FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on February 25, 2013, 04:05:38 PM
-
பொதுவாக மதிய வேளையில் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சமைக்கும் குழம்பு, மசாலா போன்றவற்றில் சேர்க்கப்படும் காய்கறிகளில் சத்துக்கள் அதிகம் இருக்கும். அத்தகைய காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் சேர்வதற்கு காய்கறிகளை வேக வைத்து சாப்பிட வேண்டும். அதற்கு குழம்பு வைப்பதற்கு சிறந்த முறை என்றால் அது குக்கரில் சமைப்பது தான். இப்போது குக்கரில் காய்கறிகளை வைத்து எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
pressure cooked vegetable curry recipe
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (கழுவி நறுக்கியது)
வெங்காயம் - 2-3 (நறுக்கியது)
பீன்ஸ் - 4-5 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பசலைக் கீரை - 50 கிராம் (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட வேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
பின்பு அதில் பீன்ஸ், பசலைக் கீரை, பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி, மல்லி தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி, தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, கொத்தமல்லி தூவி கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான வெஜிடேபிள் கறி ரெடி!!!