FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 18, 2013, 10:33:25 PM

Title: !! நீ அறியாத என் தேடல் !!
Post by: Varun on February 18, 2013, 10:33:25 PM
உன் பார்வை என்னும் மழையில்
வாழ்ந்திருந்தேன் பெண்ணே....!!
வறண்டு கிடக்கிறது என் வாழ்க்கை
இப்போது எப்போது பொழிவாயோ
மீண்டும் உன் பார்வை மழையை

என்னும் தேடலை நோக்கி செல்கிறேன்.
என் கால சுவடுகளில்
உன் தேடல் சுவடுகளே
சுகமளிக்கின்றன....!!

சிரிப்பில் என்னை ஆயுள் கைதியாக்கி,,,
சிதைத்து எடுத்து சென்றாயே
என்னை உன்னுடனே...

பெண்ணே இறைவன் கூட
அர்த்தநாதியாய் தான் திகழ்கிறான்.
ஆனால் என்னில் நீ பாதி அல்ல
என்னுள் முழுதுமாய் நின்றவளே..
களவு செய்யாதே என் வாழ்கையை

உன்னை தேடி தேடி கண்ணாமூச்சி ஆட்டத்தினால்
இருண்டு கிடக்கிறது என் இதய வாசல்
என் தேகம் சுருங்கினும்
என் தேடல் நிற்காது பெண்ணே 
காலங்கள் கடந்து தேடும் நேரத்தில்
என் தேடலை காகிதத்தில் எழுதினேன்
என் தேடலின் முடிவில்
நீ படிப்பாய் என்று எண்ணி....!!!
Title: Re: !! நீ அறியாத என் தேடல் !!
Post by: Gotham on February 19, 2013, 07:17:03 AM
அவளறியாத இத்தேடல்
அறிந்தபின் முடிவது ஊடலா கூடலா...

தேடல் விரைவிலேயே முடியட்டும்...

நல்ல கவிதை வருண்
Title: Re: !! நீ அறியாத என் தேடல் !!
Post by: Varun on February 19, 2013, 09:37:31 AM
இன்னும் அவள் படித்தாள என்று குட ஆறியாமல்
இன்னும் நான் காத்திருக்கேன் என் அன்பானவள் காக


நன்றி கெளதம் உங்கள் பதில்கு
Title: Re: !! நீ அறியாத என் தேடல் !!
Post by: Gotham on February 19, 2013, 06:26:51 PM
ஓ.. இங்க தான் இருக்காங்களா,,,  :o

சீக்கிரமே படிப்பாங்க...
Title: Re: !! நீ அறியாத என் தேடல் !!
Post by: vimal on February 19, 2013, 06:34:08 PM
தெரிஞ்சி போச்சு யாருன்னு ;D ;D ;D....
நல்ல கவிதை வருண்.
Title: Re: !! நீ அறியாத என் தேடல் !!
Post by: Gotham on February 19, 2013, 06:48:31 PM
விமல் யாரு? :O
Title: Re: !! நீ அறியாத என் தேடல் !!
Post by: Bommi on February 19, 2013, 10:14:24 PM
வருண் கவிதை சூப்பர் மச்சோ
அட்மின் படிச்சு இருப்பார் உங்க கவிதைய
ஏன் வருத்தம்