FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on February 21, 2013, 10:19:54 AM

Title: கர்ப்பமாக இருக்கும் போது என்ன குழந்தைன்னு தெரிய வேண்டுமா?
Post by: kanmani on February 21, 2013, 10:19:54 AM
கர்ப்பமாக இருக்கும் போது பெண்களின் வயிறு ஒவ்வொரு மாதமும் வளர்ச்சியடையும். அவ்வாறு வளர்ச்சி அடையும் போது, சில அனுபவமுள்ள பெண்கள் கர்ப்பிணிகளின் வயிற்றை வைத்தே, வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை சரியாக சொல்வார்கள். மேலும் இவ்வாறு கருவில் உள்ள சிசு என்ன பாலினம் என்பதை, கர்ப்பிணிகளின் வயிற்றை வைத்து கண்டறிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இவ்வாறு கண்டறிந்து சொல்வதற்கு பெம்பாலும் முன்னோர்கள் சொல்லும் ஒருவித கட்டுக்கதைகளாக தான் இருக்கும். மேலும் இவ்வாறு வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிய வடிவம் மற்றும் அளவு தான் முக்கிய காரணம்.

 அவற்றில் ஒருசில மட்டும் தான் உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது எந்த மாதிரியான வடிவத்தில் மற்றும் அளவில் வயிறு இருந்தால், எந்த மாதிரியான குழந்தை பிறக்கும் என்பதைப் பற்றிய கட்டுக்கதைகளையும், அதனைப் பற்றிய உண்மையையும் பார்ப்போமா!!!

பெரிய வயிறு:

 பெண் குழந்தை கர்ப்பமாக இருக்கும் போது வயிறானது நன்கு பெரியதாக, பூசணிக்காய் போன்று வட்டமாக இருந்தால், அது பெண் குழந்தை என்று அர்த்தம். ஏனெனில் வயிற்றில் இருக்கும் பெண் சிசுவின் நிலை தான், இத்தகைய பெரிய வயிற்றுக்கு காரணம்.

சிறிய வயிறு:

ஆண் குழந்தை கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக இருப்பதற்கு, வயிற்றில் ஆண் சிசு இருப்பதே ஆகும். ஆனால் இந்த இரண்டு கதைகளுமே முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

வயிற்றின் வடிவ மாற்றமா?

 எப்போது வயிற்றின் வடிவமானது அடிக்கடி மாறுகிறதோ, அதற்கு குழந்தை நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும் என்று அர்த்தம். ஏனெனில் வயிற்றில் உள்ள குழந்தையானது கருப்பையில் நகர்கிறதோ, அப்போது வயிற்றின் வடிவமும் மாறும்.

சிறிய வயிறா?

ஆண் குழந்தை முன்னோர்களின் கட்டுக்கதைகளின் படி, சிறிய வயிறாக இருந்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்வதற்கு காரணம், ஆண் சிசுவானது எப்போது கருப்பையின் கீழ்ப்பகுதியின் ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே தான் வயிறு சிறியதாக உள்ளது.

பெரிய வயிறா?

 பெண் குழந்தை கர்ப்பத்தின் போது வயிறானது பெரியதாக இருப்பதற்கு, வயிற்றில் உள்ள பெண் சிசுவானது பொதுவாக கருப்பையின் மேல் பகுதியில் ஒட்டிக் கொண்டிருப்பதே ஆகும்.

இறுக்கமான வயிறா?

ஆண் குழந்தை ஒரு வேளை வயிறானது ஏழாம் மாதத்திற்கு மேல், ஒருவித இறுக்கத்தடன் இருந்தால், வயிற்றில் ஆண் சிசு உள்ளது என்று அர்த்தம். இதற்கு எந்த ஒரு நிரூபணமும் இல்லை. இவை அனைத்தும் நாட்டுப்புறத்தில் உள்ள பெண்களின் அனுபவத்தைப் பொறுத்ததே ஆகும். ஆச்சரியம் என்னவென்றால், பல நேரங்களில் இது உண்மையாக உள்ளது.

ப்போது குழந்தை பிறக்கும் என்று எப்படி சொல்கிறார்கள்?

 பொதுவாக குழந்தையின் நிலையை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வைத்து தான் தெரிந்து கொள்வோம். ஆனால் அன்றைய காலத்தில் உள்ள பெண்களிடம் கேட்டால், அவர்கள் கர்ப்பிணிகளின் வயிற்றை வைத்தே, எப்போது பிறக்கும் என்று சொல்லிவிடுவார்கள். எப்படியெனில் குழந்தை வெளிவரப் போகிறது என்றால், அது வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான், வெளி வருவதற்கான சரியான நிலையை அடையும். எனவே தான், அதை வைத்து சரியான கணித்து சொல்கின்றனர்.

பெரிய வயிறானால் பெரிய குழந்தை அல்ல

 உண்மையில் வயிறு பெரியதாக இருந்தால், வயிற்றில் இருக்கும் சிசுவானது நன்கு ஆரோக்கியத்துடன், வலிமையோடு உள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால், சில நேரங்களில் பெரிய குழந்தை கூட, சிறிய வயிற்றில் இருக்கும்.