FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on February 06, 2013, 12:56:39 PM

Title: நிழல் உரு!!!
Post by: vimal on February 06, 2013, 12:56:39 PM
மனதில் காதல் விதையை விதைத்தாய்,
வளர்ந்து வர அறுவடை செய்ய பயிரா
என் உயிர், பாராமல் அறுத்தாய் பாரம்
தாங்காமல் தவிக்கிறேன்!

என்னுள் தவிப்பும் தரிகெட்டுத்திரிய
உடைந்த சில்லுகளாய் தெரித்தது
சந்தோஷம்,வாழ்கிறேன் நடைபிணமாய்,
உன்னையே நினைக்கும் மனமாய்,

ஆனாலும் கூட,

வானுக்கு அழகு சேர்க்கும் நிலவைப்
போல, மங்கிய ஒளியில் மங்காத உன்
நினைவை சுமக்கும் என்னைக் கானவா
வருகிறாய் தினமும் என் கனவில்,

விழித்தெழமாட்டேன் நிஜ உருவைத்தான்
எடுத்துச் சென்றாய், நிழல் உருவாவது
காண்பேனல்லவா, என் காதல் மயக்கம்
தெளியும் வரை!!!
Title: Re: நிழல் உரு!!!
Post by: Bommi on February 07, 2013, 01:05:26 AM
விமல் அருமையான கவிதை
Title: Re: நிழல் உரு!!!
Post by: vimal on February 08, 2013, 01:46:18 PM
நன்றி பொம்மி...