FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on February 20, 2013, 11:34:03 AM

Title: என்றும் நீ
Post by: Bommi on February 20, 2013, 11:34:03 AM
நான் பார்த்தபோது
நீ பார்க்கவில்லை.
இன்று நீ பார்க்கிறாய்
என் விழியில்
பார்வையில்லை

நான் அழைத்தபோது
நீ கேட்கவில்லை..
இன்று நீ அழைக்கிறாய்
என் செவியில்
சப்தமில்லை.

நான் சொன்னபோது
நீ ஏற்கவில்லை.
இன்று நீ எதிர்பார்க்கிறாய்
என் இதழில்
மொழியில்லை

நான் தொட்டபோது
நீ உடன்படவில்லை..
இன்று நீ தொடுகிறாய்
என் உடலில்
உணர்வில்லை..
Title: Re: என்றும் நீ
Post by: Gotham on February 20, 2013, 11:38:25 AM
நல்லா இருக்கு பொம்மி.. இதைப் பார்த்து தோன்றியது..

--------------------------------------
நீ என்றும் என்றான பிறகு
ஐம்புலன்கள் இயக்கமே
ஒத்துழையாமையாய் இருந்தாலும்
மனம் மட்டும்
இன்னும் மரத்துப் போகாமல்..!!!

---------------------------------------
Title: Re: என்றும் நீ
Post by: Varun on February 20, 2013, 11:58:49 AM
பொம்மி யாருக்கோ செய்தி சொல்ற மாதிரி இருக்கே கவிதை வழில் செய்திய ரொம்ப நல்ல இருக்கு  :P :P :P :P
Title: Re: என்றும் நீ
Post by: Bommi on February 20, 2013, 12:07:27 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fwp-content%2Fuploads%2F2009%2F02%2Fthank-you-desi-glitters-30.gif&hash=df7866dc9165d7280bd7825d7f7d12f5938236d2)

Gotham & Varun
Title: Re: என்றும் நீ
Post by: vimal on February 20, 2013, 12:25:12 PM
பொம்மி ரொம்ப அழகா இருக்கு கவிதை....
Title: Re: என்றும் நீ
Post by: Bommi on February 20, 2013, 04:15:35 PM
Thanks vimal