FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 23, 2013, 08:29:30 PM
-
உன்னால்
உன் நினைவுகளால்
உறக்கமிழந்து-என்
உயிர் வாடும் இவ்விரவிலே,
உன் மனம் எங்கோ...?
உண்மை காதலினை
உணராதோ... ?
உதடு பொய் பேசும்..
உள் மனம்
உண்மை பேசுமென்று
உன் மனதிற்கு தெரியாதோ...?
உத்தமனான
உன் முகம் பாராமல்
உறைந்து ஓடும்
உதிரத்தை நீ அறிவாயோ... ?
உன்னதமான தென்றல் மொழியை
உதிர்க்காமல் ஊமையானதால்
உயிரும் சுவாசிக்க மறுப்பதை
உணர்வாயோ... ?
உடலும் உள்ளமும்
உறுதியாய்
உன் வரவையே நினைத்து
உருகி கொண்டிருக்க அதை
உணராமல் நீயும்
உறங்குவதும் என்னை
உதிர்த்து விட நினைப்பதும் ஞாயமாகுமோ..?
உலகத்தில் வாழ்வதும்
உலகமே நீயாய் வாழ்வதும் நானே...
உடனே வந்து விடு-என்
உயிர் பிழைக்க
உத்தரவாதத்தோடு
உரிமை ஒன்றிங்கு தந்து விடு...
-
பிரிக்க நினைக்காதே
என்னுள் கலந்திட்ட உன்னை
ஏனெனில் பிரிவது முதலில்
என் உயிராகத்தான் இருக்கும்...
உன்னை மட்டுமே நினைத்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ இல்லை என்றால் என்
வாழ்க்கை முடிந்துவிடும்
நீ பிரியும் அந்த ஒரு நொடியில்..
பிரிவு என்ற சொல்லே
நமக்கிடையில் இடம்பெற
கூடாது என்று விரும்பிய நான்
இன்று உன் பிரிவையும்
விரும்பி ஏற்கிறேன் நீ
விரும்பி கொடுப்பதால்..
-
romba nalaruku.. பிரிவு என்ற சொல்லே
நமக்கிடையில் இடம்பெற
கூடாது என்று விரும்பிய நான்
இன்று உன் பிரிவையும்
விரும்பி ஏற்கிறேன் நீ
விரும்பி கொடுப்பதால்..
indha varigal miga arumai.. kadhal terigirathu ithil