FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on February 20, 2013, 02:22:24 PM

Title: தேடல்!!!
Post by: vimal on February 20, 2013, 02:22:24 PM
நேரில் காணாமல் பழகினோம்
நம்மையும் விட்டு வைக்கவில்லலை
அந்த பாழாய் போன காதல்,

உன் புகைப்படம் கண்டு கடைக்கண்
பார்வையிலே விழுந்தேன், எழ நினைத்தும்
முடியவில்லை இன்றுவரை, உணரவில்லை
விழுந்ததும் தொலைந்ததை உன்னுள்,

தொலைந்த என்னை தேடிக்கொண்டுதான்
இருக்கிறேன் நீ விடுத்துச் சென்ற சுகமான
நினைவுகளுடன், பாதையை விட்டு விலகவும்
முடியவில்லை தேடலுக்கான விடையை
நெருங்கவும் முடியவில்லை,

மழையை பிரசவிக்க மண்ணைத்தேடும்
மேகம், தன்னைப் பிரசவிக்க கண்ணைத்
தேடும் கண்ணாடி, எப்படியாயினும்
தனக்குற்றவரை தேடும்போது தேடல்
சுகமானதுதான்......

என் தேடலும் கூட!!!
Title: Re: தேடல்!!!
Post by: Bommi on February 20, 2013, 04:14:40 PM
கவலைப்படாதே விமல்  .....
எல்லாம் நல்ல ப‌டியா நடக்கும், உன் மனம் போல‌...... 
கவிதைதான் வந்து விட்டதே! அப்புறம் என்ன‌.. என் தேடலும் கூட!!!


விமல் கவிதை அருமை