FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on February 11, 2013, 09:59:54 AM

Title: ~ பாம்படங்கள் தமிழ் நாட்டின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். ~
Post by: MysteRy on February 11, 2013, 09:59:54 AM
பாம்படங்கள் தமிழ் நாட்டின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும்.

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/31479_539513579416638_645218968_n.jpg) (http://www.friendstamilchat.com)


இருபது வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் நம் எல்லார் வீட்டிலும் பாட்டிமார்கள் ..காது தொங்கும் நகைகளை அணிந்த வண்ணம் இருப்பார்கள் ..

இதனை நாம் தண்டட்டி ,பாம்படம் என்று அழைக்கிறோம்

சிறுவயதிலேயே ....காதுகுத்தி ...மரத்துண்டு பயன்படுத்தி .அல்லது குச்சம் காளி தொங்க விட்டு .கொஞ்சம் கொஞ்சமாக காதை நீளமாக வடித்து .. தண்டட்டி ,பாம்படம் அணிந்து கொண்டனர் .
இதை அணிந்த பாட்டிமார்களை பார்க்கும்போது காது விழுந்து விடுமோ என்ற பயம் ஏற்படும் ..

பாம்படம் என்பது பந்து,கனசதுரம், வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை. ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும்.அரிதுளுவன் ..பன்னீர் செம்பு ..தாமரை கால் ,சுண்ணா கலயம் என்ற பல வகைகள் உண்டு ..

தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு வகையான வடிவங்களை உள்ளடக்கிய இந்த பாம்படங்களும் ஒரு அறிவியல் படைப்பே ஆகும்.

இந்த நகைகள் உள்ளீடற்ற ..இலகுவான அமைப்பில் செய்யப்படும் ..மெழுகு வார்த்து ...உட்பொருளாக சேர்கப்படும்.

அட்டியல் ,காசு மாலை ..போன்ற ஆபரணங்களையும் இப்போது காண முடியவில்லை .

இன்று வெகு சில பாட்டிமார்கள் மட்டுமே பாம்படம் அணிந்து நம்மோடு இருகிறார்கள் .