FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 23, 2013, 12:47:03 AM

Title: என்னைக் கொன்று விடு
Post by: Varun on February 23, 2013, 12:47:03 AM
சுவாசமாய் நினைத்து
உன்னை சுவைத்து
சுடுபட்டுப் போன நாட்கள்
போதும் அன்பே..

காதல் தீயில்
கருகிப்போன இதயத்துக்கு
மருந்து போட்டே நகர்கிறது
என் மற்றைய வினாடிகள்..

தொடரும் நிழல் போன்று
உன் நினைவும்..
உளி செதுக்கிய சிற்பமாய்
உன் நாமமும்..
என்னோடு ஒட்டிக்கொண்டன.

பாலைவனத்தில் பட்டமரமாய்
உன்னை சுமந்து கொண்டு
பரிதவித்து நிற்கிறேன்..

கொடிய வறட்சியிலும்
நீ என்னுள் வற்றிப் போகவில்லை.
என் கொடிய நிமிடங்களிலும்
நான் உன்னை கழட்டி ஏறியவில்லை.

ஒருமுறை நிதர்சனமான
மரண வலியையும்,
ஒவ்வொரு வினாடியிலும்
தந்து சென்றவள் நீ..

பெண்ணே!
உன்னிடம் ஒரே விண்ணப்பம்?

என் கண்களின் ஈரம்
வற்றிப்போவதற்க்குள்
என்னைக் கொன்று விடு..
Title: Re: என்னைக் கொன்று விடு
Post by: vimal on February 23, 2013, 01:29:16 PM
அவள் இதயத்தில் ஈரம் இருப்பின்
நிச்சயம் உன் கண்கள் ஈரம் பட
அனுமதிக்கமாட்டாள்!!!

ரொம்ப அழகான கவிதை வருண்...