FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 02, 2011, 09:15:21 PM
-
தரிசனம்
முகத்திரையற்ற உன்
வதனத்தை
தரிசிக்கும் பரவசத்தை விடவா
சொர்க்கம் இனிமையானது?
உன் தரிசனம் கிடைக்காத
என் விரக தாபத்தை விடவா
நரகம் துயரமானது?
சிறை
உன் கண்களில் நான்
சிக்கிக் கொண்டேன்
விடுதலையை விட
இந்த சிறை
எவ்வளவு ஆனந்தமானது
உளறல்
உன்னை பார்க்கும்போதெல்லாம்
உளறுகிறேன்
உலகம் அதை
கவிதை என்கிறது
நீ தொடுக்கும் போர்
ஆயுதபாணியாக நிற்பவளே
உன் முன்
நிராயுதபாணியாக நிற்கும்
என் மேல்
போர் தொடுப்பது நியாயமா?
பிச்சைப் பாத்திரம்
என் பிச்சைப் பாத்திரத்தில்
ஒரு புன்னகையை நீ
போட்டால் கூட போதும்
அதை வைத்து
நான் உயிர் வாழ்வேன்
தொடரும்.........
-
என் பிச்சைப் பாத்திரத்தில்
ஒரு புன்னகையை நீ
போட்டால் கூட போதும்
அதை வைத்து
நான் உயிர் வாழ்வேன்
ungalapaarthu serikalannaipdiya solrathu ok serichu tholaikuren.. ::)
-
காதல் காய்ச்சல்
மழையில் நனைந்தால்
காய்ச்சல் வரும்
என பயந்து
உன் வீட்டில் ஒதுங்கினேன்
அப்போது எனக்கு வந்த
காய்ச்சலை எல்லோரும்
இப்போதும் சொல்கிறார்கள்
காதல் என்று
சிதறிய நான்
கோவில் வாசலில் குனிந்த்து
தேங்காய் உடைத்தாய்
நீ
பொருக்கிக் கொள்கிறேன்
சிதறிய என்னை
சிக்கிக்கொண்ட என் இதயம்
வேலியில் சிக்கிக் கொண்ட
உன் சேலையை
சுலபமாக எடுத்து விட்ட நான்
தவித்துக் கொண்டிருக்கிறேன்
உன் சேலையில்
சிக்கிக் கொண்ட என் இதயத்தை
எப்படி எடுப்பது
என்று தெரியாமல்
-
kavithaikal arumai machi
nalaruku
-
thamilan rompathaan sikki thavikuraaru pola ;D