FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on October 05, 2011, 11:40:27 AM

Title: மஞ்சள் நிற பற்கள் தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்?
Post by: Yousuf on October 05, 2011, 11:40:27 AM
மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.

ஈறு நோய்கள்:

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும்.

அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளி வரும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் ஆகிறது. அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம்தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ் நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவைகளாகும்.

பொதுவாக் பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக்கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து அது கெட்டியாகி காரையாக மாறிவிடுகிறது
.

ஈறு நோய்க்கான சிகிச்சை:

வருடத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்காரை அகற்றி பற்களை பாதுகாக்க வேண்டும். மேலும் Ultra Sonic Scaler என்ற நவீன கருவி மூலம் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

பல் சொத்தை:

பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.

பல் சொத்தைக்கான சிகிச்சை:

சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின் அழகு பாதுகாக்கப்படும்.


பல் சீரமைப்பு:


பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்குக் காரணம் குழந்தை சிறு வயதில் உள்ளபோது விரல் சூப்புவதாலும், பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நாக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும், வாய் திறந்தே தூங்குவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பல் சீரமைப்புக்கான சிகிச்சை:

பொதுவாக கிளிப்புகள் மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்திற்குத் தள்ளப்படுவதால் பல்வரிசை சீராக அமையும்.

பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.

பல் சொத்தை, பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (RCT) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.

பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடி, புகையிலை, கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.

வாயில் ஏற்படும் கட்டி, புண் முதலியவற்றைப் பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.


மஞ்சள் நிற பற்கள் தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்?

என் பற்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்? பற்களின் இயல்பான நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

பற்களின் இயல்பான நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

பற்களின் இயல்பான நிறமே இளம்-மஞ்சள்தான்; பலர் நினைப்பது போன்ற தூய வெள்ளை நிறமல்ல! பற்களின் வளர்ச்சி மற்றும் பற்கூழின் தன்மையைப் பொறுத்தே அவற்றின் நிறம் அமைகிறது. பற்களை நன்றாக துலக்கி சீராக வைத்துக்கொண்டால் அவைகளின் இயற்கை நிறத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.

பற்களின் நிறம் மாறுவதற்கான காரணங்கள் என்ன? அவற்றை சுயமாக நீக்கிக்கொள்ளலாமா? டாக்டா¢டம் போக வேண்டுமா?

பழக்கங்கள், தொழில்கள் நோய்கள், கர்ப்பக் காலத்தில் தாயார் உட்கொண்ட மருந்து, மாத்திரைகளால் பற்களில் கறை படிவதே ஆகும். இதில் இரண்டு வித கறைகள் உள்ளன.

வெளிக்கறைகள், உட்புறக் கறைகள்:

வெளிக்கறையை துலக்கிகள் மற்றும் வாய்க்கொப்பளிப்பு மருந்துகள் மூலமாகவும் சுலபமாக கரைத்துவிடலாம். உட்புறக் கறைகளை நீக்குவதற்கு சிரமம் இருக்கும் இதற்கு பல் மருத்துவா¢ன் உதவி கட்டாயம் தேவைப்படும்.

பலவிதமான பழக்கங்கள் மற்றும் நோய்களின் பாதிப்பினால் பற்களின் நிறம் மாறும் என்பது உண்மையா?

உண்மைதான். புகைத்தல் மற்றும் புகையிலைப் பயன்பாடு தவிர, சில பழக்கங்கள் தானாக வரக்கூடியவை. இவை பற்களில் கறையை உண்டாக்கும் என யாரும் நினைப்பது இல்லை. இதைப் பற்றி நீங்கள் தொ¢ந்துகொள்ள வேண்டும் என்பதால் வி¡¢வாகவே கூறுவிடுகிறேன்.

பழக்கங்கள் : புகையிலை போடுவது, புகைப்பது ஆகிய பழக்கத்தால் பற்கள் கறுப்பு அல்லது காவி கலந்த கறுப்பு நிறமாக மாறி விடுகிறது. இந்த நிறமாற்றம் பற்களின் மீதும், பற்சிப்பியின் மீதும் பதிந்து அருவருப்பான தோற்றம் தரும். வாயிலும் நிரந்தரமான துர்நாற்றம் வீசும்.

தொழில்கள் : சில குறிப்பிட்ட தொழில் செய்பவர்கள் தொழிற்கருவியை பற்களில் கடித்துக்கொள்வதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இதன் காரணமாக பற்களின் மீது கறைகள் படியும்.

உதாரணமாக, தச்சுத் தொழிலாளர், செப்பு உலோகத்தொழிலாளர், செம்பாலான இசைக்கருவிகளை இசைப்போர், தையலர்கள் போன்றவர்கள் பெரும்பாலும் தங்கள் பற்களில் கருவிகளைக் கடித்துக்கொள்வதால் பற்களில் பச்சை நிறக் கறை இருப்பதைக் கூறலாம்.

மருந்து மாத்திரைகள் : இரும்புச் சத்துள்ள மருந்துகளால் கருப்பு நிறக் கறையும், மாங்கனீசு கலந்த வாய்க்கொப்பளிப்பு மருந்துகளால் இளங் கருப்பு கறைகளும், ஆஸ்பி¡¢ன் மற்றும் காசநோய் மாத்திரைகளால் மஞ்சள் நிறக் கறைகளும், வெள்ளை நைட்ரைட் திரவம் போன்ற மருந்துகளால் பழுப்பு மற்றும் சிவப்பு நிறமும் தோன்றும். ஈயம் கலந்த பற்பொடியால் மஞ்சள் நிறக் கறையும், சாம்பல் உமிக்கா¢யைக் கலந்து பல் துலக்கினால் கருப்பு நிறக்கறையும் தோன்றும்.

நோய்கள் : கிருமிகளால் பற்கூழ் பாதிக்கப்பட்டு அங்குள்ள இரத்தக் குழாய்கள் சிதைந்து அழுகி இறந்துவிடும் போது பற்களுக்குள் கரும்பழுப்பு நிறம் ஏற்படுகிறது.

தந்தினிக் குழல்கள் பாதிக்கப்படும்போது பற்குழியில் மாற்றம் ஏற்பட்டு இரத்தக்குழாய்களும் புரத நார்களும் பெருமளவுக்கு பற்குழியில் நிரம்பிவிடும். இதனால் பல்லின் உட்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் தொ¢யும்.


ப்ளூரைடு : பற்கள் வளரும் பருவத்தில் ப்ளூரைடு கலந்துள்ள நீரைப் பருகுவதால் காவி நிறத்தில் உட்கறை உண்டாகிறது.

பாரம்பா¢யம் அல்லது வேறு காரணங்களால் தந்தினி தாறுமாறாக அமைந்து குழிகள் தோன்றி பற்கூழின் இரத்தக் குழாய்கள் சிதைவதால் பல் மஞ்சள், சாம்பல் அல்லது நீல நிறமாக காணப்படும்.

பாரம்பா¢யக் குறைகளால் பற்சிப்பியில் வளர்ச்சியின்மை, பல் முளைத்த பிறகு பற்சிப்பி தேய்ந்து பற்கள் செம்பழுப்பு காவி அல்லது மஞ்சள் நிறத்தில் செம்புள்ளிகள் தோன்றும்.
Title: Re: மஞ்சள் நிற பற்கள் தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்?
Post by: Global Angel on October 06, 2011, 02:10:42 PM
parkkal venmayaga i idea.... paakka thanalil pottu suddu maavakki theettinaal parkkal venmayaga varum  ;)

nallapathivu  ;)
Title: Re: மஞ்சள் நிற பற்கள் தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்?
Post by: Yousuf on October 06, 2011, 03:25:59 PM
Thayavu Senju tamil ah pesunga pa onnum puriyala...! :'( :'(
Title: Re: மஞ்சள் நிற பற்கள் தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்?
Post by: Global Angel on October 06, 2011, 03:27:30 PM
சுட்ட பாக்கை பொடியாக்கி பற்களை தீட்டினால் வெண்மையாகும் ... வாய் துர்நாற்றம் போகும்.... >:(
Title: Re: மஞ்சள் நிற பற்கள் தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்?
Post by: Yousuf on October 06, 2011, 03:35:05 PM
Itha munnadiye Olunga solli irukalamla...! ;D