-
இன்றைய நவீன உலகில் அனைத்துமே மிகவும் ஃபேஷனாகத் தான் உள்ளது. அதிலும் அந்த ஃபேஷன் உடைகளில் மட்டுமின்றி, மேக்-கப், ஹேர் ஸ்டைல்கள் போன்றவற்றிலும் வந்துவிட்டது. அக்காலத்தில் எல்லாம் ஹேர் ஸ்டைல்களைப் பார்த்தால், கொண்டை, பின்னல்கள் என்பது மட்டும் தான் இருக்கும். அவற்றில் இன்னும் அழகாக இருப்பதற்கு பூக்களை வைத்து அலங்கரித்துக் கொள்வார்கள். இதனால் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, மங்களகரமாகவும் இருக்கும்.
ஆனால் தற்போது அவ்வாறு சென்றால், அனைவரும் ஒரு மாதிரி வித்தியாசமான பார்வையில் பார்ப்பார்கள். எனவே எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல், காலத்திற்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. அதற்காக அரைகுறை ஆடைகளை அணியச் சொல்லவில்லை. நமது பாரம்பரிய ஆடைகளை அணியும் போது, நவீன காலத்திற்கு ஏற்ப, அந்த உடையிலும் நன்கு ஃபேஷனுடன் காணப்பட வேண்டும். அதற்கு வேறு எதுவும் செய்ய வேண்டாம். ஹேர் ஸ்டைல்களை மாற்றினாலே போதுமானது.
சரி, இப்போது அத்தகைய இந்திய பாரம்பரிய உடைகளான சேலை மற்றும் சுடிதார் அணியும் போது, எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல்களை பின்பற்றினால், நன்கு ஃபேஷனுடன் இருக்கும் என்று ஒரு சில ஹேர் ஸ்டைல்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து, எந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு சரியாக இருக்குமோ, அதைப் போட்டு நன்கு அழகாக மற்றவர்களை கவருங்கள்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517105-img-1.jpg&hash=1c264f1a1641e3f3433e9ffd46e79bc06c747f7f)
ஸ்டெப் மற்றும் சுருட்டை
இந்த மாதிரியான ஹேர் ஸ்டைலுக்கு வேறு எதுவும் வேண்டாம், நன்கு அழகான சேலையை அணிந்து, கூந்தலை பின்னாமல், கூந்தலின் முனைகளில் சிறிது ஜெல்லை மட்டும் தடவி, முனைகளை லேசாக சுருட்டி விட்டால் போதுமானது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517133-img-2.jpg&hash=a8bca2be91e4632f5d7ffe339ac588362d7ca54c)
நேரான முடி
பார்ப்பதற்கு சாதாரணமாக காணப்படுவதற்கு, கூந்தலை சீப்பால் சீவிக் கொண்டு, அப்படியே விட்டால், போதும். அதுவே ஒருவித ஸ்டைல் தான். ஆனால் இது உங்களுக்கு பொருந்தினால் மட்டும் பின்பற்றவும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517159-img-3.jpg&hash=8201a2df62f236f30e5864b796296962b377bab0)
குதிரை வால்
நன்கு ஸ்டைலாக இருக்க வேண்டுமெனில், அதற்கு குதிரை வால் சரியாக இருக்கும். அதிலும் போனி டைல் எனப்படும் குதிரை வாலை சற்று மேலே தூக்கிப் போட வேண்டும். இந்த மாதிரியான ஸ்டைல் சேலை மற்றும் சுடிதாருக்கு அருமையாக இருக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517177-img-4.jpg&hash=a08a8c9cffa1d7c23e76070d5fed0d3802e51338)
சின்ன கிளிப் போதுமே!
பாரம்பரிய உடையிலும் அழகாக இருப்பதற்கு, கூந்தலை பின்னாமல், முன்னால் இருக்கும் முடியில் சிறிதை எடுத்துக் கொண்டு, அதற்கு ஒரு சிறிய கிளிப் போட வேண்டும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517197-img-5.jpg&hash=acb7f2045624d706fa0d659ed575f318ec144aaf)
கொண்டை
அக்கால பழக்கமான கொண்டை கூட சேலை அல்லது லெஹெங்காவிற்கு சரியானதாக இருக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517220-img-6.jpg&hash=d0e87e6637d465263f263ff7fc15bd52cea33f1e)
பக்கவாட்டில் முடி
இன்றைய காலத்தில் கூந்தலை பின்னாமல் லூசாக விடுவது தான் ஃபேஷன். அதிலும் அந்த கூந்தலை பின்னாமல் ஒரு பக்கமாக வைப்பது தான், தற்போதைய லேடஸ்ட் ஃபேஷன். இந்த மாதிரியான ஸ்டைலை போட்டு, நல்ல அணிகலன்களை அணிந்தால், அதன் அழகே தனி தான்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517286-img-7.jpg&hash=2df54aa8e8bff1af1f819b9170ba22744b714bbb)
ஸ்டெப் ஹேர்
பாரம்பரிய உடையிலும் சிம்பிளாக தெரிவதற்கு, கூந்தலை ஸ்டெப் கட் செய்து, கூந்தல் முழுவதையும் முன்புறம் எடுத்து விட வேண்டும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517318-img-8.jpg&hash=7133c4fa58cb7c71f8196139d60cd98640ce1250)
ஸ்டெப் மற்றும் சுருட்டை
இந்த ஸ்டைலில் கூந்தலை சுருட்டை செய்து, கோணலாக உச்சி எடுத்து, முன்புறம் எடுத்து விட வேண்டும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517332-img-9.jpg&hash=2607fce5736427720e48e6e9ed08388ab839ae8c)
ஒரு பக்கம் மட்டும் முடி
இதில் கூந்தலை நேராக்கி, அலைப் போன்று காணப்பட லேசாக சுருட்டையாக்கி, கூந்தலின் முக்கால் பாகம் பின்புறமும், கால் பாகத்தை ஒரு பக்கமும் எடுத்துவிட வேண்டும். இதனால் அழகுடன், ஒருவித ஸ்டைலும் தென்படும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F02%2F22-1361517344-img-10.jpg&hash=6f0646a8f8365d0670253b1b37d11de0dfe45e99)
பக்கவாட்டில் சுருட்டை முடி
இந்த ஸ்டைலில் கூந்தலை நேராக்கி, முனையை மட்டும் சுருட்டி விட்டு, கூந்தல் முழுவதையும் முன்புறம் எடுத்துவிட வேண்டும். இந்த ஸ்டைல் சேலை மற்றும் சுடிதார் இரண்டிற்கும் நன்றாக இருக்கும்.