FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 27, 2013, 03:25:06 AM
-
இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் உனக்காக!!
என் இதயம் துடிக்கும் நேரத்தை விட உன்னை நினைக்கும்
நேரம் தான் அதிகம்!! தூங்கும் போதும் என் நினைவில் நீ தான்!!
விழிக்கும் போதும் என் நினைவில் நீ தான் !!
கனவிலும் நீ தான் !! உன்னை மட்டுமே தேடுகிறது என் கண்கள்..
உன்னை பார்த்த அடுத்த நிமிடம்பூரித்து போகிறது என் இதயம் ..
உன்னை பற்றி மட்டுமே பேசுகிறது என் வாய் ..எப்படி உன்னால் முடிந்தது
என் அனுமதி இல்லாமலே என்னை கட்டிபோட??
உனக்கு தெரிந்த இந்த வித்தை எனக்கு தெரியாதாடி
தெரிந்து இருந்தால் உன் இதயத்தை என் வசம் கொண்டு வந்திருப்பேன்!!
அப்போது தான் என் தெரிந்திருக்கும் நான் படும் அவஸ்தை உனக்கு ..
-
சந்திக்க இயலாத தருணங்களிலெல்லாம் சந்தித்திருந்து விட்டு
பிரிய விரும்பாத தருணத்தில் பிரிந்திருக்கின்றோமடி
நேரில் சந்திக்க முடியாமல் போயினும் நினைத்த பொழுதெல்லாம்
உன்னை சந்தித்து உன் கரம் பிடித்து கூடவே நடக்கின்றதடி
என் நினைவு.....
-
varun "kadhal kavigan" superu
-
காதல் பிரிவு கவிதைகள் அழகாகவே எழுதுகின்றீர்கள் வருண் நன்று
-
Varun romba super uh iruku unga kavidai.. Enkum unga vithaigalai katru thaarungalen nanbaa.. :P ;) :o
-
நல்லாருக்கு வருண். ஒரு சின்ன சஜஷன்.. இஃப் யூ டோண்ட் மைண்ட் :o :o :o
"இதயம் துடிக்கும் நேரம் விட உன்னை நினைக்கும் நேரம் அதிகமடி.. " இந்த கற்பனை நன்றென்றாலும்.. கொஞ்சம் மாற்றியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நினைவு தப்பினாலும் இதயம் மட்டும் துடித்துக்கொண்டிருக்கும். அதுக்கேத்தமாதிரி எழுதியிருக்கலாமோ..?
சொல்லத்தோன்றியது.. தப்பென்றால் மன்னிக்க..!!