FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 30, 2011, 07:00:56 PM

Title: கால‌ம் என்ற தூரிகை
Post by: thamilan on September 30, 2011, 07:00:56 PM
நாம் போக நினைத்தது எங்கே
வந்து நிற்பது எங்கே

பாதையை நாம்
தேர்ந்தெடுக்கவில்லை
காலம் தான்
நம் பாதையை தேர்ந்தெடுக்கிறது

தேடுவ‌து ஒன்று
கிடைப்ப‌து ஒன்று

சிற‌குக‌ளை பெற்றோம்
கைக‌ளை இழ‌ந்து விட்டோம்
புன்ன‌கை கிடைத்த‌து
இத‌ழ்க‌ளை இழ‌ந்து விட்டோம்

விள‌க்குக‌ளை அடைந்தோம்
விழிக‌ளை இழ‌ந்து விட்டோம்
நேற்று கிடைத்த‌து
இன்று ப‌றிபோய் விட்ட‌து
இன்று கிடைத்த‌து
நாளை ப‌றிபோகும் இது
கால‌த்தின் விளையாட்டு

வாழ்வில் விட்டு விட்டு வ‌ந்த‌தை
நினைத்து
பெருமூச்சி விட‌த்தான் முடியும்
பின்னால் திரும்பிப் போக‌
முடியுமா? முடியாது
நாம் ந‌திக‌ள்

மாற்ற‌ம் என்ப‌து
ம‌னித‌ வாழ்வில் மாற்ற‌முடியாத‌
ஒரு அவ‌ல‌ நாட‌க‌ம்
அதில் ம‌னித‌ன்
பாத்திர‌மாக‌வும் பார்வையாள‌னாக‌வும்
இருக்கிறான்

கால‌ம் வ‌ரையும் ஓவிய‌ம்
நாம்
அதை மாற்றி வ‌ரைய‌ அந்த‌
இறைவ‌னாலும் முடியாது
ஒரு ஓவிய‌தை பல‌ப்ப‌ல‌ வ‌டிவ‌ங்க‌ளில்
மாற்றி மாற்றி
எழுதிக் கொண்டே இருக்கிற‌து
கால‌ம் என்ற தூரிகை
Title: Re: கால‌ம் என்ற தூரிகை
Post by: Global Angel on October 01, 2011, 08:03:52 PM
Quote
நேற்று கிடைத்த‌து
இன்று ப‌றிபோய் விட்ட‌து
இன்று கிடைத்த‌து
நாளை ப‌றிபோகும் இது
கால‌த்தின் விளையாட்டு


inu kidaipathe 20 nimidathilpari opguthu  ;D ;D ;D ;D