FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 03, 2011, 02:50:19 PM

Title: இதுதான் நிஜம்!
Post by: Yousuf on October 03, 2011, 02:50:19 PM
கனவுகளோடு தான்

படித்தேன்...கல்லூரில் ,

கடன் இன்னமும் இருக்கிறது,

என்றார் ...என் அப்பா,

அம்மாவிடம் ...

 

கணக்கு போட்டு பார்த்தேன் ...

உள்நாடை விட -அயல்நாடு

அதிகம் கை கொடுக்கும் என்று

கண்டுபிடித்தேன் ..

எப்படி சொல்ல என்று

கை பிசைந்தார்...அப்பா ,

அயல்நாடு என்றால் ..

கொள்ளைப்ரியம் ..என்றேன் ..

புன்சிரிப்போடு ...$$$$

 

பொய் சொல்லவும் ..

பழகி விட்டான்..என்று

நினைத்தார் ..,அப்பா ...

 

கிளம்பும் போது புரிந்தேன் ..

என்னை போல் எத்தனை...

சகோதர்கள்...அனுபவித்து

இருப்பார்கள் என்று ...

தந்தை-ஐ பார்த்தேன் ...

ஒரு கண் அழுதது ..

ஒரு கண் சிரித்தது ...

தாய் -ஐ பார்த்தேன்

இரு கண்ணும் அழுதது ..

 

தொலைபேசி ஐ கண்டு பிடித்தவன் ..கூட

எங்களை போன்று ...

சந்தோசம் பட்டு இருக்க மாட்டன்...

 

திருமணம் என்றனர் ..

எனக்குள் ..

ஒரு சந்தோசம் ..

ஒரு வருத்தம் ..

 

ஆசை அறுபது நாள் ..

மோகம் முப்பது நாள் ..

ஆக மொத்தம் லீவ் ..தொண்ணுறு நாள்...

தான் ..

கிளம்பும் போது ..

இப்போது ஆறு கண்கள் ...

அழுதது ....

 

மாங்காய் கடிக்க ..

போகிறேன் ..என்றால் மனைவி..

அவளோடு இருக்கும்

சின்ன சின்ன சந்தோசங்களை ..

இந்த $$$தினார்.$$$.

தருமா ?..என்று அழுதேன் ...

 

ஆறு வருடம் ..

கழித்து வந்தேன் ...வீட்டிற்கு ..

தெருவில் விளையாடி ...

கொண்டு இருந்தான் ..என் பையன்..

கட்டி அணைக்க போனேன் ..

"அம்மா யாரோ ஒரு

மாமா வந்து இருக்கா

பாரேன் ..என்றான் ...".

ஒடிந்து போனேன் ...டா ..டா ..

உன் வார்த்தையோடு ..."
Title: Re: இதுதான் நிஜம்!
Post by: Global Angel on October 06, 2011, 03:20:31 PM
yen gab polaevry year leave kidaikalya ungalukku :(
Title: Re: இதுதான் நிஜம்!
Post by: Yousuf on October 06, 2011, 03:30:55 PM
yenaku 6mnth ku oru thadava leave :P
Title: Re: இதுதான் நிஜம்!
Post by: Global Angel on October 06, 2011, 03:58:21 PM
appo yaarukku 6 yearku onceeee... oh kavithaiku sontha kaaranukaa... ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D
Title: Re: இதுதான் நிஜம்!
Post by: Yousuf on October 06, 2011, 04:08:29 PM
Public la ipdilam Injult pannakoodathu...! :P