FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on January 28, 2013, 05:04:12 PM
Title:
தொலைந்த என் வாழ்க்கை
Post by:
vimal
on
January 28, 2013, 05:04:12 PM
இயற்கையான சூழல் இருந்தும்
கூட இயந்திர வாழ்க்கையைத்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
நினைவுகள் பல என்னுள் நித்திரை
கண்டும்கூட, உன் நினைவு மட்டும்
நீங்காமல் நாழிகை விடாமல் முன்
வந்து செல்கிறது,
உன்னோடு வாழ்ந்த வாழ்க்கையே
வேறு, அளவளாவிய இன்பத்தையும்
கொடுத்து, அதனை மிஞ்சும்
துன்பத்தையும் கொடுத்தாய்,
எனக்கென பறித்திருப்பாள்போல,
இன்னும்கூட எழவில்லை, கைகள்
இருந்தும், கால்களிருந்தும்
விழுந்த உன் காதல் பள்ளத்தில்,
நிஜ வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்
விடாமல் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
நீ எடுத்துச் சென்றதை அறிந்தும்கூட
என் அறியாமையால்,
ஆசையாய் கண்ட கனவுகளை
நிராசையாக்கிவிட்டுச் சென்றாய்,
மண்ணோடு சேர்த்து மகிமை
பேசும் பெண்மையுள் உன்னைப்
பற்றியும் பேசும் இம்மண் மறவாதே!!!
Title:
Re: தொலைந்த என் வாழ்க்கை
Post by:
பவித்ரா
on
January 29, 2013, 06:00:25 PM
enda ippadi ivlo kashta padara kavithai nalla irukuda
athula un kashtam enaku purithuda
Title:
Re: தொலைந்த என் வாழ்க்கை
Post by:
Bommi
on
January 29, 2013, 07:17:44 PM
நிஜ வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்
விடாமல் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
நீ எடுத்துச் சென்றதை அறிந்தும்கூட
என் அறியாமையால்,
vimal eruma intha varigal supera iruku.Nice poem da
Title:
Re: தொலைந்த என் வாழ்க்கை
Post by:
vimal
on
February 18, 2013, 01:58:13 PM
நன்றி pavi and பொம்மி
Title:
Re: தொலைந்த என் வாழ்க்கை
Post by:
Gotham
on
February 18, 2013, 02:10:56 PM
தொலைதலின் வலியுடன் தொலைத்தலின் வலியும் சேர்ந்து
தொலைவில் தேடுகிறோம் இங்கு தொலைத்த வாழ்க்கையை
தங்கள் தேடுதல் வெற்றியடையட்டும்