FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Dharshini on July 14, 2011, 04:51:59 AM

Title: அம்மா சொல் கேள்!
Post by: Dharshini on July 14, 2011, 04:51:59 AM
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.
ஓநாயும் "நண்பா, நண்பா...இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை....." என்று வருத்தத்துடன் கூறியது.
"அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.
"சேச்சே...அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்.
"அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.
"உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை...அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா
Title: Re: அம்மா சொல் கேள்!
Post by: Global Angel on July 14, 2011, 03:23:58 PM
aamdi aama aamadi aama aamadi aama aamadi aama  ;D ;D ;D ;D
Title: Re: அம்மா சொல் கேள்!
Post by: Dharshini on July 14, 2011, 06:32:09 PM
enadi amma va di solura pichu poduvean rascal iru amma kita soli mandai ah udaichu kaila thara solurean
Title: Re: அம்மா சொல் கேள்!
Post by: Global Angel on July 14, 2011, 08:05:54 PM
en andavare ivalukku thamil arivai kodumaiyaa.. athu amma ilai aaaaama.. >:( >:(
Title: Re: அம்மா சொல் கேள்!
Post by: Dharshini on July 14, 2011, 11:36:53 PM
oh aama soniya ok ok free ah vidu ;D ;D