FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 26, 2013, 10:46:15 AM
-
பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா
பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா
பூவெல்லாம் மேடையில் பேசுதம்மா
நாளெல்லாம் "ஆசை "யை ஏசுதம்மா
அம்மம்மா அபாண்டம்
அம்மம்மா அக்கிரமம்
பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா
மல்லி முல்லை பூக்களை விடவா , ரோசா வாசம் வீசுது
தடாக தாமரை பாஷையைவிடவா ரோசபூவு பேசுது ?
வண்டின் வகை பட்டாம்பூச்சிகள் தேன் எடுக்க கூடுது
ஆசைக்கிந்த மோசம் என்ன, ரோசாவை மட்டும் பாடுது
மேடையில் பூக்களின் கண்டனக்குரல்கள் ...
பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா
அழகில் சிறந்த ஆம்பலும் இங்கே , அழுதபடியே போகுது
ஜல்லிக்கட்டு மல்லியும் கூட மல்லுகட்டி மோதுது
பூக்களின் இணை ரோசா உனை ஏன் படைத்தான் ஆண்டவன்
திட்டித்தீர்க்க தேடுது பூக்கள் பாவம் "ஆசை நாயகன் "
ஒளிகிறேன் தப்பிச்சு , மாட்டினால் போச்சு
பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா ...
உலகின்மற்ற பூக்களிடமெல்லாம் ஏதுமில்லை நிந்தனை
இருந்தும் இந்த ஏச்சுக்கள் ஏனோ ,மனதில் மிகவும் நொந்தனை
வாடை பூக்களின் மேடை பேச்சு , என் மனவலி கூட்டுது
பூக்களின் திடீர் புறக்கனிப்பென்னில் அமிலம் அள்ளி ஊற்றுது
போதும் போதும் இதயம் வலிக்குது ..
பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா ...
பூவெல்லாம் மேடையில் பேசுதம்மா
நாளெல்லாம் "ஆசை "யை ஏசுதம்மா
-
நல முயற்சி நண்பா.. முயற்சி கேற்ற பலன்..
-
வெளிர் ரோசாவே !
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றிகள் !!!!
-
நல்ல கவிஞ்சன் என்று தங்கள் நன்றிகளில் தெரிவிகிரீர்கலாகும்.??
-
ஆசைஅஜித் நல்ல கவிதைகள் நண்பா மேலும் உங்கள் கவிதைகளை எதிர் பாக்றேன்
-
நல்ல கவிஞ்சன் என்று தங்கள் நன்றிகளில் தெரிவிகிரீர்கலாகும்.??
கவிஞன் என்பதெல்லாம் எட்டாக்கனி எனக்கு
ஏதோ , எனக்கு தெரிந்த பாணியில் எழுதுகின்றேன் அவ்வளவே !
வெளி ரோசா நிறம் = பிங்க்
-
ஆசைஅஜித் நல்ல கவிதைகள் நண்பா மேலும் உங்கள் கவிதைகளை எதிர் பாக்றேன்
வாழ்த்தியமைக்கு நன்றி வருண் !!!
வெகு விரைவில் எதிர்பார்க்கலாம் !!!