FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 20, 2013, 04:53:58 PM

Title: நின் நினைவுகளுக்குத்தான் எத்தனை வீரியமடி .........
Post by: aasaiajiith on February 20, 2013, 04:53:58 PM
நினைவுகளின் உச்சபட்சத்தினில்
என் மனம் கவர்ந்து -
குழப்பத்தினை குடியமர்த்தி
விரக்தியின் விளிம்பில்
விரல்களுக்கு இடுக்கினில்
புகைப்பானை புகுத்திடும்
நினைவுகளை போலன்றி

கரிக்கோல் புகுத்தி
உனை, கவிதையில்
காதலிக்க சொல்லும்
நின் நினைவுகளுக்குத்தான்
எத்தனை வீரியமடி .........
Title: Re: நின் நினைவுகளுக்குத்தான் எத்தனை வீரியமடி .........
Post by: PiNkY on April 09, 2013, 01:23:11 PM
நல அழகான வார்த்தைகளை கோர்த்து கவிதை மாலை செய்து இருக்குறீர்கள்
Title: Re: நின் நினைவுகளுக்குத்தான் எத்தனை வீரியமடி .........
Post by: aasaiajiith on April 11, 2013, 11:05:21 AM

வெளிர்  ரோசாவே  !

வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்

நன்றிகள்  !!!!