FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 25, 2013, 05:04:07 AM

Title: என்னவளின் கண்ணழகு ......
Post by: aasaiajiith on January 25, 2013, 05:04:07 AM
என்னவளின் கண்ணழகு ......

அவளின் ஒளி விழிப்பார்வையினை
நேரெதிர் நின்று, காணத்துணிவின்றியே
அவ்வப்போது,  மின்வெட்டெனும்
போர்வைக்குள், கோர்வையாய்
ஓடோடி  ஒளிந்துக்கொள்கின்றாயா ?
கோழை மின்சாரமே !
*******************************************************
என்னவளின், எழில் ஒளிர்ந்திடும்
உருட்டு விழிகளின் ,மிரட்டும் அழகது,
தன் இமைச்சாளரங்களால் மூடியிருக்குமெனும்
குருட்டு தைரியத்தின் , புரட்டு நம்பிக்கையில் தான்
அனுதினமும், லட்சக்கணக்கினில்
இருட்டில்  வெளிப்படுகின்றீரோ ?
திருட்டு நட்சத்திரங்களே !!
******************************************************************************