FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on February 18, 2013, 09:15:43 PM

Title: வரம் ஒன்று வேண்டும்.....
Post by: Varun on February 18, 2013, 09:15:43 PM
வீதியோரம் கால் கடுக்க நான் காத்திருக்க...!
வசந்தகால தென்றலாய் நீ என்னை கடக்க...!
ஒழிந்திருந்து உனை உற்று நோக்கிய தருணங்கள்
இன்று என் வாழ்வில் வெறும் நினைவுகளாய் மட்டுமே
பகிர்ந்து கொள்ள நீ இல்லாமல்........
உன்னை கண்ட நொடியிலயே தொலைந்த
என் உயிரை தொலைதூரம் சென்று தேடுகிறேன்
தொலைந்த இடத்தை விட்டு விட்டு.

என் அன்பே நீ தான் என் உலகமே..!

எவ்வளவு சோகங்கள் வந்தாலும் அன்பே
உன் மார்பில் நான் சாயும்போது எல்லாமே மறந்துபோகும்..
நீ உன்னுடன் என்னை அனைக்கும் போது
மனசு ரெக்கை கட்டி பறக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
 அன்பே நான் உன்னை பிரியாமல் இருக்க
வரம் ஒன்று வேண்டும்.....
Title: Re: வரம் ஒன்று வேண்டும்.....
Post by: Varun on February 18, 2013, 10:28:45 PM
காதல் என்றால் என்னவென்று தெரியாமல்
உன்னை காதலித்தேன் . உன் காதலை கண்ட பின்பே
உணர்ந்தேன் உண்மை காதலை அது நீ என்று !!

Title: Re: வரம் ஒன்று வேண்டும்.....
Post by: Gotham on February 19, 2013, 07:19:21 AM
வரங்களும் வசப்படும்..
வீதியோரக்காதல்
மீதி உயிரை அடையும் தருணத்தில்

------
நல்லா தான் வரம் கேக்கறீங்க..
Title: Re: வரம் ஒன்று வேண்டும்.....
Post by: Varun on February 19, 2013, 09:34:50 AM
ரொம்ப நன்றி கெளதம்
Title: Re: வரம் ஒன்று வேண்டும்.....
Post by: Bommi on February 19, 2013, 10:18:31 PM
வருண் மச்சோ உங்களுக்கு என்ன வரம் வேணும்
அட்மின் கிட்ட கேட்ட  உங்களுக்கு அட்மின் போஸ்ட்
கொடுப்பார்
கவிதை அருமை