FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 26, 2013, 10:26:41 PM
-
மீட்டெடுக்க முடியாத
மெளனத்திற்குள் தள்ளி
எனக்குள் ஊற்றெடுக்கிறது
ஒரு காதல்...!
சப்தமில்லா அதிர்வுகளை
காற்றில் பரவ விட்டு
கரைந்து போன கனவுகளை
அவ்வப்போது உரசி செல்லும்
நினைவுகளை பரிசளித்து விட்டு
காணாமலேயே போனாள்...
என் காதலி...!
மறந்து விட்டேன்
என்றிருக்கையில் கனவுகளில்
வந்து கண் சிமிட்டுகிறாள்,
காதலென்ற உணர்வு ஊற்றி
நெஞ்சு நிறைக்கிறாள்,
விழித்துக் கொண்டே...
நான் காணும் கனவுகளில்
எப்போதும் என் விழித்திரையில்
காட்சியாய் விரிகிறாள்!
இறுக்கமான நிசப்தங்களில்
காதோரம் வந்து
பெயர் சொல்லி கிசுகிசுக்கிறாள்,
பதறி நான் தேடுகையில்
புத்திக்குள் கை கொட்டி சிரிக்கிறாள்...;
சொல்லாமல் கொள்ளாமல் போனாலும்
முழுதும் இல்லாமலேயே ஆனாலும்
இருக்கத்தான் செய்கிறது
மீட்டெடுக்க முடியாத
மெளனத்திற்குள் தள்ளி விடும்
ஒரு காதல்!
-
அன்பை உணர்ந்தேன்....
உன் பெயராலே உன் பெயர் சொல்லும் போதே
உள் நெஞ்சம் துள்ளுதே அன்பினை அள்ளிதந்தாய்
தாய்மையின் சாயலில் உணர்வுகளுக்கு உயிரானாய்
உண்மையின் உருவானாய் உயிருக்கு உயிரானாய்....
உன்னால்தான் உயிர் வாழ்கிறேன்.... உனக்காகநான் உயிர் வாழ்கிறேன்.
-
வருண் உங்களோட கவிதைகள் எல்லாம் சூப்பரா
இருக்கு
காதல் கவிதையால் கலக்கிய உங்களக்கு
நமது மன்றத்தின் சார்பா " காதல் கவிஞன் "
என்று பெயர் சுட்டி உள்ளேன்
-
பொம்மி நீங்க சொல்றது போல அவரு காதல் கவிஞ்சன் தான் .. வருண் உங்க காதல் கவிதைகள் நெறய தோற்றது போல் தெரிகிறதே.. தோற்ற அனுபவமோ.? மிக அருமை நண்பா..
மறந்து விட்டேன்
என்றிருக்கையில் கனவுகளில்
வந்து கண் சிமிட்டுகிறாள்,
காதலென்ற உணர்வு ஊற்றி
நெஞ்சு நிறைக்கிறாள்,
விழித்துக் கொண்டே...
நான் காணும் கனவுகளில்
எப்போதும் என் விழித்திரையில்
காட்சியாய் விரிகிறாள்!
இறுக்கமான நிசப்தங்களில்
காதோரம் வந்து
பெயர் சொல்லி கிசுகிசுக்கிறாள்,
பதறி நான் தேடுகையில்
புத்திக்குள் கை கொட்டி சிரிக்கிறாள்...;
indha varigal oru kadhai padipathai pola kaadhal kavidaiyin soolnilaiyai unrthugirathu nanbaa..
-
பின்கி காதல் ஒரு உண்மையான உணர்வு புருனமனது ...உண்மை காதல் என்றும் தோற்காது ....நான் உண்மையான காதலை தேடுகிறேன் ...நன்றி பின்கி என் கவிதையே ரசிததுகு
-
இந்த கவிதைகளை கடந்த வருடம் தேவா அவர்கள் பகிர்ந்த பொழுது எப்படியான உணர்வுகள் தோன்றியதோ அதே உணர்வு இன்று அவர் கவிதையை நீங்கள் பகிர்ந்த பொழுதும் ஏற்படுகின்றது .. சிறந்த கவிங்கர்களின் கவிதை எப்பொழுது எத்தனை தடவை படித்தாலும் தெவிட்டாத சுவையை தரும் என்பதற்கு மீண்டும் இந்த கவிதையை நீங்கள் பகிர நான் படித்ததில் தெளிவாகிறது பகிர்வுக்கு நன்றிகள் வருண் .