FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 03, 2011, 04:24:21 PM
-
உயிரை வாட்டும் பசி ஒரு புறம் - செய்வதறியா நிலை ஒரு புறம் !!!
வாழ நாதியுற்று அல்லலுரும்- பயனற்ற வாழ்வாய் உருமாறுது இப்போது !!!
கைப்பிடி அரிசியேனும் வாங்க முடியா கொடிய ஏழ்மையின் மறுவுருவமிது !!!
செந்தூர சொந்தம் எல்லாம் சாக்கடையானது!!
மனிதனே மனிதனைத் தேடும் காலத்தில்
மனிதநேயம் எங்குள்ளது?
மனிதனே! உன் வீட்டு செல்லநாய்
உரிமையுடன் இருக்கையில் அமர்கிறது
நீ வளர்க்கும் பூனை படுக்கையில்
படுத்து புரள்கிறது!
மனிதனை மட்டும் தூரம் நிறுத்தும்
உனக்கு யார் மீது வெறுப்பு!
அவன் தேகம் மீதெனில்
உன் தேகத்தைப் பார்!
குணத்தின் மீதெனில் உன்
குணத்தை பார் - அவன்
நிறத்தின் மீதெனில் உன்
நிறத்தைப் பார்!
நாய்க்கொரு குணம்
பூனைக்கொரு குணம் - அவற்றிடம்
அன்பு காட்டும் நீ
மனிதனிடம் மறுப்பதேன்
மரம் போல் நினைப்பதேன்
பரஸ்பர அன்புகாட்டி
மனிதனை மனிதன் நேசி - அதுவே
மகத்தான பேருதவி
இதுவே! மனிதநேயம்
வளர்க்கும் உரம்!
நீதி எங்கே..கருணை எங்கே...நேர்மை எங்கே..
கடமை எங்கே...காதல் எங்கே....பண்பு எங்கே...பாசம் எங்கே...????
போதும் மனிதா!
மனிதநேயத்தை தொலைக்காதே!!!
-
பூனைக்கொரு குணம் - அவற்றிடம்
அன்பு காட்டும் நீ
மனிதனிடம் மறுப்பதேன்
manitharkal suyanala vaathikal... avarkalukku seivathai naai poonaiku seithal naanriyodu vaalatumenra kaaranama irukalam ::) ::)
-
Ohh appadiyum irukalamo...! ;D ;D