FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 22, 2013, 02:51:10 AM
-
படுக்கையெல்லாம் தேடி பார்க்கிறேன்
நீயும் நானுமாய் உதிர்த்த - அந்த
உண்ணதக் காதலை...!
நீ கொடுத்து நான் வாங்கிய
அந்த
சூடான் உயிர் மூச்சு - இன்னும்
இதமாய் இனிக்குததடி ...!
சிறுக நீ பேசி
சிதையாமல் சேமித்த
அந்தச் சொற்கள் புதைந்த
தலையணையில் தேடுகிறேன்...!
என்னையணைந்து உள்வாங்கி
நீ சிந்தியப் புன்னகை இதழ்களை
கசங்காமல் காற்றோடு தேடுகிறேன்...!
உன் ஸ்பரிசத்தின் வாசம்
பரவிக்கிடக்கும்
படுக்கை விரிப்பினில் தேடுகிறேன்...!
உன் இதழ் பதித்த
முத்தத்தின் ஈரத்தை
முகம் கழுவாமல் சேமிக்கிறேன்...!
உன் விரல் கோதிய
என் தலைமுடியின் அழகினை
களைக்காமல் காவல் காக்கிறேன்...!
உன் உள்ளங்கை பதிந்த
என் மார்புபின் பரப்பில்
உன் ரேகைகளில்
வாழ்வின் வரிகளை வாசிக்கிறேன்...!
நீ தந்த ஒருத்துளி உயிரில்
நான் உயிர் பெற்று
என்னுள் உயிர் கொண்டேன்...!
இத்தனை இனிமையா உன்மேல்
நான் கொண்ட காதல்..!
உன் இதயம் சுமக்கும்
இன்பம் இதுவே என அறிவேன்...!
தூர இருந்து
என்னை துளைக்கத் தெரியாதவல் - நீ
அருகிலிருந்து
என்னை இன்பத்தில் சம்பவிக்கச் செய்கிறாய்...!
வாழ்கையின் அர்த்தங்களை
அழகாக்கிவிட்டு
என்னுள் நீ தங்கிப்போவதுதான்
வாழ்கையா..?
வாழ்வில் இதுதான் காதலா..?