FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on September 30, 2011, 11:55:22 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fblogs.southtownstar.com%2Fmoney%2Fcredit-card-main_Full.jpg&hash=6054c5269937739431d3e5e0b415793ac0508233)
அட்டை பூச்சியாய்
ரத்தத்தை உறிஞ்சுவதால்
"கடன்அட்டை"பெயர் கொண்டாயோ..
துவக்கத்தில் தெரிவதில்லை
பளபளக்கும் கடன் அட்டை
பாதாளத்திற்கு அழைத்து சென்று
நம்மை பலம் இழக்க செய்யும்
என்று..
பணத்தை நோக்கி
பயணம் செய்யும்
உலகில் பகட்டு கௌரவம்
பழகி கொள்ள முற்படும்
நடுத்தரவர்க்கம்...
பணம் கொடுத்து பொருள் வாங்குவது
தரம் தாழ்ந்த நிலையை
மாறி போனதேன்..
அட்டையை தேய்த்து வாங்கி
தேய்வது அட்டை மட்டுமா??
மூளை சலவையில்
மயங்கி கடன் அட்டை பெறுவாய்
மயக்க தீரும்
கையில் காசு இல்லாதபோது...
ஐயா என்றவன்
அடேய் என்பான்
பணத்திற்காக...
வட்டிக்கு வட்டி
வட்டி போடும் குட்டி வட்டி...
வட்டி கட்டியே குழம்பிய நிலை..
ஓயாமல் ஒலிக்கும்
தொலைபேசி
ஒவ்வொரு முறையும்
அபாயமணியாய் மாறும்
நிலை..
ஈட்டிக்காரன் கூட உணர்ந்து
பொறுத்து கொள்வான்..
வங்கிகள் எல்லாம் மறைமுக
தாதாக்கள்...
தூக்கம் மறப்போம் கடனில்
விடியும்பொழுது
வீட்டிலோ ரோட்டிலோ
அறியாத நிலை..
அழிந்துபோயின
பல குடும்பங்கள்..
மின்னுவது எல்லாம் பொன்னால
மின்னும் கடன் அட்டை எல்லாம்
உண்மையும் அல்ல...
இருப்பதை கொண்டு
இன்பமாய் இருப்போம்
எனக்கு இன்றைக்குத் தான் கடன் அட்டை புதுசா கிடைச்சது... :-\ :-\
-
ellamtherinthu konde unnai polvilum vittil poochikalai enadi solvathu ;D ;D ;D
-
adiye yethavathu urgent endra aduthavanga kita ketkama iruka thane di :D