FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 24, 2013, 08:27:27 PM
-
எத்தனை சோதனைகள் என் காதல் மீது மனதை கேட்டுபார்
உன் உயிர் சொல்லும் நான் உன் மீது கொண்ட காதலை, நம்பிக்கையை
மௌனமாய் இருக்க மனதும் இடம் கொடுக்கவில்லை விடை பெற பாதையும்
தெரியவில்லை. என்னை சித்திரவதை செய்வதை விட உன் கையால் கொன்றுவிடு
என் மனதில் இன்னும் மாறாமல் இருக்கிறது,
நாம் சேர்ந்து வாழ்ந்த இனிய நாட்கள் !
கொஞ்சி பேசி மகிழ்ந்த நேரங்கள்!
செல்லமாய் சண்டை போட்ட நிமிடங்கள்!
கோபத்தில் கொட்டி தீர்த்த வார்த்தைகள்!
மறுபடி சமாதானத்தில் ஒன்று கலந்த உணர்வுகள்!
பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட தருணங்கள்!
கண்களால் மட்டுமே பார்த்து கழிந்த பொழுதுகள்!
பிரிவின்போது தவித்த துடித்த நெஞ்சம்!
எதுவுமே மாறவில்லை மறைவில்லை
ஆனால் நீ மாறிவிட்டாய் மறைந்து விட்டாய்??.
-
varun unga lover terrora iruppangalo.......
nice varigal varun
-
வருண் நல்ல கவிதை.....
பொம்மி பொதுவாக பெண்கள் எல்லாரும் காதல் விஷயத்துல டெரர்தான்.... ;D
-
கண்களால் மட்டுமே பார்த்து கழிந்த பொழுதுகள்!
பிரிவின்போது தவித்த துடித்த நெஞ்சம்!
இந்த வரிகள் மிக நன்று.. வருண் உங்கள் காதலி என்ன துரோகம் செய்து விட்டால் என்று ஒவொரு கவிதையிலும் அவளை வடுகிரீர்கள்.. அருமையான கவிதை..
உங்களிடம் இருந்து காதலில் ஜெயித கவிதை ஒன்றை எதிர்பார்கிறேன்.. நீங்கள் இதுவரை அப்படி ஒரு கவிதை எழுதியதை தோன்றவில்லை நண்பா..
-
பின்கி காதல் கவிதைகள் என்றும் இனிமை தன அனல் இனிமேல் நான் எழுந்தும் கவிதைலாம் நம் நட்பு பற்றி தன காதல் காதலி விட நட்பே சிறந்தது