FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 07, 2011, 04:42:21 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm5.static.flickr.com%2F4074%2F4878909626_d4962ea773.jpg&hash=b939b42d0597557e42c4ee13aa93507318070991)
கண்ணாடி மாளிகையில்
பளிங்கு தரையில்
ஊர் மாற்றி
பெயர் மாற்றி
மாரிமுத்து மாரிஸ் ஆகி
வேஷம் போட்டு..
ஏசியும், ஏடிம் கார்டும்,
ஐ-போனும்
ஐ- பாடும்,
மித மிதப்பாய்...
நுனி நாக்கு ஆங்கிலத்தில்
உலகத்தை கட்டிபோட்ட
வியப்பில்
நெஞ்சை நிமிர்த்தி
செல்லும்
வியர்க்காத உழைப்பாளிகள்...
கல் உடைத்து, கல் சுமந்து
கால் வயிறு கஞ்சிற்காக
கல்வி இழந்து
கடின வேளையில்
காலத்தை தள்ளி
வேர்வை உப்பில்
தினமும் குளித்து
கண்ணில் கவலையும்
கனவை கிடப்பில் போட்டு
எதை நோக்கி
எதிர்காலம்??
அயாரது உழைக்கும்
இறைவனாய் பிஞ்சு நெஞ்சங்கள்
கண்ணீரே கண்ணீர் சிந்தும்
உன் உழைப்பை கண்டு..
எது உழைப்பு?? :-\ :-\
-
nalla kavithai ovoru ulaipaaliyum thevaithan... ;)
-
mm...nijamana uzhaipaligal ivarkal thane