FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on February 06, 2013, 11:38:35 PM

Title: காதலர் தின கவிதை நிகழ்ச்சி 2013
Post by: Forum on February 06, 2013, 11:38:35 PM
நண்பர்களுக்கு ...
எதிர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு  நண்பர்கள் இணையதள வானொலி ஊடக நீங்கள் உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு உங்கள் மனதை வெளி படுத்தவோ ... இல்லை அவர்களுக்கு உங்கள் கவிதையோடு காதலை பகிரவோ  வாழ்த்துகளை பகிரவோ ஆசை படுகிண்றீர்களா ....  உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செயுங்கள் ... எதிர் வரும் ஞாயிற்று கிழமை  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் காதலர் தினத்தன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....
Title: Re: காதலர் தின கவிதை நிகழ்ச்சி 2013
Post by: Thavi on February 07, 2013, 12:13:06 AM
அன்பே!
ஐந்து வயதில் என்னைவிட்டு
பிரிந்து வெளிநாடு சென்றவள்
நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு
 கோடை கால விடுமுறைக்கு
குடும்பத்துடன் இல்லம் திரும்பினாய் !

ஒருவர் ஒருவர் முகம் பார்த்து
சிரித்த படியே உன் அருகில்
நான் வர என்னை யாரு என்று
அறியாத நீ ஒதுங்கி சென்றாய்
பார்த்ததும் தெரிந்து இருப்பாய் .....

பக்கத்தில் ஓடிவந்து பாசமாய்
ஆசை நான்கு வார்த்தை பேசுவாய்
நினைத்த என்மனம் என்னைக்கண்டதும்
உன் அம்மா பின் ஓடி நின்றாய்
தவித்து போனது என்மனது அந்த நிமிடம் ....

பெரியவர்கள் அறிமுகம் செய்ய
அதன் பின் அறிந்தாய் சின்னவயதில்
பார்த்த நாபகம் உன்னை உலுக்க
ஆசையாய் மாமா என்று கண்ணீர்
கலங்க உச்சரித்தாய் .........

அந்த நிமிடமே உன்மீது பாசம்
என்னை திணற செய்ய என்ன
செய்வது என்று புரியமால்
மனதில் பெரும் சந்தோஷத்தில்
துள்ளி குதித்தேன் ...............

நாட்கள் கடந்தது என்னை விட்டு
மீண்டும் பிரியும் நேரம் வந்தது
நீ பிரிந்து செல்லும் போது
மனதில் எதோ என் உயிரே
என்னை விட்டு பிரிந்தது போல .........

அன்று தெரியவில்லை அதற்க்கு
என்ன பெயர் என்று அதை
புரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள்
அன்றே முடிவு செய்தேன்
வாழ்கை துணைவி என்றால் அது நீமட்டுமே ................

வெகு நாள் காத்து இருந்தேன்
உந்தன் வருகையை எண்ணியே
தென்றலை போல தேடி வந்தாய்
ஒவ்வொரு நாளும் உன்னையே
எண்ணி வெக்கையை உமிழ்ந்தேன் .....

தென்றலாய் வந்து என்மனதை
பத படுத்தினாய் அன்பே !
ஒவ்வொரு நாளும் புது புது
நினைவுகள் வந்து சென்றது
உன் அன்பினால் வான் உச்சிக்கே சென்றேன் ....

அன்பு என்னும் சொல்லி என்னை
அன்னையை போல ஆட்சி செய்தாய் !
அறிவு என்னும் சொல்லில்
தந்தையை ஆட்கொண்டாய் !
மொத்தத்தில் வாழ்கை என்னும்
பாடத்தில் மனைவி ஆனாய் .....

அன்பை வெளிபடுத்தும் ஒரு நாள்
காதலர் தினம் அது காதலிப்பவர்க்கு மட்டுமே
வாழ்கை என்னும் அன்பில்  இணைந்த
நாம் இருவர்க்கு மட்டும் -தினம் தோறும்
காதல் தினமே ..............

 ;D  ;D (L)<3 <3  (L)   ;D  ;D (L) <3 <3  (L)  ;D  ;D (L) <3 <3  (L)  ;D  ;D

Title: Re: காதலர் தின கவிதை நிகழ்ச்சி 2013
Post by: Varun on February 07, 2013, 12:57:12 AM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dinodia.com%2Fphotos%2FMAK-112351.jpg&hash=32faa0657e15e06f5f6fe05a25f174aa1e2a007e)

என்னை நினைவுபடுத்தும் ஒரு பொருளை
உனக்கு பரிசளிக்க நினைத்தேன்என்னையே
தந்தாலும்அது சாத்தியம் இல்லை அன்பே..
காத்திருப்பது சுகம் காதலி வருவாள் என்றால்

எதைப் பார்த்தாலும் உன்னையே நினைக்கிறேன்
உன்னைப் பார்த்தால் மட்டும் என்னையே மறக்கிறேன்
என்னவளே கட்டி போட்டதடி எனது இதயத்தை
உனது காந்த பார்வை .கல் போல் மயக்குதடி உந்தன் நினைவு ...
காலம் முழுவதும் உன் கை பிடித்து கரை சேர துடிக்குதடி எந்தன் நினவு ..

என் மனதில்  இன்னும் மாறாமல் இருக்கிறது   
 நாம் சேர்ந்து வாழ்ந்த இனிய நாட்கள்
 கொஞ்சி பேசி மகிழ்ந்த நேரங்கள்
செல்லமாய் சண்டை போட்ட நிமிடங்கள்
 கோபத்தில் கொட்டி தீர்த்த வார்த்தைகள்
 மறுபடி சமாதானத்தில் ஒன்று கலந்த உணர்வுகள்
 பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட தருணங்கள்
 கண்களால் மட்டுமே பார்த்து கழிந்த பொழுதுகள்
  பிரிவின்போது தவித்த துடித்த நெஞ்சம்
 எதுவுமே மாறவில்லை மறைவில்லை

உன்னுடன் நான் வாழ போகும் நாட்களை
நினைத்து இப்பொது நான் வாழும் நாட்கள்
இனிமையாக தான் நகர்கிறதுவீசும் தென்றலே
 என் விருப்பம் தெரிகிறதா பேசும் பூக்களே என் பாசை புரிகிறதா
எத்தனை கவிதைகளை எழுதிவைதுவிட்டேன் அத்தனையையும் அவளிடம் கொண்டுசேர்ப்பீர்களா! கரையை விட்டு கடல் அலைகள் தாண்டிட கூடாது கண்ணீர் இன்றி காதலும் வாழ்ந்திட முடியாது காலங்கள் கரைந்தாலும் நினைவுகள் அழியாது காத்திருப்புகள் ஏதுமின்றி காதலில் சுகம் ஏது.... உயிரில் ஈரம் உள்ளவரை உனக்கென வாழ்ந்திருப்பேன்!.. ஒரே ஒருமுறை சிரித்துவிடு ஓராயிரம் முறை பிறந்திருப்பேன்!..

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று வேண்டும்
உன்னுடன் வாழ்ந்திடும் வரம் ஒன்று வேண்டும்
உன்னை பிரியாத வரமஒன்று வேண்டும்
உன் மார்பில் தூங்கிடும் வரம் ஒன்று வேண்டும்
உன்னை இதயத்தில் தாங்கிடும் வரம் ஒன்றுண்டும்
உன்னை கோடி ஜென்மம் மறவாமல் இருக்க
வரம் ஒன்று வேண்டும் என்அன்பானவளே
நீதந்த சில வலிகள் சில வேதனைகள் உன்னால்
புரிந்து கொள்ளவும் முடியாது என்னால்
உன்னை பிரிந்து செல்லவும் முடியாது...






Title: Re: காதலர் தின கவிதை நிகழ்ச்சி 2013
Post by: Bommi on February 07, 2013, 12:57:45 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1147.photobucket.com%2Falbums%2Fo544%2Fbommisana%2Fhand_zpsf80312d7.jpg&hash=074d09355a4cf409211437806c7eeb08d972590a)

தனி தனி செடிகளில் பூத்த மலர்களில்
ரோஜாவாக நீயும் நானும்
பூத்து குலுங்கிய நந்தவனத்தில்
தினமும் உலவி பேசி மகிழ்ந்து
சாரல் மழையின் சந்தோச குயில்களாக
வலம் வந்து கொண்டிருந்த வேளையில்.....

நான் போகும் இடமெலாம் நிழலாய் நீ
நான் பேசிய வார்த்தைளில் எழுத்தாய் நீ
நான் நினைக்கும்  உன் நினைவே என்னுள்
என் சிந்தனையில் கருவாகி
உன் எண்ணங்களால் உருவாகி
என் கண்ணில் உருவானது தான்
நம் காதல் .............

அழகு, அந்தஸ்து பார்த்து வந்தது அல்ல  நம் காதல்
என்னையும் என் திறமையும் அடையாளம் காட்டி
எனது கவிதையை பல்கலைகழகத்தின் பாடமான போது
வென்றது  நம் காதல்.......
 
அன்பின் அடையாளத்தையும் சோகத்தின்
கண்ணீரையும் உன்னில் நேராக சொல்ல
முடியாதவைகளை அமைதியாக
கிறுக்கி விடுகிறேன் கவிதைகளில் .....

நம்மிடையே  வந்த காதல் காட்டி கொள்ளாமல் ..
உணர்வுகளோடும் ..சொல்ல வந்த வார்த்தைகள் கூட
சொல்லி கொள்ளாமல்  உள் மனதிற்குள் ...
இந்த சொல்லாத நம் காதல் என்றமே அழகு தான்.....
அது உறவாடும் வார்த்தைகளே இன்றி ...
நம்  நினைவுகளோடு என்றும்

நான் ஏங்கி கொண்டிருக்கும் இனிய நாள்
உன்னுடன் நான் அமர்ந்திருக்கும் மணவறை
கெட்டி மேளம் சூழ எல்லோர் கூட்டமும்
அட்சதை  போட காத்து கொண்டிருக்கும் நம்மை பெற்றவர்கள்
அவர்களுடன் தேவர்களும் கடவுளின் ஆசியுடன் .....

Title: Re: காதலர் தின கவிதை நிகழ்ச்சி 2013
Post by: aasaiajiith on February 07, 2013, 08:59:47 PM
உணராமலே,உணர்த்தப்படாமலே,உணர்ந்திடக்கூடிய
உன்னத உணர்வு ஒன்று உண்டு என்பதை
உள்ளூர உள்ள உள்ளத்திற்கு உணர்த்திய உன்னதமானவளே ! ...

உலக உன்னதப்பட்டியலின் உணர்வுகளை பின்தள்ளி
உலகின் உயர் ரக உணர்வுகளுக்கெல்லாம்  உயர் உணர்வாய், உயிர் உணர்வாய் 
உன்னத (காதலை)உணர்வை  உன்னதமாய் உட்புகுத்திய உள்ள்மனம் உகந்தவளே ! ..

இயல்பிலேயே இனிப்பு என்றால் இம்மியும் இட்டமில்லதவன்
இதோ இன்று இழி இளியென இளித்து ,
இழைந்தும், குழைந்தும்
இனித்திடும் நினைவுகளுக்காக சிலநேரம் ,
இனிக்கும் நினைவுகளிலேயே பலநேரம்
இனிமைபெருகின்றேன்  இனியவளே !  ..

கால்நூற்றாண்டுகாலமாய் காத்து கிடந்தும் கண்டும்காணாமலும் காத தூரம் கிடந்து
கண்டும், கேட்டும்,கற்றும்,கற்று கடந்தும்
கரிசனம் என்பது கடுகளவும் காட்டாத போது
கண்காணா தேவதையே !
காணாதபோதும்,காதால் கேட்டதற்க்கே, கொஞ்சும் கரிசனம் மட்டுமின்றி ,
கண்காணும் கவின் காட்சியாவிலும் காதல் காதல் காதலென
காதல் தன் தரிசனத்தையே வரிசையாக
காதல் கொடுத்திருக்கிறதென்றால்,
காதல்,எனக்கும் முன்னரே உன்னிடம் அடிமையோ ?
Title: Re: காதலர் தின கவிதை நிகழ்ச்சி 2013
Post by: vimal on February 07, 2013, 11:33:14 PM
காதல்!!!

அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும்
புதுமலர், உலக அதிசயங்களும்
அடிபணியும், விதிவிலக்கல்ல
விண்ணில் இருப்பவர்களுக்கும்
மண்ணில் உதிப்பவர்களுக்கும்,
எனக்கும்தான் உன் வருகையால்,
உனக்கும்தான் என் வருகையால் ,

யாரென்று தெரியாத புதுமுகம் ,
பார்த்ததும் பட்டாம்பூச்சியாய்
பறந்தது என் அகம், பட்டென
பச்சைக்கொடி, உடலெங்கும் சிலிர்த்து
மைர் மலைத்து நிற்க்க,
மெல்லமாய் முகம் காட்டியது,

கண்டாலே போதும் கண்கள்
கதகளி ஆட, இதயத்திலே
சலங்கை ஒலி இதமாய்ஒலிக்க,
கால் வழி இறங்கி வரைந்த ஓவியம்
அர்ப்பணம் செய்தது உன்னை என்
மீது கொண்ட காதலுக்கு,

பேசக்கேட்டதை உணர்ந்தோம்,

சாப்பிடத் தோன்றாது உணவாய்
உணர்வுகள் செல்லும், தூக்கம்
தொலைத்து கணவாய் வந்து
சொல்லும், கோடியில் ஒருத்(தன்)தி
போலென்று, தொலைந்த உ(எ)ன்
இதயம், தொலையாத உ(எ)ன்
உடல், இணை சுற்றும் உ(எ)ன்
ஆன்மா, கல்நெஞ்சமும் கரைந்துவிடும்
காதலால் கவிதைகளாய் கைவழி
இறங்குமென்று, மாயங்களின்
வரிசையில் மாயையாய் நிலவும்
ஏளனமாய் தோன்றும், தென்றலும்
இன்னிசை பாடும், மொட்டை மாடியும்
பொலிவுபெறும், முகக்கண்ணடியும்
அதிசயமாய் மாறுமென்று,

பழகிய நினைவுகளை அசைபோட்டு
உறுதி எடுத்தோம் காதலர் தினத்தில்,

"உனைபிரியாத வரம் வேண்டும்
 உயிர் உடல் பிரிந்தாலும்,
 உடல் சுமந்த இதயத்தில் இடம் வேண்டும்
 உடல் இணை நிழல் பிரிந்தாலுமென்று"

உறுதியின்படி உளமார உள்ளேன்
நீ சிகப்பு சேலையை கட்டிய பிறகும்
இந்நாள்வரை,
                     
                      ஆனால் நீ...........

உணர்வாய் ஒருநாள்....!!!

Title: திசையெல்லாம் நீ !!!
Post by: User on February 08, 2013, 12:02:54 AM
நீண்ட  தொலைவு  கடந்துவிட்டேன்
 
            அங்குமிங்கும் முற்களும் கற்களும்

 கடந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
 
              கண்டது எல்லாம் உன் காலடி தடங்கள்


நீண்ட இரைச்சலை கேட்டுவிட்டேன்

            அங்குமிங்கும் அலறலும் அழுகையும்

 கடந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

              கண்டது எல்லாம் உன் மௌனத்தின் மொழிகள்


நீண்ட மலையில் ஏறிவிட்டேன்

             அங்குமிங்கும்  சறுக்கலும் குளிரும்

 கடந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

              கண்டது எல்லாம்  உன் பார்வையின்  துளிகள்


நீண்ட கவிதையை  எழுதிவிட்டேன்

                அங்குமிங்கும்  எதுகையும் மோனையும்

கடந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

                கண்டது எல்லாம்  உன்  ஸ்பரிச நொடிகள்

ஆம்...


எங்கு சென்றாலும் ஒரு முறை திரும்பி பார்க்கிறேன்

                   காணும் திசையெல்லாம் நீயிருப்பாய் என....



காதலர்கள் அனைவருக்கும் என் சமர்ப்பணம்  மற்றும் காதலர் தின வாழ்த்துக்கள்

Title: Re: காதலர் தின கவிதை நிகழ்ச்சி 2013
Post by: பவித்ரா on February 08, 2013, 10:19:31 PM
என் இதயத்தை நான் இரும்பாக வைத்து இருந்தேன் .
நினைக்கவில்லை நீ காந்தமாக இருப்பாய் என்று
யுகயுகமாய் உன்னை காதலித்தேனோ அதனால்
தான் உன்னை கண்டதும் நொடியில் யாரிவன்   என்று
கேட்காமல் என்னவன் என்றது என் மனது .....

உன்னை முதல்முறை பார்த்ததும்
முடிவு செய்தேன் நீ தான் என் வாழ்க்கை என்று
உன் மீது நான் கொண்ட காதலை சொல்லாமல்
நான் மறைத்தும் . என் கண்கள்
காட்டி கொடுத்து விட்டது  என் காதலை ....

காதல் ஒன்றும் கடவுள் அல்ல .ஆனால்
உன் மனதில் நான் இருப்பது  தெரிந்தால்
உயிர் இல்லாமல் வாழும் என் தேகம் .
ஈசலின்  ஒரு நாள் வாழ்கை கூட  எனக்கு வேண்டாமடா
நீ உன்  காதலை  சொன்ன பிறகு ....

என் காதலின்  இனி'மை'யோ
சொர்கத்தையும்  விட மேலானது .
என் காதலின்  தனி'மை'யோ
நரகத்தை விட கொடுமையானது .
என் காதலின்  பொறு'மை'யோ
இந்த பூமிக்கு ஈடானது ...

நான் நானாக மட்டும் இருந்தபோது அர்த்தமில்லையே
நீ வந்து என்னோடு சேர்ந்தபோது நான் பாதி இல்லையே
என் அன்பை சொல்ல இந்த ஜென்மம் போதவில்லையே
பிரிந்து இருக்கும் நேரம்  துன்பமாகவும்
சேர்ந்து இருக்கும் நேரம் சந்தோஷமாகவும்
துடிக்கின்றது என் இதயம் ...

இரவில் நான் உறங்கும் முன் உன் பெயரை
ஒரு முறை உச்சரித்து விட்டு தான் உறங்குகிறேன்
உறங்கியவள் அப்படியே உறங்கிவிட்டாள்
நான் கடைசியாக உச்சரித்தது
உன் பெயராய் இருக்கும் அல்லவா ...

நான் தூக்கத்தை  கூட நேசிக்கிறேன்
கனவில் நீ வருவாய் என்று .
விடியலில் நான் கண் திறக்கவே மாட்டேன்
கனவு கலைந்து , என்னை விட்டு  நீ பிரிந்து விடுவாய் என்று ...

மழைக்கு ஒரு முடிவு உண்டு மண்ணில் சேர்ந்து விட்டால்
நதிக்கு ஒரு முடிவு உண்டு கடலில் சேர்ந்து விட்டால்
ஆனால் காற்றுக்கு ?...முடிவு என்பதே இல்லை ..
என் காதல் போல ...!
Title: Re: காதலர் தின கவிதை நிகழ்ச்சி 2013
Post by: Global Angel on February 10, 2013, 07:28:30 PM
நீள் வானும்
நீந்துகின்ற நிலவும்
வான் பார்க்கும்
அலை கடலும்
வந்து போகும்
மேக துகளும்
ஊன் பார்க்கும்
இந்நாளின்  காதலுக்கு
உவமான உவமேயங்களாம் ..

கூன் பார்க்கா நட்பு பெரிது
குலம் பார்க்கா உறவு பெரிது
நினைவு இழக்கா  காதல் பெரிது
நிஜங்களை மறக்காத வாழ்வு இனிது

காதல் கண்ணாடி போன்றது
கண்ணாடியின் பாத ரசம் சுரண்டப்படும்வரை ..
காதல் நிலவும் நட்சத்திரமும் நிறைந்த வானம் போன்றது
விடியும் வரை ...
காதல் காந்தம் போன்றது
புலங்கள் இடம் மாறும் வரை...
காதல் பயணம் போன்றது
தரிப்பிடம் வரும் வரை ...
காதல் கண்ணாக  மாறலாம் கண்ணாடி தவிர்த்து
காதல் வானமாக நீளலாம் இரவை தவிர்த்து
காதல் கடத்தலாக மாறலாம் அன்பை கொடுத்து
காதல் கல்யாணமாக மாறலாம் உறவை கொடுத்து ..

மொத்தத்தில்
காதல் ஒரு முடிவை நோக்கிய
ஆரம்பமே ...
புரிந்தவர் மீண்டிடலாம்
புரியாதவர் மாண்டிடலாம்
புரிந்தவர் பிரிந்தவர்
மருண்டவர்  மாண்டவர்
அனைவருக்கும்
என் காதலர் தின நல வாழ்த்துக்கள் ...