FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 25, 2013, 01:20:41 AM
-
என்னை தேடி வந்ததும் என் எண்ணமெல்லாம் கலந்து
என்னுளே எழிலாய் நிற்பதும் எதனாலே
வார்தையொன்று பேசிடவே வசமாகியே உன் உள்ளம்-என்
வாசல் வரை வந்து சென்றதும் எதனாலே
இரவின் மடியில் நம்மிருவரும் இணைந்திருந்த நேரங்களில்
இனிமையாக ஓர் இல்லறம் எதனாலே
தெரியாததும், புரியாததும் தெளியவைத்தும் புரியவைத்தும்
தென்றலாய் என்னை வருடியதும் எதனாலே
கண் உறங்கும் வேளையிலும் கண்ணாடி முன் நிற்கும் வேளையிலும்
கண் முன் தோன்றி மறைவதும் எதனாலே
கொஞ்சமாய் கொஞ்சும் குரலிசை கெஞ்சும், உன் நெஞ்சம்
மலர்மஞ்சம் நிதம் வேண்டுவதும் எதனாலே.
என் வானின் நிலவும் இன்று சூரியனாய் உன்னையே நினைத்து
எரிவதும் எதனாலே
உன்னையே நினைத்து உருகிகொண்டிருக்கும் என்னுயிரை
உன் மௌனத்தால் இவ்வேளையில்
மெது மெதுவாய் கொல்வதும் எதனாலே.
-
உன்னையே நினைத்து உருகிகொண்டிருக்கும் என்னுயிரை
உன் மௌனத்தால் இவ்வேளையில்
மெது மெதுவாய் கொல்வதும் எதனாலே.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி வருண்
கண்டிப்பா பேசுவாங்க
கவிதை சூப்பர்
-
உன்னை ஒவ்வொரு நிமிடமும்
நினைக்கும் போதும் என் இதயம் கணத்து
தான் போகிறது. என்ன ஆனாலும்
என் உயிர் உள்ள வரை உன்னை காதலித்து
கொண்டு தான் இருப்பேன்
என் சுவாசமாக......
-
உன்னையே நினைத்து உருகிகொண்டிருக்கும் என்னுயிரை
உன் மௌனத்தால் இவ்வேளையில்
மெது மெதுவாய் கொல்வதும் எதனாலே
.
காதல்னா இதெல்லாம் சகஜம் போல
-
நல்ல கவிதை வருண்
-
varun unga kavidaiku comments podave kavinjaraa thaan irukanum pola.. avvalavu arumaiyana kavidai thangaludayathu.. "kaviyarase varun"
-
haha pinky neeum kavithai yani thana kandipa unaku pidikamaya erkum