வெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து, அதில் ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு வெடிப்பு சரியாகி மென்மையாகும்.