-
வெள்ளம்!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F428002_502112163172451_1040671572_n.jpg&hash=31974ed053417956d888f0a910cc925d4a5782ec)
திடீரென்று வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தண்ணீரில் மிதக்க, எல்லோரும் இங்கும் அங்குமாக ஓடினார்கள். குட்டீஸ் எல்லாம் தண்ணீரில் தத்தளிக்க, அவர்களை ஒரு பக்கமாக இழுத்து உட்கார வைத்தவள், ''இதுக்குதான் சொன்னேன், ஏரி ஓரமா வீட்டைக் கட்டாதீங்கன்னு... இப்பப் பாருங்க எல்லாம் நாசம்!'' என்று கத்த,
''சரி, என்ன செய்றது... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுது. கவலைய விடு. எல்லாரையும் கூட்டிக்க, வேற இடத்துக்குப் போயிடுவோம்'' என்று பெருசு சொல்ல, குடும்பம் குடும்பமாக வேறு இடத்தில் புற்று வைக்கக் கிளம்பியது அந்த எறும்புக் கூட்டம்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F74144_500333666683634_1378336608_n.jpg&hash=f6e7267715c12f9b08766f55ff93c4be2f5fda3c)
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே...! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.
நீதி: தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்...!
-
"புத்திசாலித்தனம்"(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F408494_498323240218010_1307127094_n.jpg&hash=1560fbb3c43f7764f0aa487ff1e16e455ee05861)
ஆசிரியர் வகுப்பிலே நன்றாக படிக்கும்மூன்று மாணவர்களை எழுப்பி ஆசிரியர் கேளவி கேட்டார்..
''தேர்வில் எவ்வளவு மார்க்கு வாங்குவாய்'' என்று..
முதலாமவன்'' நான் மாவட்டத்திலே முதல் மார்க்குவாங்குவேன்..'' என்றான
இரண்டாமவன்.''.நான் மாநிலத்திலே முதல் மார்க்கு வாங்குவேன்.''என்றான்..
.
ஆசிரியர் ''அவர்கள் சொல்லிவிட்டார்கள்.
.அவர்களைவிட பெரிதாய் சொல்லமுடியாது'' என்றார்..
.
மூன்றாவன் சொன்னான்.''.இந்த வகுப்பிலேயே முதல் மார்க் வாங்குவேன்..''.என்றான்...
ஆசிரியர் வாயடைத்து போனார்..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F303634_495252743858393_1909018925_n.jpg&hash=ae53b9c938d219802342cdefc21cb92c5bf840ba)
முல்லா வேலையிலிருந்து வீடு திரும்பியதும்சட்டையைக் கழற்றினார்.அந்த சட்டையை வாங்கிய அவரது மனைவி அதில் ஒருநீளமான கருப்பு முடி இருந்ததைப் பார்த்ததும் அவள்மிகுந்த கோபத்துடன்,''நீ ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்,''என்று கூறி சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.
''வழியில் ஒரு கூட்டத்தில் புகுந்து வந்தபோது யாருடைய முடியாவது ஒட்டியிருக்கும்,''என்று முல்லா கூறிய சமாதானம் எடுபடவில்லை.அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்..பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் முல்லா வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும?
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F580554_494731337243867_1524919255_n.jpg&hash=e4892d42a7f425613fab22d03a034189ea496b2f)
தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை என்றபுகாருடன் ஒரு துறவியைத் தேடிப்போனார் ஓர் இளைஞர்.
“சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்” என்று துறவி அழைத்தார். வழியில் தென்பட்ட மரமொன்றை இறுகக் கட்டிக்கொண்ட துறவி, “இந்த மரம் என்னை விடமாட்டேன் என்கிறது” என்றலறி ஆர்ப்பாட்டம் செய்தார்.
அவர் கைகளை விடுவிக்க இளைஞர் முயன்றார். துறவியோ மரத்தை இறுகப் பற்றியிருந்தார்.
குழப்பமடைந்த இளைஞரிடம் சொன்னார். மரம் என்னைப் பற்றவில்லை என்று உனக்குத் தெரிகிறதல்லவா? உன் பலவீனங்களைக் கூட நீதான் பற்றியுள்ளாய். நீயாக அதைவிட நினைத்தால் நிச்சயம் விடலாம்” என்றார் துறவி.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F262628_485169771533357_183427848_n.jpg&hash=01a61b3bd0105709f7577366cc1061c3082345d2)
ஒரு தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்.கணவன்,மனைவி இருவருமே கருப்பு.மூன்று குழந்தைகளும் கருப்பு.
இப்போது நான்காவது குழந்தை பிறந்திருக்கிறது.அந்த குழந்தை சிவப்பாக பிறந்துள்ளது.கணவனுக்கு மனைவியின் மீது கடும் சந்தேகம் ஏற்பட்டது.கணவன் மனைவியிடம் உண்மையை சொல்லுமாறு பலவாறு கேட்டான்.
மனைவி கடைசிவரைஇந்தக் குழந்தைக்குத் தகப்பன் அவன்தான்என்று கூறிக்கொண்டே இருந்தாள்.ஒரு நிலையில் அவன் கோபம் கட்டுக்கடங்காமல் போனபோது அவன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுவிட்டு,''சாகும் முன்பாவது உண்மையை சொல்லிவிடு,''என்று கோபமாகக் கேட்டான்.அவள் அப்போதும் ,''இந்தக் குழந்தை உன் குழந்தை தான்,''என்று அவன் தலையில் கைவைத்து சத்தியம்செய்தாள்.கணவனுக்கு தான் தவறு செய்து விட்டோமோ என்கின்ற ஆதங்கம் வந்து விட்டது.கனிவுடன் அவளை நோக்கினான்.அப்போது அவள் அவனை அருகில் அழைத்து,''நான் சாகும் முன் நீண்ட நாட்களாக உங்களிடம் மறைத்த உண்மையை இப்போது சொல்லி விடுகிறேன்.இந்தக் குழந்தை உங்கள் குழந்தை என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.ஆனால்முதல் மூன்று குழந்தைகளும் உங்கள் குழந்தைகள் அல்ல.''
-
(கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி தாங்க)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F525926_483131165070551_366413961_n.jpg&hash=c9e2e71d7950e76b2e54eba1d17c440d71968156)
ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் .அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ளவச்சு அவன் வந்த பைக் பஞ்சர்ஆய்ருச்சு.உடனே பக்கத்துலபார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.
அங்க இருந்த துறவி சொன்னாரு .தம்பி நேரம்வேறு போயிருச்சு இந்தஇருட்டுக்குள்ள நீங்கஊருக்கு வண்டியசரி பண்ணி போகனுமா ?பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு .உடனே இவனும்சரின்னு ஒத்துக்கிட்டான்.அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரியசத்தம் .ஆனா ஒருத்தரும்எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும்அப்படியே படுத்து தூங்கிட்டான்.
மறுநாள் காலைல வண்டியசரிபண்ணிட்டு போகும் போது.அந்தசத்ததுக்கானகாரணத்தை தலைமை துறவிகிட்டகேட்டான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது.நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார் .இவனும்வந்துட்டான் அப்புறம் ஒரு வருடம்கழிச்சு அதே வழிய வரும்போது அதே மாதிரி வண்டி பஞ்சர்ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது .அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது .
இவனும் மறு நாள்காரணம் கேட்டான் .ஆனா தலைமை துறவி அப்பவும்சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்மறுபடியும்மூன்றாவது தடவையும்இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம்கேட்டான் .அவர் அப்பவும்மறுத்தார் .உடனே இவனுக்கு கோபம்வந்துருச்சு .ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க .ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான்.அதுக்கு அவரு நீயும் என்னமாதிரி துறவி ஆனா சொல்றேன்அப்படின்னார் .
உடனே இவனும் வீட்டுக்கு போய்எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாகவந்துட்டான் .வந்ததும் அவரு இவனதவம் பண்ண சொன்னார் .இவனும்பண்ணினான் ஆறு மாதம் கடுமையா தவம் இருந்தபிறகு அந்ததலைமை துறவி இந்தாப்பா இந்தசாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில்இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான்.அங்கஇன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி .அதுக்கு பதில் கண்டு புடிச்சபிறகு அடுத்தசாவி தருவேன்னு துறவி சொன்னார்.இவனும் கண்டு பிடிச்சான்அடுத்தசாவியும் தந்தார் .இவன்தொறந்தான் . அப்புறம்இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில்கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவதொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்கதுறவியாகனும்.
( பாவி பயலுக எனக்கும்இப்படிதாங்க அனுப்புனாங்க )
-
தென்னாலிராமன் கதை !!!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F483635_482698395113828_425121175_n.jpg&hash=d827d190bc3305c554c4e7b6e7c15778e1610e32)
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.
ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
-
(கதைய முழுசா படிக்காம நீங்களா முடிவு பண்ணகூடாது (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F432265_482151821835152_368497445_n.jpg&hash=c76c9797dc1ff82169fcabce7dccd0dcb17e1cb3)
ஊரில் ஒரு பெரிய மனுஷன்.
புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள...தன் மகன்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தாராம்.
ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி... தன் வீட்டின் ஒரு அறையை பூராவும் நிறைக்க வேண்டும் என்பதே அந்தப் போட்டி.
ஒரு மகன் விவசாயி.
ஆயிரம் ரூபாய்க்கும் வைக்கோலாய் வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.
ஆனால் பாவம், அறை கால்வாசிகூட நிரம்பவில்லை.
அடுத்த மகன் வியாபாரி.
ஆயிரம் ரூபாய்க்கும் பஞ்சு வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.
ஆனால் பரிதாபம், அறை அரைவாசிகூட நிரம்பவில்லை.
கடைசி மகனோ அரசியல்வாதி.
அவன் ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுவர்த்தி அறையில் ஏற்றினானாம்.
அறை முழுவதும் ஒளியால் நிரம்பியது.
பெரியவர் மற்ற இரு மகன்களைப் பார்த்து பெருமையாய் சொன்னாராம்.
"புரிந்ததா புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று.?"
கேட்டதும் மகன்கள் இருவரும் தலையைக் குனிய, அரசியல்வாதி மகனின் பிஏ தனக்குள் முணுமுணுத்தானாம்.
"ஆமாமா... எந்த லூஸாவது 'மீதி தொள்ளாயிரத்து தொண்ணூதொம்பது ரூபா எங்கே'னு கேட்டுச்சா பாரு.!!!".
.
.
அந்த லூசுங்க நாம் தானா ???
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F18820_481669951883339_1163824361_n.png&hash=e02dd260daf3027a0b48a07f0b18b19f67640de1)
கணவனும் மனைவியும்
ரோடில் சென்று கொண்டிருந்தார்கள்...
அப்போது அந்த மனைவியின் கழுத்தில் கிடந்த செயினை ஒரு திருடன் அறுத்துகொண்டு ஒடினான்..
அவளின் கணவன் விடவில்லை...அவனை விடாமல் துரத்தி அருகில் வந்துவிட்டான்..
''நில்லுப்பா..உன்னிடம் முக்கியாமான ஒன்று சொல்லவேண்டும்..'' கத்தினான் கணவன்..
திருடன் கேட்பற்காக வேகத்தை குறைத்தான்..
''அது கவரிங்..செயின்..உனக்கு ஒன்றுக்கும் உதவாது..''என்றான் இவன்.
.
அப்போதுதான் பார்க்கிறான்..கவரிங் செயின்..திருடன்
திரும்ப விட்டெறிகிறான்.
..
''ரொம்ப நன்றிப்பா..பவுன் செயின் வேனும்னு கேட்டுகிட்டு இருந்தால் என் மனைவி..இனிமேல் கேட்கமாட்டாள்..''என்றான் கணவன்..
எல்லாம் நல்லதறக்கே..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F320580_480778255305842_1145467169_n.jpg&hash=4e8b3f168ab584da7be55209a8e877ebbbb9337e)
ஓவியப் போட்டி ஒண்ணு நடந்தது. சின்னப் பசங்க நிறையப்பேரு படம் வரைஞ்சு கொடுத்தாங்க. ஒரு பையன் கொடுத்த பேப்பர் மட்டும் வெள்ளையா இருந்தது.
மாஸ்டருக்குப் பயங்கர கோபம்.
என்னடா இது ?னு கேட்டார்.
ஒரு ஆடு புல் திங்கற ஓவியம் சார். னான் பையன்.
மாஸ்டருக்குக் குழப்பமாயிடுச்சு, ஆடு, புல் எல்லாம் எங்கேடா ? னார்.
புல் எப்படி இருக்கும் சார் ? அதுதான் ஆடு தின்னுடுச்சேன்னான் பையன்
அப்படின்னா ஆடாவது இருக்கணுமே.. .? னார் மாஸ்டர்.
புல் இல்லாத இடத்தில் ஆட்டுக்கு என்ன சார் வேலை ? அதனால் ஓடிப் போயிடுச்சுன்னான் பையன்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F532031_480385372011797_1166806589_n.jpg&hash=f4d9fb124dc4f7b099128768b77f4becf8053004)
ராம்லால் சேட் அடகுகடைக்கு ரமாசாமியும் , குப்புசாமியும் ஒரு மோதிரத்தை விற்ப்பதற்காக வந்தார்கள்..
" யோவ் சேட்டு ...இது என் பேமிலி மோதிரம் ..விக்கலாம்னு வந்திருக்கேன் .வச்சிகிட்டு ஒரு அஞ்சாயிரம் குடு.."
மோதிரத்தை வாங்கி பார்த்தார் சேட்டு ,
" இந்த மோதிரத்துக்கு அஞ்சாயிரம் குடுக்க முடியாது..வேண்ணா சேட்டு ஆயிரம் குடுக்குறான்.. " என்றார்
" ஒங்கிட்ட உள்ள கெட்ட பழக்கம் இதுதானே..எவனாவது கஷ்டத்துல விக்க வந்தா அடிமாட்டு விலைக்கு கேப்பே ..சரி சரி..குடுய்யா? "
சேட்டு குடுத்த ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டு வெளியே வந்தார்கள் ராமசாமியும் குப்புசாமியும்..
அப்போது குப்பு சாமி கேட்டார் ..
" மாப்பிளை ..பத்தாயிரம் ரூபா மோதிரத்தை ஆயிரம் ரூபாய்க்கு வித்திருக்கியே ..ஒனக்கு அறிவு இருக்காய்யா ? "
அதற்கு ராமசாமி, " மச்சான்..அது நேத்துதான் என் பொண்டாட்டி ஐநூறு ரூபாய்க்கு வாங்குன கவரிங் மோதிரம்..அது தெரியாம அந்த கூமுட்டை ஆயிரம் குடுத்து வாங்கிருக்கான்..அதனால எனக்கு ஐநூறு ரூவா லாபம் " என்றார் ..
சேட்டு வீட்டில்.. சேட்டிடம் அவர் மனைவி கேட்டார் ,
" அதை பாத்தாலே கவரிங் நகைன்னு தெரியுது..அதுக்கு போயி ஆயிரம் ரூவா குடுத்துருக்கீங்களே ..ஒங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? "
" அப்படி இல்லை சீதா..அவன் குடுத்தது கவரிங் நகைன்னு எனக்கும் தெரியும்..ஆனா நான் குடுத்தது ஆயிரம் ரூபாயோட கலர் ஜெராக்சுன்னு தெரியாம வாங்கிட்டு போறான் அந்த கூமுட்டை ..அதனால எனக்கு ஐநூறு ரூவா லாபம் " என்றார் சேட்டு ..
-
சிங்கத்துடன் தான் மோதுவேன்..!!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F64617_479967108720290_113831293_n.jpg&hash=0f289de43bfc2225954b266c2b782cf5dcb526cf)
நல்லதம்பி ஒரு நாள் சர்க்கஸ்
பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர கூட்டம். நம்மூரு
அரசியல்வாதிகளை விட நல்லா வித்தை காட்டிக்கிட்டிருந்தாங்க. அப்ப
பாத்தீங்கனா பயங்கர பில்டப்போட ஒரு சிங்கம் வந்துச்சு. பின்னாடியே
ஒரு பொண்ணும் வந்துச்சு. சிங்கம் வாயில ஒரு சாக்லேட் வச்சுக்கிட்டு நிக்க, அந்த பொண்ணு தன் வாயேலே அந்த சாக்லேட்ட எடுத்துட்டா.
பயங்கர கைத்தட்டல்.
இப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த ரிங் மாஸ்டர் கூட்டத்தை பார்த்து 'யாருக்காவது இப்படி செய்ய தில் இருந்தா மேடைக்கு வாங்க' னு கூப்பிட்டார். நல்லதம்பி படார்னு எந்திரிச்சு மேடை ஏறிட்டார்.
ரிங் மாஸ்டர் நல்லதம்பியை ஒரு லுக் விட்டுட்டு சிங்கம் வாயில
இன்னொரு சாக்லேட்ட வச்சுட்டு இப்ப எடுங்க அப்படின்னார்.
ரிங் மாஸ்டரை முறைச்சு பார்த்த நல்லதம்பி
'என்னைய என்னா நினைச்சீங்க? சிங்கம் செய்யறத நான் செய்கிறேன். அந்த பொண்ண வந்து எடுக்க சொல்லுங்க' அப்படின்னாரு.
எப்புடி ??
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F15983_476101042440230_1848393757_n.jpg&hash=8eaee5c3d30f4405f6be4daa73c675f13f4d3fe9)
தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஆடம்பரமாக செலவு செய்யும் ஒரு மனிதனுக்கு வாய்த்த மனைவியோ கடும் சிக்கனக்காரி.
அந்த மனிதன் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்.தான் இறந்தபின் தன் கல்லறை கூட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் தான் இறந்து விட்டால் தன் மனைவி நன்கு செலவு செய்து தனது விருப்பப்படி கல்லறையை அமைக்க மாட்டார் என்று திடமாக நம்பினார்.எனவே அவர் உயிருடன் இருக்குபோதே ஒரு சிறந்த கட்டடக் கலைஞரை வைத்து நிறைய செலவு செய்து தனக்கென்று ஒரு கல்லறையை அமைத்தார்.அந்தக் கல்லறையில் ''அமைதியாக ஓய்வெடு ''என்றும் கல்லிலே அழகாக எழுத ஏற்பாடும் செய்தார்.சில மாதங்களில் அவர் இறந்து போனார்.அவர் உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.உயிலில் அவர்,''வாழ்க்கையை நான் நன்கு அனுபவித்தேன்.நான் எதுவும் சேமிக்கவில்லை. நான் யாருக்கும் எந்த சொத்தையும் விட்டுச் செல்லவில்லை.''என்று குறிப்பிட்டிருந்தார்.அதைக் கேட்டவுடன் அவர் மனைவிக்கு வந்ததே கோபம்!அவர் நேரே கல்லறைக்கு சென்றார்.''அமைதியாக ஓய்வெடு ''என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்தார்.
உடனே ஒரு ஆளை வரவழைத்து அந்த வாக்கியத்துக்கு முன்,''நான் வரும்வரை''என்பதனை சேர்த்து விட்டார். .
# டுமீல்.... டுமீல்....
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F533529_475223282528006_1523428034_n.jpg&hash=b061c6b64b4f915221bd2cff638c99e775a8849b)
ஒரு கப்பலில் மேஜிக் நிபுணர் எப்போதும் நிகழ்ச்சி நடத்துவார்...
அவருடன் எப்போதும் ஒரு கிளி கூடவே இருக்கும்...
மேஜிக் நிகழ்ச்சியை அந்த கிளி கூடவே இருந்து பார்த்து நிகழ்ச்சிகளை பார்த்து அலுத்து போனது..
ஒரு அளவுக்கு பொருள்களை மறையவைத்து மீண்டும் கொண்டு வந்துவிடுவார்..அந்த மேஜிக் நிபுணர்..
.ஒரு எல்லைக்கு மீறி நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை என அந்த கிளிக்கு ஆதங்கம்..
ஒரு நாள் இரவு நிகழ்ச்சி மேஜிக் நிபுணர் நடத்தி கொண்டிருந்த போது அந்த கப்பல் பாறையின் மீது மூழ்கிவிடுகிறது..
அந்த கிளியும் அந்த மேஜிக் நிபுணர் மட்டுமே தப்பிக்கிறார்கள்..
அந்த மேஜிக் நிபுணர் ஒரு தீவில் மயக்கத்துடன் ஒதுங்குகிறார்...மயக்க நிலையில் இருந்த நிபுணரை கிளி பறந்து வந்து அருகில் உட்கார்ந்து பார்துகொண்டேஇருக்கிறது...
மயக்கம் தெளிந்த மேஜிக் நிபுணரை பார்த்து கேள்வி கேட்கிறது..கிளி
''நான் தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறேன் ...கப்பலை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் ''என்று கேட்டது..
நடந்த்து என்ன என்று தெரியாமல்..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F556867_473927329324268_4235689_n.jpg&hash=717c332b7fb73360390fd9ec3028d9a634ba2fa0)
ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர்மேல் சீடனுக்குக் கோபம்.
தன் நேரம் விரைவதாய் வருந்தினான். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளைத் திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார்.
பத்தும் பத்துத் திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக் களைத்தான்.
கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர்.
சில நிமிடங்களிலேயே பிடித்தான். குருநாதர் சொன்னார்
“ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று.
பலவற்றையும் பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F598500_470684172981917_1349504215_n.jpg&hash=ee48e8d5bb6b7a65b7d4e29a00ef2d370f1f51e5)
( இந்த கதை பதிமூன்று வயது சிறுமி எழுதியதாக ராஜேஸ்குமார் நாவலில் பலவருடங்கள் முன்னால் படித்த ஞாபகம் )
ஒரு கோயிலின் உச்சியில் ஒரு புறாவும் அதன் குஞ்சும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது ..ஒருநாள் கோயிலில் திருவிழா வரவே வெள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்..எனவே புறாவும் அதன் குஞ்சும் பறந்து சென்று ஒரு மாதாகோயிலின் உச்சியில் கூடுகட்டி வாழ்ந்தது..
மாதா கோயிலிலும் திருவிழா வரவே அங்கேயும் வெள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்..மீண்டும் அந்த புறாவும் அதன் குஞ்சும் பறந்து சென்று ஒரு மசூதியின் உச்சியில் கூடுகட்டி வாழ்ந்து வந்தது..அந்த சமயத்தில் ஊருக்குள் மதக்கலவரம் வெடிக்க ஆரம்பித்தது...ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாய்ந்தார்கள்..
அதைப் பார்த்துக்கொண்டிருந்த குஞ்சு புறா , தாய் புறாவிடம் கேட்டது ,
" ஏம்மா மனிதர்கள் ஒருத்தொருக்கொருத்தர் வெட்டிக்கொண்டு சாகிறார்கள்.."என்று.
அதற்கு தாய் புறா சொன்னது..." மனிதர்களுக்கு மதம் பிடித்துவிட்டது..அதனால்தான் அவர்கள் வெட்டிக்கொண்டு சாய்கிறார்கள் .."
" அப்படியானால் நமக்கு ஏன் மதம் பிடிப்பதில்லை..?" என்று குஞ்சு புறா கேட்டது..
உடனே தாய் புறாவும் ," நாமெல்லாம் பறவைகள் நமக்கு மதம் பிடிக்காது..அது மனிதர்களுக்கு மட்டுமே பிடிக்கும்.." என்றது..
மறுபடியும் குஞ்சு புறா , " அப்படியானால் மனிதர்களைவிட நாம் தானே உயர்ந்தவர்கள்.." என்று கேட்டது..
அதற்கு தாய் புறா சொன்னது, " அதிலென்ன சந்தேகம் அதனால்தான் நாம் மனிதர்களைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் .." என்று
-
ஒரு நாள் ஒரு குட்டி Rat, ஒரு பெரிய Cat கிட்ட மாட்டிகிச்சு. Ok யா!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F546976_468993073151027_289848258_n.jpg&hash=b6fecc5d08e8524880fbaa8b78790f0425011508)
Rat சொல்லுச்சு “Cat அண்ணா, Cat அண்ணா! நான் எங்க அப்பா அம்மாக்கு ஒரே பையன். என்னிய சாப்டாதீங்க. விட்டுடுங்க ப்ளீளீளீஸ்”னு சொல்லிச்சு. அதுக்கு Cat என்ன சொல்லுச்சு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
“ம்யாவ்”னு சொல்லிச்சு.
கதை கேக்குற வயசா இது. போய் வேலையாப் பாருங்கப்பா!!!
-
ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F542828_468729416510726_1664451444_n.jpg&hash=e6283be40b515756b69193ff317b47830852e093)
கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.
ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.
ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.
"நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல்". என உறுமியது ஓநாய்.
""ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என கழுதை கூறிற்று.
ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.
கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து,
ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.
கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F416907_466536563396678_1729831487_n.jpg&hash=f7006b9a11521383e112e9436b2655ccfaf94f61)
ஏழை ஒருவன் தெய்வ வரம் பெற்ற தன நண்பன் ஒருவனைச் சந்தித்தான்.வரம் பெற்ற நண்பன் எழைக்குஉதவும் பொருட்டு
,ஒரு செங்கல்லை எடுத்து தன சுட்டு விரலால் தொட்டான்.அது தங்கமாக மாறியது.அதை ஏழைக்குக் கொடுத்தான்.
ஏழைக்கோதிருப்தி ஏற்படவில்லை
.இன்னொரு கல்லை எடுத்து த்தன்சுட்டு விரலால் தொட்டு தங்கமாக்கி அவனிடம் கொடுத்தான்.அப்போதும் எழைக்கு திருப்தி ஏற்படவில்லை.'
'உனக்கு என்ன தான் வேண்டும்?''என்று நண்பன் கேட்டான்.'
'உன் சுட்டு விரல்''என்று பதில் வந்தது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F633_465281500188851_268434174_n.jpg&hash=badaa41935db60677e8ea2c42e61e0b8c0cfb1b7)
ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.
கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.
அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.
தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது. அனைவரும் அதிசயத்துடன் மகிழ்ந்தார்கள்.
நீதி: வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.
-
யார் முட்டாள்...யார் புத்திசாலி...?(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F69159_465197990197202_21873974_n.png&hash=7aba798a5f5560b12bc06ff8b1517978af0a80d1)
விலையுர்ந்த கார்...உயர்ந்த விலையுள்ள சுத்தமான ஆடை...மிகுந்த பணமுள்ளவர்,,அவர் காரில் வந்து இறங்குகிறார்.. ஒருவர்..
அங்கே அழுக்கான ஆடை...கையில் எதும் பணமில்லாதவர்...கைவண்டி இழுக்கிறவர்
அந்த வண்டியில் உட்கார்ந்துகொண்டு அந்த இரவு வேளையில் ஆனந்தமாக பழைய பாடலை பாடிக்கொண்டு இருக்கிறார்..
அவனைஅந்த பணக்காரர் பார்த்த்தும்.. ''எதுவுமே இவனிடம் கிடையாது..இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறானே...ஓருவேளை முட்டாளாக இருப்பானோ.. ''என எண்ணுகிறார்...
இதில் யார் புத்திசாலி..?
.எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பவன் புத்திசாலியா
.
பணம் இருந்தால்தான் மகிழ்ச்சி என்று நினைப்பவன் புத்திசாலியா..
பணக்காரனாய் இருப்பவனுக்கு மகிழ்ச்சி இருந்தால்கூட
எதோ ஒன்று குறைந்தால் மகிழ்ச்சி போய்விடும்..
ஆனால் அவனுக்கு எப்போதும் மகிழ்ச்சியே
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F530754_464219193628415_529940390_n.jpg&hash=bdabfd4fb177939771c819dc1e0f7f0ae6c914f5)
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.
உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.
இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.
அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.
உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.
அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.....
நன்றி பாபு நடேசன்...
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F549008_461671383883196_1775721409_n.jpg&hash=7b1fbb1c78c0cf589443efd5edd6e48b434ef609)
புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து
காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.
ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.
திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.
அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல.
இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.
இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.
-
"கொஞ்சம் குசும்பான கதை"(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-frc1%2F576377_461131080603893_961036200_n.jpg&hash=71f820e22271246e9aeea5d4cf8b99842f3cf08a)
நாட்டை ஆண்டு கொண்டிருந்த
மன்னருக்குத் திடீரென
ஒரு சந்தேகம் உதித்தது!.
உடனடியாக
அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும்,
புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன்,
ஆனால் இந்த
நாட்டிலும் முட்டாள்கள்
இருப்பார்கள் அல்லவா?
“ஆம் மன்னா!”
“அப்படியானால் அவர்களில் முதல்
5 முட்டாள்கள் யார்??
அவர்களைத் தேடிக்
கண்டுபிடித்துக் கூட்டிக்
கொண்டு வருவது உம் பொறுப்பு”
என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை,
புத்திசாலியைக் கொண்டு வரச்
சொன்னால்
ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக்
கொண்டு வரலாம்.
முட்டாளைக்
கொண்டு வரச் சொன்னால்??
என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே,
“சரி மன்னா” என்று ஒத்துக்
கொண்டார்.
ஒரு மாதம்நாடு முழுவதும் பயணம் செய்து 2 பேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.அதைப்
பார்த்ததும் மன்னர்,
“அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ?”
“இல்லை மன்னா! முதலில்
நடந்ததை விளக்க அனுமதிக்க
வேண்டும்!” என்றார் அமைச்சர். “தொடரும்”என்றார் மன்னர்.
“மன்னா! நான் நாடு முழுவதும்
சுற்றும்போது, இவன்
மாட்டு வண்டியின் மேல்
அமர்ந்து கொண்டு தன்
துணி மூட்டையைத் தலைமேல்
வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன்
அவ்வாறு செய்கிறாய்? எனக்
கேட்டதற்கு
என்னைச்
சுமந்து செல்லும்
மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல் லவா?
அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் 5வது மிகப்
பெரிய முட்டாள்.”’ என்றார்
அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல்
வளர்ந்த புல்லை மேய்க்க,
எருமையைக் கூரைமேல்இழுத்துக்
கொண்டிருந்தான், இவன்தான் நம்
நாட்டின் 4வது மிகப்
பெரிய முட்டாள்”
களிப்படைதோம் அமைச்சரே!
களிப்படைதோம்! சரி,
எங்கே அடுத்த முட்டாள்?
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினைகள்
எவ்வளவோ இருக்கும்போது,
அதையெல்லாம்
விட்டுவிட்டு முட்டாள்களைத்
தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிரு ந்த நான்தான்
3வது முட்டாள்.”
மன்னருக்குச்
சிரிப்பு தாங்கவில்லை,
விழுந்து விழுந்து சிரித்தார்.
பின்னர் “அடுத்தது” என்றார். ””நாட்டில்
எவ்வளவோ பிரச்சினைகள்
இருக்கும்போது அதைக்
கவனிக்காமல் முட்டாள்களைத்
தேடிக் கொண்டிருக்கும்
நீங்கள்தான் 2வது” என்றார்அமைச்சர்.
ஒரு நிமிடம்
அரசவையே ஆடிவிட்டது. யாரும்
எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம்
உள்ளது. நான் செய்ததும்
தவறுதான்” என ஒத்துக் கொண்டார்
மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்?” அமைச்சர் சொன்னார்.”
மன்னா!
அலுவலகத்திலும், வீட்டிலும்
எவ்வளவோ வேலைகள் இருந்தாலும்
அதையெல்லாம்
விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன்
வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப்
பெரிய முட்டாள்
யாரென்று தேடிக்
படித்துகொண்டிரு க்கிறாரே இவர்தான்
அந்த முதல் முட்டாள்!”:
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F223677_460850827298585_891159270_n.jpg&hash=2dd9a50a44ec5b620d82fe847dec608f169b878f)
இரவில் தங்குவதற்கு ஒரு லாட்ஜூக்கு வந்து அறை காலியாக இருக்கிறதா என்று கேட்டான் ஒருவன்.தனி அறை எதுவும் இல்லை. இரண்டு பேருக்கான ஓர் அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள். அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இன்னொரு கட்டிலில் நீங்கள் ஓசைப்படுத்தாமல் போய் படுத்து தூங்கலாம்” என்றார் விடுதிக்காரர்.வேறு வழியில்லாததால் வந்தவனும் அதற்கு சம்மதித்து அந்த அறைக்குப் போனான்.அடுத்த பத்தாவது நிமிடம் அவன் அலறியடித்துக் கொண்டு கீழே வந்தான். ‘அந்தப் பெண் செத்தல்லவா போய்விட்டாள் என்றான்.
“அது எனக்கு தெரியும். உனக்கு எப்படி அது தெரிய வந்தது?
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F182502_460611497322518_904078404_n.jpg&hash=595c0fe86c8141dd0745438a5970a677fcc81387)
ஒரு குரு தனது சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது,
பாவம் செய்பவர்களை நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில்
எப்படிப் போட்டு வாட்டுவர் என்பது பற்றி விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்
.பின் அவர்களிடம்,''நீங்கள் சொர்க்கம் போக விரும்புகிறீர்களா,நரகம் போக விரும்புகிறீர்களா?''என்று கேட்டார்.
சீடர்கள்,''குருவே,நீங்கள் எங்கே செல்ல விரும்புவீர்கள்?''என்று கேட்டனர்.
குரு மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்,'' நான் சிறு வயதில் நிறைய தவறுகள் செய்துள்ளேன்
.எனவே நான் நரகம்தான் செல்வேன்
,''உடனே சீடர்கள் அனைவரும் ஒரே குரலாய்,'
'அப்படியானால் நாங்களும் நரகம் தான் வர விரும்புகிறோம்.'' என்றனர்
.குரு திகைத்துப் போனார்
.கண்களில் நீர் மல்க.''என்மீது உங்களுக்கு அவ்வளவு பக்தியா?''என்று கேட்டார்
.சீடர்கள் சொன்னார்கள்
,''நரகத்தில் உங்களை எண்ணெய்க் கொப்பரையில் எப்படி போட்டு வாட்டுவார்கள் என்று நாங்கள் பார்க்க வேண்டாமா?''
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F269907_460223687361299_1083421727_n.jpg&hash=655c51baa72bd9cd09bc96518135897fc1ff3ab5)
ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.
மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர்.
விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,
''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க
வேண்டும்,''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.
கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த
நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது.
திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்
.இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.
ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.
ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.
இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F564927_459627420754259_1080289461_n.jpg&hash=efe4ad604d5f45d0ca29d6f1b7e2bf5a49003ebb) (http://www.friendstamilchat.com)
நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன.மெலிதாய் காற்று
வீசிக்கொண்டு இருந்தது. காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல்
மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது,நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது.காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’
என்று அணைந்துவிட்டது.அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள்
போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற
வைத்துகொள்’ என்றது.
சிறுவன் உடனே …… ‘ நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன் பெயர் என்ன ?”என்று கேட்டான் . நம்பிக்கை என்றது மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F385684_459437350773266_1615319232_n.jpg&hash=87f85aa5fc4424d5baf84e2645e9992e4a3dac96)
ஓர் அடர்ந்த காடு தீடிரென தீப்பற்றி கொண்டுவிடுகிறது..
ஓரு குருடனும் முடவனும் இதில் மாட்டிக்கொள்கிறார்க்ள..
அவசரமாக தீயில் இருந்து தப்பித்தாக வேண்டும்..
ஒருவருக்கு பார்வை கிடையாது..ஓருவரால் நடக்க முடியாது..
இருவரும் ஒர் ஒப்பந்த்திருக்கு வருகிறார்கள்..
குருடர் முதுகில் முடவரை சுமப்பது என்றது..
முடவர் வழிசொல்ல குருடர் நடப்பது என்று..
தீயில் கருகமால் காட்டில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள்..
பத்திரமாக..
குருடர் என்று சொல்லப்படுவர் நமது மனது..
வழி சொல்லும் முடவர் நமது அறிவு..உள்ளுணர்வு.
மனது ...அறிவு..உள்ளுணர்வை சரியாக கேட்டு நடந்தால் நாமும் வாழ்க்கையில் பத்திரமாக செல்லலாம் ..செல்லவேண்டிய இடத்துக்கு.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F553939_459128197470848_9624785_n.jpg&hash=5fd86cb48364a6d65427a5a7c7286e00fb966d3a)
ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.
ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 20ரூபாய் விலை குறைந்தது.
எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்து விட்டார்கள். அடுத்தநாள் 20 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை
எடுத்துக் கொண்டு போனான். ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப்
போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.
-
அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!
“இது யாருடைய படம்?” என்று இவன் கேட்டான்.
“என் தாத்தா…ஜமீன்தாராய் இருந்தவர்” என்றான் நண்பன்.
” ம்…அன்னைக்கு என் கையில் மட்டும் 20 ரூபாய் இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்” என்றான் இவன்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F480367_459011407482527_1510106967_n.jpg&hash=ba6b522b380b4129288d22e6335cb84576f30f2b)
ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு யானை இருந்ததாம். பெரீய யானை. அந்த யானை தும்பிக்கையும் தந்தமுமாக ‘அங்கிட்டும் இங்கிட்டும்’ அலைந்து கொண்டிருப்பதை அந்த காட்டிலே இருக்கும் ஒரு பூரான் பார்த்ததாம். யானை பிளிறியபோது காடு முழுக்க அது கேட்டதாம். பூரான் ‘அய்யோ நான் என்றைக்கு அந்த மாதிரி காடுமுழுக்க கேட்கிறமாதிரி கத்தப்போகிறேன்’ என்று நினைத்ததாம். சரி இந்த யானையை கடித்து வைப்போம். அது கத்தும். அந்தக் கத்தலை கேட்பவர்கள் ஏன் கத்துகிறது என்று கேட்பார்கள். அப்போது நம்மைப்பற்றி நாலுபேருக்கு தெரியும் என்று நினைத்ததாம்.
அந்தப் பக்கமாக யானை வந்தபோது பூரான் நறுக் என்று கடித்ததாம். யானைத்தோல் கூடாரத்தோல் தானே? யானைக்கு வலிக்கவில்லை. கொஞ்சம் அரிப்புதான் எடுத்தது. சொறிந்துகொண்டு சோலியைப் பார்க்கப் போயிற்றாம்
ஆனால் பூரான் விடவில்லை. தேடிப்போய் மீண்டும் கடித்ததாம். பூரான் கடிக்கக் கடிக்க யானைக்கு அந்த சொறியும் சுகம் ரொம்பப் பிடித்துப் போய்விட்டதாம். அதனாலே யானைக்கு பொழுது போகாதபோது அதுவே பூரானிடம் வந்து காலைக் காட்டி கடிவாங்கி சொறிந்து மகிழ ஆரம்பித்ததாம். பூரானுக்கும் சந்தோஷம் இம்மாம்பெரிய யானையே நம்மளை தேடிவருதே என்று. யானைக்கு காலில் கடிபடுவது அலுத்துப்போய் முதுகிலும் தும்பிக்கையிலும் எல்லாம் பூரானை பிடித்துவிட்டு கடிவாங்கும் வழக்கம் ஏற்பட்டதாம்
அப்டியே கொஞ்சநாள் போயிற்றாம். ஒருநாள் யானையிடம் அதன் ·ப்ரெண்ட்ஸ் கேட்டாங்களாம். ‘அதென்ன கையிலே வைச்சிருக்கீங்க?’ன்னு .யானை சொல்லிச்சாம்’இதுவா? இது ஒரு பூரான். காது குடையறதுக்கு வச்சிருக்கேன்..சும்மா உள்ள விட்டு குடைஞ்சா ஜிர்ரின்னு இருக்கும்’னு.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F431748_458695274180807_316924782_n.jpg&hash=30fbab2a911077d286729c453f5176803e971773)
அருகே ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவன் இரண்டு பெரிய பெட்டிகளை சுமக்க முடியாமல் சுமந்து வந்து நின்றான்.
நின்றவன் வந்தவனிடம்,''இப்போது நேரம் என்ன?என்று கேட்டான்.
உடனே அவன் ஒரு கைக் கடிகாரத்தை.பையிலிருந்து எடுத்து ஒரு பொத்தானை அமுக்கினான்.உடனே அக்கடிகாரத்தில் நேரம் தெரிந்ததோடு ஒரு இனிமையான குரலில் நேரமும் சொல்லப்பட்டது
.நின்றவன் அதிசயத்துடன் அந்தக் கடிகாரத்தைப் பார்க்க
,வந்தவன்,''அது மட்டுமல்ல.இந்தக் கடிகாரத்தில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன
.''என்று கூறியவாறு இன்னொரு பொத்தானை அமுக்கினான்.உடனே ஒரு சிறிய தொலைகாட்சி திரையில் யாரோ செய்தி வசித்துக் கொண்டிருந்தான்.
பின் இன்னொரு பொத்தானை அமுக்க இனிமையான இசை ஒலித்தது.
பிரமித்துப் போய் அந்தக் கடிகாரத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று எண்ணி அதன் விலையைக் கேட்டான்
.அதன் விலை ஐந்து ஆயிரம் ரூபாய் என்றதும் மறு பேச்சு பேசாமல் அந்தக் கடிகாரத்தை வாங்கிக் கையில் கட்டி கொண்டு கிளம்பினான்.
சிறிது தூரம் சென்றவுடன்,பிரதிநிதி அவனைக் கூப்பிட்டு,
''இந்த கடிகாரத்திற்குரிய பேட்டரிகளை வாங்காமல் செல்கிறீர்களே?''என்று கேட்டவுடன்,'
'அமாம்,,மறந்து விட்டேன்.எங்கே,பேட்டரிகளைக் கொடுங்கள்,'' என்று கேட்டவுடன்
அவன் தான் கொண்டு வந்த இரண்டு பெரிய பெட்டிகளைக் காண்பித்து
,''இதனுள்தான் பேட்டரிகள் உள்ளன.எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்றவுடன் கடிகாரத்தை வாங்கியவன் மயங்கி விழுந்தான்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F579346_458397670877234_32099166_n.jpg&hash=211999ccc040eaa8e737d8f47a86da7097298efe)
அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F425858_458256340891367_1760400651_n.jpg&hash=0cb252c82ab3deb5c1fbeb15d7fa16fd48339f87) (http://www.friendstamilchat.com)
குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த
சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.
புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர்,
“என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார்.
“எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்
கொண்டிருந்தேன்”.
சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி,
புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி,
பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.
தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி
, “நான் யார் தெரியுமா!” என்றார்.
சிறுவன் சொன்னான்.
“தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!!”
கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F208208_457915140925487_1706467197_n.jpg&hash=532e5dd97d1d2f64b600979c3b353790406aeee8)
ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை
.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார்.பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.
அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார்.
ஒரு பையன் அனுப்பப்பட்டான்.துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார்
.பின்னர் கேட்டார்,
''தம்பி,உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.கடவுள் எங்கே?சொல்,கடவுள் எங்கே இருக்கிறார்.?'
'அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான்.
அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.அவன் சொன்னான்,
''நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம்.இப்ப கடவுளைக் காணோமாம்.
அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான்.
ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள்
இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.''
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F62507_457416240975377_914566120_n.jpg&hash=af46c5406e7d2e2ee7c9e67e3a431ff50daad792)
இது நடந்தது அமெரிக்கவிலன்னு வச்சுக்கோங்க..
ஒரு நாய் படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது.அது கடித்து விடும் நிலையில் அந்த நொடி ஒரு மனிதன் சடாரென உள்ளே புகுந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.
அதை ஒரு பத்திரிக்கை நிருபர் லைவ்வாக பார்த்து கேமராவில் பதிவு செய்து கொண்டார்.அந்த மனிதனை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன் தலைப்பு செய்தியே இது தான்,'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"
ந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"
திரும்பவும் அவன்,"இல்லை நான் அமெரிக்கனில்லை, பாகிஸ்தானி"
மறு நாள் வந்த தலைப்புச் செய்தி,
"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F578520_457007567682911_801470349_n.jpg&hash=2bdfec9adeae797b9323b62e33e2ccc95aa3fa7b)
கடவுளுக்கு பொழுது போகவில்லை..
தீடிரென கீழே இறங்கி வந்தார்..
யாருக்காவது வரம் கொடுக்கலாம் என்று..
அப்பொழுது எதிரே வந்தார் பஸ் கண்டக்டர் ஒருவர்..
கடவுள் அறிமுகபடுத்திகொண்டார் தான் யார் என்று.
விரும்பியவரத்தை கேட்க சொன்னார்.
கண்டக்டர்
''எனக்கு ஒரே பிரசினை..
அது .சில்லரை பிரசினை..ஆனால் இது பெரிய பிரசினை.
டிக்கெட் வாங்குபர்கள் யாரும் சில்லரை தருவதில்லை..டிக்கெட் வாங்குபவர்கள அனைவரும் சரியான சில்லரை தரவேண்டும் என தரவேண்டும்..அப்புறம் ஏதும் எனக்குபிரசினை
இல்லை.''..
''பூ..இவ்வளவுதானே...தந்தேன்..''மறைந்தார் கடவுள்..
பஸ்ஸில் டிக்கெட் போட ஆரம்பித்தார்..
அனைவருமே சரியான சில்லரையை நீட்டினர்..
கிழித்துகொடுத்த்து மட்டுமே வேலை..
கண்டக்டரக்கு மகிழ்ச்சி..
நேரம் செல்ல செல்ல அவரது பை நிரம்பி வழிந்த்த.து
ஒரு டிரிப் முடிந்த்துமே அவரது சில்லரை கணத்தால் பையை தூக்க முடியவில்லை..
அடுத்த ட்ரிப் பஸ்ஸை எடுக்கும்போதே சில்லரை வேண்டாம் நோட்டாய் கொடுங்கள என்றார்..
அனைவரும் சில்லரையை நீட்டினர்..
மேலேயிருந்த கடவுள் குரல் கொடுத்தார்..''நீ வாங்கி வந்த வரம் அப்படி..எல்லோரும் சில்லரை தான் கொடுப்பார்கள...''என்று.
அன்று மாலைக்குள் தூக்கமுடியாத அளவு சில்லரை சேர்ந்த்து..
எவ்வளவுதான சில்லரையை சுமப்பது..
கண்டக்டருக்கு வேலையே அலுத்து போனது.
..''.நான தவறு செய்துவிட்டேன்..கொடுத்த வரத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும்..''அழைத்தார்..கடவுளை..
''புரிந்துகொண்டேன்..புரிந்துகொண்டேன்..சில்லரை கொடுக்கிறார்களோ நோட்டு கொடுக்கிறார்களோ இன் முகம் காட்டவேண்டும்..ஏன் என்றால் இரண்டும் தேவைதான் என்று..''என்றார் கடவுளிடம்
-
ஒரு பணக்காரன், வந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம்.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F208176_456657087717959_545312270_n.jpg&hash=e38e9ff221bf4641343df1ca5c1d06644e77b635)
''என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?'' என்று புலம்பினான்.
''அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?'' என்று கேட்டார்.
''ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.''
''அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?''
''கொஞ்சம் பேர்தான் வத்திருக்கிறார்கள்.''
''சரி, எத்தனை பேர் சொந்தமாய் கார் வத்திருக்கிறார்கள்?''
பணக்காரன் யோசித்தான்.
''அதுவும் ரொம்பக் கொஞ்சம் பேர்தான்.''
''ஊரில் உன்னைப்போல; எத்தனை பேரிடம் பணம் இருக்கிறது?''
''என்ன கேள்வி இது ? ஊரிலேயே பெரிய பணக்காரன் நான்தான்!''
''உன் ஊரில் அத்தனை பேர் இருந்தும் நீ ஒருவன்தான் பெரிய பணக்காரனாய் இருக்கிறாய். இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கொடுத்தாய் என்று இறைவனை கேட்டிருக்கிறாயா?''
இந்தக் கேள்விக்கு பணக்காரனிடம் பதிலில்லை.
சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்க !!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F58383_456355211081480_1272885534_n.jpg&hash=e978ca14f57a9102a6ce5b408abfbb16a06a74e6)
ராமசாமி வயலலில் விளைந்தகாய்கறிகளை மூட்டையில் கட்டி அதனை தனது கழுதையி ல் எற்றி வைத்துகொண்டு தானும் உடகார்ந்து கொண்டுதான் சந்தைக்கு போவார்
அன்றைய தினம் அவரது கழுதை மிகவும் சோர்ந்து உடல் நலமில்லாமல் இருந்த்து...
ராமசாமீக்கு கழுதையை பார்த்து கஷ்டமாக இருந்த்து..
மனைவியிம் ..''.இன்னைக்கு நான தான் மூட்டையை சுமக்கவேண்டும் ''என்று சொல்லியவாறு மூட்டையை தலையில் வைத்துக்கொண்டு கழுதையின் முதுகில் அமர்ந்து சந்தைக்கு புறப்பட ஆரம்பித்தார்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F522917_456210494429285_1689650599_n.jpg&hash=b5a394779342ee0066bc9828e449888ad4c086bc)
தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது.
என்னது? நான் அழகா?
ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்
ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி,
உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது.
ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.
இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது.
அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.
நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F47192_455821661134835_2002359015_n.jpg&hash=fb2c6ff91f8653cca6ade083bdcf065854261bc4)
வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.
வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"
மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் எனக்கு தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நீயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.
மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்! அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமலேயே வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!
அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்.
-
எதற்கும் கவலை கொள்ளாதே..!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F430389_454586027925065_1396389118_n.jpg&hash=4a77c8f4819cb7b325dd6baf2f952cbbf1caa155) (http://www.friendstamilchat.com)
ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் சென்று, "என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!" என்று கனிவோடு பேசினர். அதற்கு அந்த விவசாயி "இருக்கலாம்" என்று சொன்னார்.
மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் "எவ்வளவு அற்புதம்" என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று கூறினார்.
அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான். ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது. அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று சொன்னார்.
மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால் உடைந்த அந்த இளைஞனை பார்த்து, சென்றுவிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து "என்ன பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்றுவிட்டனர்" என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கும் அந்த விவசாயி "இருக்கலாம்" என்றே கூறினார்.
ஆகவே "எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்" என்பது நன்கு இக்கதையின் மூலம் புரிகிறது..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F560421_454234761293525_1142551002_n.jpg&hash=b0bc594cbf28e95ac30d7bc1668fbdef8a8c3e07) (http://www.friendstamilchat.com)
ஊருக்கு வெளியே வனப்புறத்தில் இடத்தை தேர்ந்து எடுத்து கெளசிகர் கடும் தவம் புரிந்துவந்தார்..
இவர் தியானத்தில் இருக்கும்போது மேலே பறந்த பறவை எச்சமிட்டது இவர் மேல் விழுந்துவிடுகிறது..
கோபத்துடன் பறவையை அண்ணாந்து பார்க்கிறார்...
இவர் பார்வை பட்டவுடன் எரிந்து கீழே விழுந்துவிடுகிறது...
இவருடைய தவ வலிமை இவருக்கே பெருமைகொள்ளவைக்கிறது...
மதிய உணவுக்காக ஊருக்குள் வருகிறார்...
முனிவர்கள் உணவை பிச்சை கேட்டு உண்பதுதான் அந்த காலத்தில் மரபாக இருந்தது.
கெளசிகர் ஒருவீட்டீன் முன் பிச்சை இடுமாறு குரல்
கொடுக்கிறார்..
''கணவனுக்கு உணவு பரிமாரிக்கொண்டிருக்கிறேன்..காத்திருங்கள்.''.எனவீட்டின் உள்ளே இருந்து பதில் அளிக்கிறார் வீட்டில் இருந்த பெணமணி..
கெளசிகருக்கு என்னை காத்திருக்க சொல்கிறாயா...கோபம் வருகிறது..
மறுபடியும் குரல் கொடுக்கிறார் முனிவர்..
பெணமணியோ எதற்கும் அசை
யவில்லை..தனது வேலையை முடித்துவிட்டு உணவுடன் வருகிறார்
..
கெளசிகர்'' பெண்ணே..நான் யார் என்று தெரியுமா என்னையே காக்க வைக்கிறாயா..? '' எனகிறார்..
''நீங்கள கெளசிகர் என்று தெரியும்..ஆனால் நான் பறவை அல்ல உங்கள் பார்வை பட்டதும் எரிந்து போவதற்கு.''.எனகிறார் பெண்மணி..
முனிவர் அதிர்ந்துபோகிறார்..வீட்டில் உள்ிள பெணமணீக்கு இவவளவு சக்தியா...?
'' நான் இல்லறத்தில் முழுமையாக இருக்கிறேன்..நீங்கள் தவத்தில் முழுமையே நோக்கி உள்ளீர்கள்..அவ்வுளவுத்தான்..கணவனுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன் ..அதில் முழுமையாக உள்ளேன்..அதன் பலம்தான இந்த ஞானம்''..எனகிறார்..
வியந்து போய் நீதான் எனகுரு என விழுகிறார்...
................................................................................................
புரணக்கதை தான ..ஆனாலும் ஒரு செயலில் முழுமையாக ஈடுபடவேண்டும் எனபதை மட்டும் சொலகிறது..
கணவனாயிருந்தாலும் சரி..
மனைவியாய் இருந்தாலும் சரி.
இந்த உறவில் அர்பணிப்பாக இருங்கள்.
வெளியே நடப்பதை பற்றி கவலை இல்லை..
மழையே பெய் என்றால் கூட பெய்யும்..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F57963_454128431304158_1416945739_n.jpg&hash=f495f7199cb6cd097f55b65f7e11f00b512df8cc) (http://www.friendstamilchat.com)
வீடு வீடாய் சென்று புத்தகங்கள் விற்பவன் அந்தச் சிறுவன்.
ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.
கடுகடுப்பாய் கதவைத் திறந்த பெரியவர்,
“இங்கே யாரும் இல்லை! வீணாகத் தொந்தரவு செய்யாதே!” என்று கத்தினார்.
சற்றே திறக்கப்பட்ட கதவின் வழியாய் பத்துப் பதினைந்து நாய்கள் தெரிந்தன.
மறுநாள் மீண்டும் கதவைத் தட்டினான் சிறுவன்
கதவைத் திறந்து கத்த வாய் திறந்த பெரியவர் கண்கள் மலர்ந்தன.
சிறுவன் கைகளில் சின்னச் சின்ன நாய்க்குட்டிகள் இரண்டு.
பெரியவருக்குக் கிடைத்தது இரண்டு நாய்க் குட்டிகளும் ஒருபேரனும்..
தேவைகள் அறிந்து துணையாய் இருந்தால்
சேவைகள் அதைவிட எதுவும் இல்லை
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F397309_453354211381580_2034002611_n.jpg&hash=2e812a81c2c37dece7293621f814a8ad60a8de74) (http://www.friendstamilchat.com)
அவன் மனைவி ஒரு பேரழகி.
ஊரே அவனைப் பொறாமையாகப் பார்த்தது.
அவனுக்கு ஊர் மீதும் நம்பிக்கையில்லை, மனைவி மீதும் நம்பிக்கை இல்லை.
ஒரு சமயம் அவன் படைக்குத் தலைமை ஏற்று போருக்குப் போக வேண்டியிருந்தது. மனைவியைத் தனியாக விட்டுப் போக வேண்டியிருப்பது உறுத்தலாக இருந்தது. மனைவியின் இடையை இரும்புத் தகடுகளால் மூடிப் பூட்டினான்.
சாவியை உயிர் நண்பனிடம் கொடுத்தான்.
“நண்பா, இந்த உலகத்தில் உன்னைத் தவிர யார் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனைவி மேல் கூட நம்பிக்கை இல்லை. இந்த சாவியை வைத்துக் கொள். ஒருவேளை போரில் நான் இறக்க நேரிட்டால் இவளது அழகும் இளமையும் வீணாகக் கூடாது என்பதால்தான் சாவியை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.” என்று நாத்தழுதழுக்க சாவியை ஒப்படைத்தான்.
நண்பனும் கண்களில் நீர் முட்ட விடை கொடுத்தான்.
அவன் குதிரையில் ஏறிப் புறப்பட்டான்.
வீதியின் கோடியை அடைவதற்குள், பின்னால் யாரோ அழைக்கிற சப்தமும், ஓடி வருகிற சப்தமும் வந்தது.
திரும்பினான்.
மூச்சிரைக்க ஓடி வந்தது அவன் நண்பன்.
“என்ன நண்பா?”
“தப்பான சாவியைக் கொடுத்து விட்டாய்”
-
முயலும் ஆமையும்(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F199293_449330261783975_702209265_n.jpg&hash=4e1510fdefdb9facbee115d6f59718aa6538fa48)
முயல் ஒரு நாள் ஆமையைச் சீண்டிக்கொண்டிருந்தது. தன்னிடமுள்ள ஐ பேட் பற்றியும் விலையுயர்ந்த கணினி பற்றியும் பீத்திக்கொண்டிருந்தது. தன்னால் தன்னிருப்பிடத்திலிருந்தே எதையும் சாதிக்க முடியும் என்று அதனுடைய பெருமைகளை எல்லோருக்கும் பறை சாற்றிக்கொண்டிருந்தது.
ஒரு நாள் முயலும் ஆமையும் ஊர் செல்லவேண்டிய காரணத்தால் ஆமை டிக்கெட் பதிவு செய்ய கிளம்பியது. வழக்கம் போல முயல் "நீ திரும்பி வருதற்குள் நான் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து விட்டு வேறு வேலை கவனிக்கப் போய் விடுவேன்" என்று கிண்டலடித்தது.
ஆமை தனது நேரத்தை நொந்து கொண்டு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மிதிமிதியென்று ரயில் நிலையத்திற்கு சென்று வரிசையில் நின்று சில்லரை கொடுதது டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்பியது. முயல் என்ன செய்கிறது என்று பார்க்க அதனுடைய அறைக்குள் நுழைந்தது. முயல் அதனுடைய ஐடியையும் பாஸ்வார்ட்டையும் கொடுத்து விடடு வெயிட் பண்ணி பண்ணித்துாங்கிப் போயிருந்தது. கணினியில் பச்சை வட்டம் சுழன்றுகொண்டேயிருந்தது.
-
''பெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?'' (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F227991_448625058521162_1767332976_n.jpg&hash=19307f05c328ad2c7e2bdfd72fa449f754401213)
''சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், 'அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், 'எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’
அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை 'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.
ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் 'நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.
ஆசிரியை கோபமாக, 'உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, 'டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!''
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F73939_447769738606694_403793127_n.jpg&hash=29f99a236e7a4f5d8097070382071e4b02ded73a)
ராமசாமிக்கு தீடிரென தலைவலி..
அவரது வீட்டருகே டாக்டர் சேகர் எனபுதியபோர்டு பார்த்திருந்தார்..
அவரிடம் சிகிச்சை பெறலாம் என்று அங்கு சென்று அவர் முன் அமர்ந்தார்.
''டாக்டர் எனக்கு காலையிலிருந்து..''என்று ஆரம்பித்தவுடன் டாக்டர் வழி மறைத்தார்..
''உங்கள் பெயர் என்ன ''என்றார்..டாக்டர்
''ராமசாமி'' என்றார்..
''உடனே ராமசாமி க்கு எல்லாம் வைத்தியம் செய்வதில்லை ''என்றார்..டாக்டர்
''நீங்கள் ஒரு டாக்டர்..யார்வந்தாலும் வைத்தியம் செய்யவும்.இது உங்கள் கடமை ''என்றார் ராமசாமி
''உங்களுக்கு வைத்தியம் செய்யவே முடியாது..''எனகிறார் டாக்டர்
ராமசாமிக்கு கோபம் தலைக்கு எறியது..
''இந்த பிரசினையை இந்தியன் மெடிக்கல் அசோசியசன் எடுத்து செல்லப்போகிறேன்..நான சும்மா விடப்போவதில்லை..உங்கள் முகவரியைசொல்லுங்கள் '''என்றார் ராமசாமி..
அவரும் அமைதியாக ''டாக்டர் சேகர்..கால்நடைமருத்துவர்..நம்பர் 12..பத்தாவது கிராஸ்..சிவசாமி நகர் ''என்றார்...
இப்படியும் சத்தம் போட்டு மாட்டி கொள்கிறவர்களும் இருக்கிறார்க்ள.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F387424_447520078631660_2039696962_n.jpg&hash=6cbb38a2ca6c13496127215fc2df7b91bfddba8a)
அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.
அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.
“நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.
அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள்,
“அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”.
அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,
கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.
ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.
அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.
குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F534333_447160165334318_700809460_n.jpg&hash=9f4ecc3b8047b88dfbeba9f99e046bcbffcc4cfb)
ராமசாமிக்கு தீடிரென தலைவலி..
அவரது வீட்டருகே டாக்டர் சேகர் எனபுதியபோர்டு பார்த்திருந்தார்..
அவரிடம் சிகிச்சை பெறலாம் என்று அங்கு சென்று அவர் முன் அமர்ந்தார்.
''டாக்டர் எனக்கு காலையிலிருந்து..''என்று ஆரம்பித்தவுடன் டாக்டர் வழி மறைத்தார்..
''உங்கள் பெயர் என்ன ''என்றார்..டாக்டர்
''ராமசாமி'' என்றார்..
''உடனே ராமசாமி க்கு எல்லாம் வைத்தியம் செய்வதில்லை ''என்றார்..டாக்டர்
''நீங்கள் ஒரு டாக்டர்..யார்வந்தாலும் வைத்தியம் செய்யவும்.இது உங்கள் கடமை ''என்றார் ராமசாமி
''உங்களுக்கு வைத்தியம் செய்யவே முடியாது..''எனகிறார் டாக்டர்
ராமசாமிக்கு கோபம் தலைக்கு எறியது..
''இந்த பிரசினையை இந்தியன் மெடிக்கல் அசோசியசன் எடுத்து செல்லப்போகிறேன்..நான சும்மா விடப்போவதில்லை..உங்கள் முகவரியைசொல்லுங்கள் '''என்றார் ராமசாமி..
அவரும் அமைதியாக ''டாக்டர் சேகர்..கால்நடைமருத்துவர்..நம்பர் 12..பத்தாவது கிராஸ்..சிவசாமி நகர் ''என்றார்...
இப்படியும் சத்தம் போட்டு மாட்டி கொள்கிறவர்களும் இருக்கிறார்க்ள.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F251609_446768098706858_1729861813_n.jpg&hash=3ada0f0cfcebf7c4511c6e73c941d5b86523b491) (http://www.friendstamilchat.com)
அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல் துறை அதிகாரி வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான்.
அவனிடம் "காந்தியைச் சுட்டுக் கொன்றது யார்?"
என்று கேள்வி கேட்கப் பட்டது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த அவனைப் பார்த்து
"நீங்கள் போகலாம்" என்றனர்.
வெளியே வந்து அவனைப் பார்த்த நண்பன் ஒருவன்
"என்ன வேலை கிடைத்து விட்டதா?" என்று கேட்டான்.
அதற்கு அவன் "நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது பற்றி
என்னிடம் பேசினார்கள்" என்றான்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F222166_446404155409919_1383038324_n.jpg&hash=807cb36daab9a067cc411367470a8b9a5d50f547)
ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.
கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.
அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.
தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது.
Moral: சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்பவனே வெற்றி பெறுவான்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F296385_446291652087836_771047952_n.jpg&hash=e89eaab9b580e831523c10032d106cbb1fea9207)
அந்த விருந்தில் எளிய ஆடைகளுடன் நுழைந்தார் ஒரு கவிஞர்.
பலரும் கண்டுகொள்ளவில்லை.
பகட்டான ஆடையணிந்து வந்தார்.
பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர்.
அவர் கவிதைகளைப் படிக்காமலேயே புகழ்ந்தனர்.
உணவுண்ண அழைத்ததும்,
உணவு வகைகள் ஒவ்வொன்றாய் எடுத்து உடைகளில் தெளித்துக் கொண்டார்.
அதிர்ந்து நின்றவர்களிடம் அமைதியாகச் சொன்னார்,
“ஆடைகளை வைத்துத்தானே ஆளை மதிக்கிறீர்கள்.
எனவே, பகட்டான ஆடைகளுக்குப் பந்தி வைக்கிறேன்.”
அவர்தான் கவிஞர் ஷேக் சாதி.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F262915_446013915448943_557365790_n.jpg&hash=a743e2ef028b6b70be5c94a255b68be587b092c9)
யோகவாசிஷ்டத்தில் உள்ள கதை ஒன்று...
அபூர்வமான சிந்தாமணி வைரக்கல் ஒன்றை தேடி காட்டுக்கு புறப்படுகிறார் ஒருவர்.
யாருக்கும் எளிதில் கிடைக்காது..விதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்..
அதுவும் எளிதில் கிடைக்காது..
அப்படியே இருந்தாலும் பல மாதங்கள் வருடங்கள்கடுமையாக தேடினால் தான் கிடைக்கும்..எனகிற எச்சிரிக்கை அறிவுறுத்தல்படி தேடி புறப்படுகிறார்..
ஆனால் காட்டில் நூழைந்த சில நிமிடங்களிலே கிடைத்துவிடுகிறது..அந்த சிந்தாமணி வைரக்கல்
ஆனால் நிச்சயமாக இருக்கமுடியாது என்றுநழுவ விடுகிறார்..
கடைசி வரை அவரால் திரும்பஅந்த கல்லை கண்டுபிடிக்கவில்லை..
இதுபோல் தான் எல்லோரும் அபூர்வமாக கிடைக்கும் எல்லாவாற்றையும் இழந்து நிற்கிறோம்...
அல்லது மதிப்பு தெரியாமல் இருக்கிறோம்..
ஆம்..நமது...மனைவி..மக்கள்..நண்பர் உட்பட..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F578480_443414815708853_494773197_n.jpg&hash=d572056e7961a51afc2806674ef844be1856690c)
ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.
"ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்" என்றார்.
மாணவர்கள் மிகவும் தயங்கினர் ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,
"எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல்....இனியாவது நன்றாக கவனியுங்கள்"
இதிலிருந்து நீங்கள் கற்கும் நீதி " எப்போவும் அலர்ட் ஆறுமுகமா இரு".
-
கல்லூரியில் கணித வகுப்பு.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F296681_442466449137023_1096420828_n.jpg&hash=e5e736d9e860f586cc7c912ff3b959f4c8cbbceb)
உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத
இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர்
, அவை இன்றும் புரியாத புதிர் என்றார்.
சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான்.
அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது.
அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள்
என்று நினைத்து குறித்துக்கொண்டு போனான்.
மறுநாள் விடையுடன் வந்தான்.
அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன்தான்
ஜார் ஜ்டாந்த்ஸிக்.
அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம்,
“அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.
எனவே என்னால் முடிந்தது”.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F551909_441695182547483_271189956_n.jpg&hash=3003719775c2c46b9e4582236f63ffbcc3ac984e)
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.
சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F314198_441359279247740_1556140681_n.jpg&hash=28d784e2f02d1ba62fab71d332c640f88f3fbd2f)
தன்னை மகா ஞானியாக கருதிக் கொண்ட ஒருவர் முல்லாவிடம் விவாதம் புரிந்து,தனது மேதாவித்தனத்தைப் பறைசாற்ற விரும்பினார்.தனது விருப்பத்தை முல்லாவிடம் தெரிவித்துக் கொண்டார் முல்லாவும் ஒப்புக்கொண்டார்.முல்லாவின் இல்லத்திலேயே ஒரு குறிப்பிட்ட நாளில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்தில் அந்த மஹா ஞானி முல்லாவின் இல்லத்திற்கு வந்தார். அனால் முல்லா வேண்டுமென்றே அந்த நேரத்தில் வேறெங்கோ சென்றுவிட்டார். வெகு நேரம் முல்லாவிற்காக காத்திருந்த ஞானி பொறுமை இழந்து எரிச்சலுடன் வெளியேற முடிவு முடிவு செய்தார்.
அப்போது ஒரு சுண்ணக் கட்டியால் முல்லாவின் வீட்டுக் கதவில் "அறிவு கெட்ட கழுதை" என்று எழுதிவிட்டு சென்றார்.அவர் சென்ற பின் முல்லா வீடு வந்து சேர்ந்தார் வாசற்கதவை பார்த்தார் தம்மோடு விவாதிக்க வந்தவர்தான் கோவத்தில் எப்படி எழுதி இருக்கிறார் என்று புரிந்து கொண்டார் .
முல்லா சிறிது நேரத்தில் அந்த ஞானியின் வீட்டிற்கு சென்றார்.அவரிடம் முல்லா "அறிஞர் பெருமானே தாங்கள் என்னை பொருத்தருள வேண்டும் தங்களை நன் வர சொன்ன நேரத்தில் வேறொரு வேலையாக வெளியே சென்று விட்டேன். வீடு திரும்பியதும் தான் தாங்கள் வந்து சென்றதை தெரிவிக்கும் வகையில் வாசற் கதவில் உங்கள் பெயரை எழுதி விட்டு சென்றதை அறிந்து தங்களிடம் மன்னிப்பு கேட்க ஓடோடி வந்தேன் "என்று அடக்கமாக கூறினார்.இதற்க்கு அந்த ஞானியால் பதில் ஏதும் கொடுக்க முடியாமல் அந்த மகா ஞானி அசடு வழிந்தார்.
-
(எப்போது நினைவுக்கு வந்தாலும் சரி ..சிரிப்பு வரும்)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F399598_440905379293130_1080754774_n.jpg&hash=4386671c67acd28f318410b5f68f95e504fe5ecc)
அந்த அரசனுக்கு தீடிர் ஆசை..
பழச்சுவையின் மீது தீடிர் மோகம்..
தான் சுவைக்காத அரிய பழத்தை கொண்டு வந்தால் ஆயிரம் பவுன் பரிசு..
மக்கள் முன் அறிவித்தான்..
மக்கள் தங்களுக்கு கிடைத்த பழங்களை எடுத்து கொண்டு வரிசையில் நின்றனர்..
ஆனால் அதில் ''கண்டிஷன் அப்ளை'' இருந்தது..
இம்சை அரசர்களும் உண்டல்லாவா..
அரசருக்கு தெரிந்த பழமாக இருந்தால் அவர் வாயிலே திணித்து அனுப்பிவைக்கப் படுவாகள்..
ஒருவன்அன்னாசி எடுத்து வந்தான்...அது அரசனுக்கு தெரிந்த பழாமாய் இருந்த்தால் வாயில் திணித்து அனுப்ப வீரர்களுக்கு உத்திரவிடப்பட்டது..
அவன்சிரிக்க ஆரம்பித்தான்
வீரர்களுக்கு புரியவில்லை..''ஏன் சிரிக்கிறாய்'' என்றார்கள்..
''பின்னாடி ஒருவன் பலா பழத்தை தூக்கிவருகிறான்..அவனுக்கு எற்ப்படும் கதியை நினைத்து சிரித்தேன்''
என்றான் அவன்
நீதி...அடுத்தவன் துன்பபடுவதை பார்த்தால் எந்தநிலையிலும் சிரிப்பு வரும்..
-
திறமையை வளர்ப்போம் வாருங்கள்!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F551749_434556523261349_1109055204_n.jpg&hash=65abdd4f1748f5e3e3f36b6f41a46cbed0a28a2c) (http://www.friendstamilchat.com)
ஒரு நாள் ஒரு குட்டி ஒட்டகம், தாய் ஒட்டகத்திடம் கேட்டது:
“அம்மா, நா உங்கிட்ட சில கேள்விகள கேக்கலாமா?”
“ம்ம்ம்.... கேளேன்....!”
“நமக்கு மட்டும் ஏம்மா இவ்வளவு நீளமான கால்கள்?”
“நாம பாலைவனத்துல பிறந்து இருக்கோம்ல.... பாலைவனத்த கடக்க மனிதர்கள் நம்மைப் பயன்படுத்தறாங்க. பாலைவன மணல்ல நடக்கும்போது காலு ரொம்ப உள்ள போயிடும். நீளமான காலு இருந்தால் சுலபமா அடுத்த அடுத்த அடி வைக்கலாம்......”
கொஞ்ச நேரம் யோசித்த குட்டி அடுத்த கேள்வி கேட்டது:
“அப்பிடியா? நமக்கு ஏன் முதுகுல ஓர் மேடு இருக்கு?”
“அது மேடு இல்லை கண்ணு, அதுக்கு பெரு திமில். நாம பாலைவனத்தில பிரயாணம் செய்யும்போது பல நாட்கள் உணவு, நீர் கிடைக்காமல் போகலாம். இந்த திமிலில் நிறைய கொழுப்பு இருக்கும். உணவு நீர் கிடைக்காத போது, இந்த கொழுப்பு நம் பசி தாகத்தைத் தீர்க்கும்”.
இப்போது சற்று அதிக நேரம் சிந்தித்தது குட்டி.
“அம்மா, நமக்கு எதுக்கு கண்கள்ல நீண்ட ரப்பைகள் இருக்கு?”
“பாலைவனத்துல திடீர்னு காத்து அடிக்கும்; காத்து கூடவே, பாலைவனத்துல இருக்கற மண்ணும் மேல கிளம்பும். பாலைவனத்துல பிரயாணம் செய்யற நாம நம்ம கண்ணை பாதுகாக்கத் தான் இப்படி பெரிய ரப்பையை ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கிறார்....”
“அப்படின்னா, நாம ஏம்மா இந்த ‘மிருகக் காட்சி சாலைல’ இருக்கோம்?”
நம்மில் பல பேர் இப்படித்தான்! நம் திறமை வேறு, நாம் செய்யும் வேலை வேறு என்று அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.
நம் திறமைக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் செய்யும் வேலையில் நம் திறமையைக் காண்பிக்க வேண்டும்.
எனக்குத் திறமையே இல்லையே என்று யாருமே சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். கட்டாயம் ஒவ்வொருவரும் திறமைசாலிகள்தான்! திறமை வேறு படலாம். ஆனால் திறமை இருப்பதை மறுக்க முடியாது.
கடும் உழைப்பால் மிகப் பெரிய திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். ஜீனியஸ் என்பதே 99% வியர்வை சிந்த உழைப்பதுதான். இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் ‘மலையும் அணிலும்’ என்ற தலைப்பில் அமெரிக்க இலக்கிய மேதை எமர்சன் எழுதிய கவிதையில் வரும் கதை இதோ:
ஒரு பெரிய மலைக்கும் ஒரு குட்டி அணிலுக்கும் வாக்குவாதம் நடந்தது. மலை மிகக் கர்வமாக அணிலைப் பார்த்து ‘பொடிப் பயல் நீ’ என்றது.
அணில் மிகவும் அடக்கமாக சொன்னது: ‘உண்மைதான். நீங்கள் ரொம்ப பெரிய ஆள்தான். ஆனால் ஒரு வருடம் என்பது மாதங்கள், நாட்கள், மணித் துளிகள் சேர்ந்து உருவானதாக இருந்தாலும், அதனுள் சின்னச்சின்ன வினாடிகளும் உண்டு. நீங்கள் பெரியவன் என்று கர்வப்படுகிறீர்கள். நான் சின்னவனாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறேன். ஆட்டுக்கு வால் அளந்து வைத்த கடவுளால் எல்லாமே மிகச் சரியாக அளவிடப்பட்டு படைக்கப்
பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. உங்களைப்போல் ஒரு காட்டையே என்னால் முதுகில் சுமக்க முடியாது. ஆனால் உங்களால் என்னைப்போல் ஓர் சிறு பட்டாணியை உடைக்க முடியுமா?’
இதே கருத்தைச் சொல்லும் நம் ஔவைப்பாட்டியின் இந்தப் பாட்டைப் பாருங்கள்:
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறை யான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
வான்குருவி கூடு போல நம்மால் கட்ட இயலாது; கரையான் புற்று, தேனீக்களின் தேன் கூடு இவையெல்லாம் மனிதனால் செய்ய இயலாது. ஆனால் மனிதனைப்போல இவற்றிற்கு திறமை இல்லை.
அதனால் நானே பெரியவன் என்று யாரும் மார்தட்டிக் கொள்ள வேண்டாம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சுலபமாகச் செய்ய வரும்.
எனக்கு மற்றவரைப் போலத் திறமை இல்லை என்று வா(தா)டுவதை விட என்ன திறமை இருக்கிறதோ அதை வளர்த்துக் கொள்ளுவதில் அக்கறை செலுத்தலாம், வாருங்கள்!
-
திருடனும் தெனாலி ராமனும்..(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F424290_434161886634146_123933156_n.jpg&hash=6fc731322ee6fda0439958a7121621b8801e7901)
தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...
திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...
மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..
சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.
புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..
''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.
''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்
''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி..
தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..
''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள..
''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்...
திருடன் பிடிபடுகிறான்....
சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.
-
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F482062_433693640014304_1806255671_n.jpg&hash=46885f66cf1d1dbc92413a82a124447f7290caa4)
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்
. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,
“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
அச்சமின்மையே ஆரோக்கியம்!
அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!!
-
அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F486563_432560876794247_1100852222_n.jpg&hash=ba0f27978408931620ab4d00053526237342db9f)
ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.
அவள் வருத்தத்திலிருந்த போது
சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி” என்றார்.
நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.
-
தான் சந்திக்கும் மனிதர்களின் தன்மை கண்டு நொந்த மனிதன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F527090_432312656819069_1636704066_n.jpg&hash=4bbf0877e7bc757db658f8b667cb381dabbc328e)
“அன்பு, புரிதல், அமைதி, பண்பு எல்லாம் கொண்ட ஒரேயொரு மனிதனைக் கொடு”. கடவுள்,
“முடியாது” என்றார்.
‘உங்களால் முடியாததும் உண்டா என்ன?” திகைத்த மனிதனிடம் சொன்னார், “நீ கேட்ட
“நீ கேட்டகுணங்களுடன் ஒரு மனிதனை நான் உருவாக்குவதைவிட இந்த குணங்கள் கொண்ட மனிதனாக நீயே உருவாகிவிடு. அப்படி உருவானால்
இந்த குணங்கள் எல்லோரிடமும் இருப்பதை கண்டுபிடிப்பாய்” என்று.
உன்னிடம் இருப்பதே உலகத்தில்!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F643872_457123734337961_1825087276_n.jpg&hash=6757752fb67a4002e443daf944348ce912d03137)
சிவாவுக்கு வேலைக்காக அப்ளிகேஷனுடன் வைக்க அவசரமாய் கெஸட்டு ஆபிஸர் அளிக்கும் நற்ச்சான்றிதழ் தேவைப்பட்டது..
மூன்றாவது வீட்டில் சங்கரன்..அரசு அதிகாரி..அடிக்கடி நேரில் பார்த்திருக்கிறான்..ஆனால் பேசியது இல்லை..
அவரிடம் கேட்டுபார்த்தால் என்ன என்று வீட்டுக்கு சென்று அவர் முன் பவ்வியமாய் நின்றான்.
.
நான் மூன்றாவது வீட்டில் தான்குடியிருக்கிறேன்..உங்களை அடிக்கடிபார்த்திருக்கேன்.என்று கூறிவிட்டு விஷயத்தை சொன்னான்
.
''இல்லையப்பா..நீ நல்லவனா கெட்டவனா தெரியாது..நான் இந்த ஊருக்கு வந்து 5 வருஷம்தான ஆகிறது..வேறு எங்கேயாவது வாங்கிகொள்''..என்றார்..
''சார் மூன்று ஆண்டுகள போதும் ..தயவு செய்து'' என்று சொல்லிக்கொண்டு இருக்கை
யிலே ''கிளம்புப்பா.உனக்கு சொன்னால் புரியாது.''.என்றார்..
முகத்தில் அடித்தாறப்போல் சொன்னது அவனுக்கு என்னவோ போல் இருந்த்து.
அடுத்த வாரத்தில் சங்கரனுக்கு தீடிர் நெஞ்சு வலி எற்ப்பட்டு நிலமை சிக்கலாகி ஆபிரேனுக்கு பிறகு வீடு திரும்பினார்.
அவர் வீட்டில் ஒய்வில் இருக்கையில் அவரை பார்க்க
வந்தான்..
அவனை பார்த்த்தும் ''என்னப்பா..விஷயம்..என்றார்
.
.உடல் நிலை சரியில்லை என பார்த்துபோகலாம்னு வந்தேன்.''என்றான்..
.
உனக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை..வீணாக வந்து
தொந்தரவு செய்யாதே..என்றார் காட்டமாக..
அதற்க்குள அவரது மனைவி''
''....அடடா....தம்பியை நான்தான் வரச்சொன்னேன்..உங்களுக்கு ஆபிரேஷன் பண்ணியபோது இரண்டுபாட்டில் சமயத்தில் இரத்தம்
கொடுத்த்து இந்த தம்பிதான...உங்க உடம்பிலே தம்பியின் சேர்ந்து ஒடுது.''..என்றார்..
.
மெதுவாக எழுந்திரித்து கையெடுத்து வணங்கினார்..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F423116_509749275742073_1015114995_n.jpg&hash=f31963f8308b8e018b40b25523e1c95731014ada)
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.
எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-frc1%2F554468_506184666098534_69497590_n.jpg&hash=ca1ecf0d71fdb758df2d3d791deccaa8a831dc2b)
ஒரு அரசன் ஜென் குருவை காண வந்தான்.
அவர்கள் இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து உரையாட தொடங்கினர்.
அரசன் கேட்டான்.
குருவே ஜென் என்பது இயல்பாய் இருத்தல் என்பது தான் இல்லையா ?
அதற்கு மெளனமாக தலையசைத்தார் குரு.
இயல்பு என்பது மனதை பொறுத்த விசயம் இல்லையா ? மன்னன் அடுத்த கேள்வியையும் குரு முன் வைத்தான்.
அதற்கும் தலையசைப்பே பதிலாக இருந்தது குருவிடம்.
அப்படியானால் ஜென் மார்க்க உபதேசத்தின் படி மனமே புத்தர் இல்லையா ? மூன்றாவது கேள்வியையும் முன் வைத்தான் மன்னன்.
” நான் இதற்கு இல்லை என்று பதில் சொன்னால் உலகமே அறிந்த உண்மையை நான் மறுப்பதாகிவிடும். ஆம் என்று சொன்னால் தெரியாத விசயத்தை தெரிந்து கொண்டதாக நினைப்பீர்கள் “ என்றார் குரு.
உங்களை போன்ற ஞானிகளும் மரணத்தை தவிர்க்க முடியதல்லவா ? மன்னன் விடுவதாக இல்லை.
ஆமாம் என்றார் குரு.
அப்படியெனில் செத்த பிறகு எங்கே செல்வீர்கள் ? இது மன்னனிடம் உள்ள விடையறியா கேள்வி.
தெரியாது என்றார் குரு.
தெரியாதா ? எல்லாம் அறிந்த குரு நீங்கள் உங்களுக்கு தெரியாதா ? மன்னன் விடையறியாமல் போன விரக்தியுடன் கேட்டான்.
ஆமாம், எனக்கு தெரியாது. ஏனென்றால் நான் இன்னும் செத்ததில்லை. என்று கூறிவிட்டு எழுந்து நடந்தார் குரு.
# விவாதம் என்பது எந்த உண்மையையும் நிலை நிறுத்தாது என்பது ஜென் மார்க்க தத்துவம்.
-
"அபசகுனம்"(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/563707_512103608839973_334928441_n.jpg)
அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார் .அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.
ஓடிய பூனை நின்றது.கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.வியப்படைந்த அந்தணர், ''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார் சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.
பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள்.அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.
-
"சுமை"(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/481276_498361323547535_260073518_n.png)
ஓர் ரயில் பயணி தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் எறி அமர்ந்தார்..
ரயில் அவரை இழுத்துக்கொண்டு பயணித்தது
ஆனால் அவரோ தமது மூட்டைகளை தாமே தலையில் சுமந்து கொண்டு பயணம் செய்தார்...
பகவான் ரமணன் கூறுகிறார்...
உண்மையில் மூட்டையையும் அந்த நபரையும் சேர்த்துதான் ரயில் பயணிக்கிறது..
சுமந்து கொண்டு சென்றாலும் சரிசுமக்காமல் இருந்தாலும்சரி இரண்டையும் இழுப்பது ரயில் அல்லவா...?
மூட்டை இறக்கிவைத்துவிட்டால் ரயில் இழுக்க மறுப்பதில்லை.
.
அவர் சுமந்து கொண்டு சென்றாலும் இற்க்கி வைத்தாலும் ரயிலின் சுமையின் மாற்றம் இல்லை..
கூடுவதில்லை..
அவருக்குதான் சுமை குறைகிறது..
இது போல்தான்வாழ்க்கை எனும் பயணத்தில் துயரம் எனும் சுமையை இறைவன் மீது இறக்கிவைத்தால் பயண்ம் எளிதாக இருக்கும்...
வீணாக சுமையை சுமக்கவேணடாமே..
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/184623_502100346506966_1738073262_n.jpg)
அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.
கேட்டபோது சொன்னாள்
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்
“அன்பு என்றால் இதுதான்”.
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/544045_502798779770456_508962655_n.jpg)
ஒரு பேராசிரியராக வேலை பார்ப்பவன் புரட்சிகராமான சிந்தனை வைத்திருந்தான்..
திருமணம் செய்தால் ஒரு விதவையை திருமணம் செய்து கொள்வது என்று...
அது போல் தேடுதலில் ஒர் கணவனை இழந்த பெண்ணை சந்தித்தான்..
திருமணமே வேண்டாம் என்று இருந்தவளை மனதை மாற்றி அவளை திருமணத்துக்கு சம்மதிக்கவைத்து திருமணம் செய்துகொண்டான்..
ஆனால்பின்னர் மண வாழ்க்கை அவனுக்கு எற்றுக்கொள்ளகூடியாதாக இல்லை..
ஏன் என்றால் திருமணத்துக்குபிறகு அந்த பெண்விதவை இல்லை...
ஆனால் அவள் நேசித்தது விதவை தன்மையை...
இப்போது அவளிடம் அழிந்துவிட்டது..
இப்படித்தான் பல் வேறு வகைகளில் பொருத்தம் பார்த்து எதிர்பாரப்புகள் வைத்து மண வாழக்கையில் தடுமாறிபோகிறார்கள்..
எந்த பெண்ணை திருமணம் செய்தாலும்அவர்கள் கற்பனையில் வைத்திருக்கும் பெண்ணுக்கு ஓத்திருக்க வாய்ப்பில்லை..
நிஜ வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிமானத்தில் இருப்பார்க்ள..அவர்களை ரசிப்பதே வாழ்க்கை..
-
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/182207_503730369677297_18713983_n.png)
மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.
மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.
வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.
பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.
அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.
அன்பான மனைவிக்கு,
எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
--இப்படிக்கு உன் அன்புக் கணவன்.
-
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/734471_506443256072675_166975031_n.jpg)
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".
-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/11191_512723485444652_1898398253_n.jpg) (http://www.friendstamilchat.com)
ஒரு ஆள் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது.
அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது.
அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர்.
அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் ஏய் எதுக்காக ஒரு கழுதைக் கட்டியைச் சுமந்து செல்கிறாய்? என்று கேட்டான். இவன் ஏமாறவில்லை. அவன் ஏதோ கேலி செய்கிறான் என்று சொல்லி சட்டை செய்யாமல் போனான்.
கொஞ்சதூரம் போனவுடன் இரண்டாமவன் எதிரில் வந்து, என்னப்பா எதுக்கு ஒரு பண்ணியைச் சுமந்துட்டுப்போறே? என்று சொல்லிச் சிரித்தான். இவனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.
மேலும் கொஞ்சதூரம் போனவுடன் மூன்றாமவன் எதிரில் வந்து. அட என்னப்பா செத்த பாம்பெ இப்படியா கழுத்துலெ சுத்திட்டுப் போவாங்க? என்றான். இவனுக்கு உண்மையாலுமே சந்தேகம் வந்துவிட்டது. என்ன இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு மாதிரியா சொல்லிட்டுப் போறான், நாம்ம வாங்குனது ஆட்டுக்குட்டிதானா அல்லது வேறெதாவது கிரகமா? என்று மிரண்டவனாய் நடந்தான்.
நான்காமவனும் எதிரில் வந்து ஏப்பா தனியா ஒரு பொணத்தத் தூக்கிட்டுப்போறே அப்படின்னு கேட்டான். அவ்வளவுதான் இவனுக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது. நாம்ம ஏதோ ஒரு குட்டிச் சாத்தனெ ஆட்டுக்குட்டின்னு நெனைச்சு ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டோம்! தூ கிரகம்! என்று செல்லி அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கிப் புதரில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.
சிறிது நேரத்தில் அது அந்தக் குடிகாரர் நால்வருக்கும் உணவாயிற்று!
நீதி: நாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது மிக எளிது.
-
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/538924_448269011890100_799317847_n.jpg)
மஹாபாரத போர் துவங்கிவிட்டது..
பகவான் கிருஷ்ணர் துரியோதனுக்கும் உறவினர்.
.பஞ்சபாண்டவருக்கும் உறவினர்..
கிருஷ்ணனிடம்உதவிகேட்டு துரியோதனும் வருகிறான்..
அர்ஜூன்னும் வருகிறான்..
.
இருவருக்கும் உதவிசெய்ய வாக்களிக்கிறார்.கண்ணன்...
யார் முதலில் உதவிகேட்பது என்ற நிலையில் துரியோதனுக்கே வழங்கபடுகிறது..
கண்ணனிடம் உள்ள பல்லாயிரகணக்கில் ஆன சேனையை கேட்கிறான்.துரியோதன்னஃ
.தந்துவிடுகிறான்..
அடுத்து அர்ஜூன.ன்..கண்ணன் மட்டும் போதும் எனகிறான்..
சரி..எனகி்கிறான்றான்கண்ணன்..
பல்லாயிரகணக்கான சேனையைவிட கடவுள் இருக்கும் இடமே வெற்றியின்இடம் என புரிந்துகொள்கிறான் துரியோதன்னன்...போர்க்களத்தில்..
...................................................................................................
அப்படியெனில் கோயிலுக்கு போனால் கடவுளையே எனக்கு வேண்டும் எனக்கேட்பதை தவிர என்ன இருக்கிறது..
அன்புடன் அழைத்தால் வரமால இருப்பார்..?
கோயிலுக்கு சென்றால் வேண்டப்படுவது கடவுளையே தவிர வேறு எதுவும் இல்லை..
-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/381037_444426932274308_1648700640_n.jpg)
சந்தர்ப்பங்கள் சாதகமாக...
ஒரு புகழ் பெற்ற காலணி தயாரிப்பு கம்பெனியின் தலைவர், உலகப் படத்தை வைத்துக் கொண்டு தீவிரமாக யோசித்தார்.
தம் கம்பெனி காலணிகளை அறிமுகம் செய்யப்படாத இரண்டு தீவுகளைத் தேர்ந்தெடுத்து இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.
இருவருமே தீவுகளுக்குப் புறப்பட்டுப் போனார்கள். ஒருவாரம் சென்றது.
முதல் தீவிற்குச் சென்ற விற்பனைப் பிரதிநிதி இவ்வாறு செய்தி அனுப்பினார்; தீவு மக்களிடையே காலணி அணிகிற பழக்கமே கிடையாது. விற்பனைக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த விமானத்தில் திரும்புகிறேன்.
மற்றொரு தீவிலிருந்து விற்பனைப் பிரதிநிதி அனுப்பிய செய்தி இது:-
இந்தத் தீவில் மக்களிடம் காலணி அணிகிற பழக்கமே கிடையாது. எனவே விற்பனைக்குப் பிரமாதாமான எதிர்காலம் இருக்கிறது. ஆறு மாதங்கள் இங்கேயே தங்கி,ஆடர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
விதி ஒரு கதவை மூடினால் முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும்"
என்னுடைய எல்லா வழிகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்
என்ற உணர்வு உங்களுக்கு வரும்போது,ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.
எல்லா வழிகளும் இன்னும் தீர்ந்து விடவில்லை.
-
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/524324_434748333242168_1624161375_n.jpg)
பாலுவும் வேலுவும் பள்ளிதோழர்கள்..
அப்புறம் ஒன்றாகவே ஆசிரியப்பயிற்ச்சி முடித்தார்கள்..
எம்ப்ளாயிமெண்ட் சீணியாரிட்டியில்கூட இவர்களது எண் வரிசை ஒன்றின் பின் ஓன்றுதான்...
இருவரும்ஆசிரியர் வேலைக்காக காத்திருந்தார்கள் பல வருடங்களாய்...
தீடிரென ஒர் நாள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உடனடியாக தேர்வு செய்யபோவதாகவும் பட்டியல் ஒட்டியிருப்பதாகவும் கேள்விப்பட்டு பாலு சென்றான்..
அப்போது வேலு எதேச்சேயாக திருப்பதி வரை சென்றுள்ளான் .திரும்ப ஒரு வாரம்.ஆகும்..
பாலுவுக்குஅலுவலகம் போனபோதுதான் தெரிந்தது..மொத்தம் மூன்று பேருக்கு போஸ்டிங்..பத்துபேருக்கு அழைப்பு என்று..
பாலு இன்டர்வீயுல் கலந்தால் கூடதிருப்பதி சென்ற வேலுவுடன் போஸ்டிங் முடிந்துவிடுகிறது...
பாலு'' வேலுவுக்கு தகவல் கொடுத்து அவனை இண்டர்வீயூ கலந்துகொள்ள சொல்லி அவனை வேலையை பெறச்செய்வதா இல்லை..தகவலே கொடுக்கமால் இருந்து வேலையை தான் வாங்கிசெல்வதா,,,,''யோசித்தான்
நட்பு ஜெயித்த்து..
வேலுவுக்கு நாளை இண்டர்வீயூ போட்டுவிட்டார்க்ள கிளம்பி வா...தகவல் அளிக்கிறான்
சாமிகூட கும்பிடாமல் ஆர்வத்துடன் திரும்புகிறான் வேலு..
அலுவலக்த்து போனபிறகுதான் தெரிகிறது..இவனோடு போஸ்டிங் முடிந்தது விடுகிறது..அதற்கு பிறகுபாலு உட்பட கலந்துகொளகிறவர்களுக்கு போஸ்டிங் கிடைக்காது என்று..
''என்ன பாலு இது ..எனக்கு தகவல் கொடுக்காமல் இருந்து போஸ்டிங் வாங்கி போயிருக்காலமே...''எனகிறான்..
''வாங்கியிருக்லாம்..அப்புறம் நணபனுக்கு தெரிந்தெ துரோகம் செய்துவிட்டோம் என்று ஆயுசு முழுதும் மனசு உறுத்தும்..நான் நண்பேண்டா..''என்று சொன்னான்.
இன்டர்வீயூன் போது வேலுவின் வரிசை வந்தபோது இன்டர்வீயூக்கு உள்சென்று வந்தான்...
அடுத்து பாலுவும் இண்டர்வீயூக்கு உள்ளேபோனான்...
உங்களுக்கு முதல் நபர் வேலை வேண்டாம் என எழுதிகொடுத்துவிட்டார் உங்களுக்கு வேலை உறுதி ஆகிறது..என்றார்கள்..
வெளியில் வந்தபோது வேலு நின்றுகொண்டிருந்தான்..நானும் நண்பேண்டா..எதைச்சேயாக தட்டி பறித்த்தாக என்மனசு உறுத்தாதா...சிரித்துகொண்டே சொன்னான்..
சம்பவம் உண்மையே..வசனங்கள் கறபனை..
-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/199129_440575815992753_1033634885_n.jpg)
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..
அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்..
நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ,
மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.
.அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..
” மாமியாரின் அன்புப் பரிசு..”
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது..
அவரும் ஒரு மாருதி கார் வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.
மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது..
அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்..
“போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.
சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்
பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?”
மாமியார் செத்துட்டுது
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே
ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..”
மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/253113_440996042617397_1982503484_n.jpg)
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, "இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்" என்றார்.
மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்.
அதற்கு அந்த மாணவன், "இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன்" என்றான்.
-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/260012_442473699136298_1909867830_n.jpg)
வழக்கு புலி....
பெரும் குற்றவாளிகள் 'கோயில்' கட்டவேண்டும் என்று நினைத்தால் நம்முடைய வக்கீல்'வழக்குபுலி'க்கு ஒரு கோயில் அமைந்துவிடும்..
அந்த அளவுக்கு குற்றவாளிகளை வெளியே கொண்டுவருகிற திறமை..
சட்டஞானம்..அவருக்கு உண்டு..
அவரை நம்பி இந்த குற்றத்தை செய்யலாம்..வெளியே வந்துவிடலாம் அவரிடம் பணத்தைகட்டி என்று சிலாகிப்பவரும் உண்டு...
செத்தவனை அவன் பிறக்கவேவில்லை என்றே வாதாடி அசத்துகிற திறமை உண்டு...
அவர் கோர்ட்க்குள் நுழைந்துவிட்டால் என்ன பேசுகிறார் என்று வாயில் ஈ போவது கூட பார்க்கிற வக்கீல் கூட்டம் உண்டு..
அவர் பேசி முடித்துபிறகு ஒன்னாங்கிளாஸ் படிக்காதவன் கூட இப்படித்தான் பேசியிருப்பான் ஆனால் அவர் அடி வருடி கூட்டம் இவரால் முடியும் உச்உச் கொட்டியே மாய்ந்துபோவார்கள்..
உள்ளே போகாமல் வெளியே கொலைகார.ர்களும் திருடர்களும் நடமாடுகிறார்க்ள என்றால் இவருடைய கைங்கிரயம்தான்..
அடுத்து அடுத்து குற்றங்கள் செய்கிறானே..அவருக்கு பிரசினை இல்லை..இவருக்கு காசை வெட்டிகிறானா அது போதும் அவருக்கு.
என்ன இப்படி செய்கிறீர்களே என்றால்என் தொழில் தர்.ம.ம்..என்னிடம் வந்வனை காப்பற்றவேண்டும் .எனபார்..
அவருக்கு ஒரே பெண்..செல்லபெண்..அவரின் அத்தனை பணத்துக்கும்வாரிசு..
பக்கத்து நகரத்தில் படித்துகொண்டிருந்தத்து..
அவர் ஒரு நாள் ஓரு எல்லோரும் முடிவை ஆவலோடு எதிர் பார்க்கிற வழக்கு..அதில் வாத திறமையை காட்டிகொண்டிருந்த நேரம்..
அவருடைய செல்லப்பெண் காலை நேர வாக்கிங் போனபோது நகையைபறிக்க வந்த திருடன்உடன் நடந்த போரட்டத்தின் போது குத்தப்பட்டபோது உயிரை இற..ந்துவிடுகிறார்.செய்தி வருகிறது..
நிலை குலைந்து போகிறார்.
.நாட்டிலே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பில்லையா..கதறுகிறார்.
.போலீஸ் என்ன செய்கிறது ..எனகிறார்..
உடனே கண்டுபிடிக்கவேண்டும் ..எனகறார்..அவனை தூக்கில் போடவேண்டும் எனகிறார்..
முக்கிய நபரல்லவா...குற்றவாளியை கண்டுபிடித்திவிடுவோம் என்று உயர் போலீஸ்அதிகாரியே இவரிடம் பேசுகிறார்..
இவரின் அடி வருடிகளும் அவனை சும்மாவிட்கூடாது எனகிறார்க்ள...
இப்படியெல்லாம் களபேரம் நடந்துகொண்டிருக்கும்போதுஅவருக்கு போன் வருகிறது..
''நம்ம சுல்லான் இருக்கான்லே போன தடவை இரட்டை கொலையிலே காப்பாற்றி விட்டுங்களே..அவன் யாரோ ஒரு பொண்ணை போட்டுதள்ளிட்டானாம்..பெரிய இடத்து பொன்னாம் போலீஸ் தீவரமாக தேடுதாம்..அவனை நீங்கதான் காப்பாற்றியாகனும்..'' என்றது..
சமுதாயத்தை பாதிக்கிற செயலை செய்தால் ஒருநாள் நம்மையும் பாதிக்கும் எனபதை முதல்முதலாகஎனபதை உணர்ந்தார் நமது வழக்கு புலி..
-
awesome collections..mixture of various emotions..enjoyed each stories..waiting for your next collections.. :)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fn.gif&hash=7be65c42edf94fbfd18fad32c3c520412280167a)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fa.gif&hash=1b63096139317654be04cf692ce03137ec856140)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fn.gif&hash=7be65c42edf94fbfd18fad32c3c520412280167a)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fd.gif&hash=4b7e5b5793ec5adcc033270871e77e18ef7e4e6b)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fr.gif&hash=e17af111d568308c6ef4760769cd99da480a3f45)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fi.gif&hash=a560d5c865c8c8f80abd34de6b6dffbf3ff029b4)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl3.glitter-graphics.net%2Fempty.gif&hash=803750586ffd2687b23bc2dfc7672c800f499042)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl3.glitter-graphics.net%2Fempty.gif&hash=803750586ffd2687b23bc2dfc7672c800f499042)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl3.glitter-graphics.net%2Fempty.gif&hash=803750586ffd2687b23bc2dfc7672c800f499042)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fu.gif&hash=0704c00ff1356fd3cf16ab031a85518e7debde89)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fs.gif&hash=c04cfb218cd4c236f388cd2e5fe02a54cc4386a6)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fe.gif&hash=d1b46712e572d4f00059e916bf7ab678249d27e9)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftext.glitter-graphics.net%2Fsmiley%2Fr.gif&hash=e17af111d568308c6ef4760769cd99da480a3f45) (http://glitter-graphics.com/myspace/text_generator.php)
-
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/486819_444172652299736_380577897_n.jpg) (http://www.friendstamilchat.com)
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அந்த விடுதலைப் போராளி.
திடீரென்று அவர் அறையில் தரையை உடைத்துக் கொண்டு ஒருவர் தலை காட்டினார்.
“நானும் சிலரும் தப்பிக்க முயன்று உன் அறை வரை வந்துவிட்டோம்.
உன் அறையிருந்து ஆறடிதூரம் கடலை நோக்கித் தோண்டினால்
நாம் விடுதலையடைந்து விடுவோம்”
என்றதும் இவரும் ஆர்வமாகத் தோண்டினார்.
ஆறடி தோண்டி தலையை வெளியே நீட்டியதும் அதிர்ந்தார்.
சிறைக்காவலர் அறைக்குள் போனது அது.
கடலை நோக்கித் தோண்ட சொன்னதை மறந்திருந்தார்.
எந்த முயற்சியையும் சரியான திசையில் மேற்கொள்பவர்களே வெல்கிறார்கள்.
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/380057_444913882225613_154621370_n.jpg)
' நம்ம ராமசாமி' ஓரு ஹோட்டல் அறிவிப்பை பார்த்தார்...
10 நிமிடத்தில் 50 இட்லி சாப்பிட்டால் 1000 ரூ பரிசு எனப்போட்டிருந்தது...
ராமசாமி ''நான் ரெடி..பணம் கட்டாயம் தருவீர்களா.''.கடைகராரை கேட்டார்..
''கட்டாயம் தருவோம் ''என்றார் கடைகார.ர்
'''பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் 'என்று சென்றுவிட்டு திரும்பினார்..
போட்டியில் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 50 இட்லி சாப்பிட்டு முடித்துவிட்டார்.
கடைகரா.ர் ஆச்சிரியம் அடைந்துவிட்டார்..
பரிசுதொகை கொடுத்துவிட்டு ''பத்து நிமிடத்தில் போய்மந்திரம் ஏதும் போட்டுவிட்டுவந்தீர்களா ''கேட்டார்..கடைகார.ர்
ராமசாமி சொன்னார்..''10 நிமிட்த்தில் 50 இட்லி சாப்பிடமுடியுமா என்று சாப்பிட்டுபார்த்து.வந்தேன் ....''என்றார்
கடைக்காரர் : ஹான்ன்ன்ன் !!!!!!
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/644150_446357538747914_1418814678_n.jpg)
ஒரு குருவுக்கு பலசீடர்க்ள் இருந்தார்க்ள..
குரு பல தியான முறைகளை கற்றுகொடுத்திருந்தார்..
அதில் ஒரு சீடர் 12 ஆண்டுகள் கடுமையாக தவம் செய்து தண்ணீரில் மேல் நடக்கும் வித்தையை கைவரப்பெற்றார்..
இதனை குருவிடம் சொல்லி ஆசி பெறுவதற்க்காக தண்ணீர் மேல் நடந்து வந்து ஆசி பெற நின்றார்..
குரு சொன்னார்.''.காலணா கொடுத்தால் ஒடக்காரன் அக்கறையில் கொண்டு வந்துவிட்டு போகப்போகிறான்..காலணா பொறதா விஷயத்துக்கா 12 வருடங்கள் வீண்செய்தாய்..''என்றார்..
சாதிப்பது முக்கியம் அல்ல..அந்த சாதனையால் என்ன பலன் எனபதே முக்கியம் என விளக்கும் கதை இது..
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/150130_446760948707573_1205213987_n.jpg)
கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.
அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.
அழகிக்கு கோபம் வந்துவிட்டது.
அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.
அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.
-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/644079_447127145337620_1653171366_n.jpg)
பாழடைந்த பங்களா வாசலில் நின்றிருந்த
அவளை,
விசித்திரமான வடிவத்தில் இருந்த மிருகம்
ஒன்று துரத்துவதுபோல கனவு கண்டாள்..
தினந்தோறும்
இந்தக் கனவு
தொடர்ந்து வர, அவள் பயந்து நடுங்கினாள்..
நிம்மதி இன்றித் தவித்தாள்..
அன்றைக்கும் அதே கனவு..
அதே பங்களா..
அதே மிருகம் துரத்த..
மூச்சு இரைக்க
ஓடினாள்...
ஒரு மூலையில்
அவள் ஒடுங்கிக்கொள்ள
அந்த மிருகம் அவளுக்கு அருகில் வந்து உற்றுப் பார்த்தது..
பயத்தில் உறைந்துபோன அவள்,
அந்த மிருகத்திடம்
கேட்டாள்…
யார் நீ..?
உனக்கு என்ன வேண்டும்..?
என்னை எதற்காகத் துரத்துகிறாய்..?
இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய்..?
அந்த மிருகம் அவளிடம் அமைதியாகச்
சொன்னது…
எனக்கெப்படித் தெரியும்..?
இது உன் கனவு..!
கருத்து:
கண்ணுக்குத்தெரியாத
எதிர்காலத்தை
கவலையுடன்
எதிர்நோக்குவதைவிட
எதுவாக இருந்தாலும்
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
என்ற துணிச்சலுடன் வாழந்தால்,
வாழ்க்கை பிரகாசிக்கும் .
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/57887_447812101935791_477474049_n.jpg) (http://www.friendstamilchat.com)
ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..
ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..
அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில்
இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..
முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..
வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..
மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
மண்டபத்திற்கு சென்றாள்..
கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..
இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள்
பதுக்கியதே அதிகம்..
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..
இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே
என்று பாய..
அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..
உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..
விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..
அந்த நிலையில் இருவருக்கும்
ஒன்று புரிந்தது..
இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள்
சொல்வது சும்மா இல்லை...
இல்லத்தைப் பராமரிப்பதிலும்
பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..
அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில்
ஒரு குடும்பம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
செலுத்தாமல்
அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...
மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/75111_448540115196323_892394171_n.jpg)
ஓரு வயதானபெரியவர் .
.பார்வை மயங்கிய நிலையில் அழுக்கடைந்த
பாத்திரத்தை வைத்து சில்லறை காசுகளை குலுக்கியபடி அந்த பெரிய கடைத்த்தெருவில் கடை கடையாய்
பிச்சை எடுத்து வந்தார்..
இவர் நிலையை பார்த்து சில்லரை காசுகளை போட்டனர் பரிதாப ப் பட்டு பலர்..
ஒரு கடைகார ர் இவரையும் அழுக்கடைந்தபாத்திரத்தையும் மாறி மாறி பார்த்து..''முட்டாளே..''என்றார்..
''உங்களால் முடிந்தால் சில்லரை போடுங்கள்..இல்லையென்றால்அநாவசியமாக ஏன் கோப்படுகிறீர்க்ள..''பெரியவர்கேட்டார்..
அவ்வுளவுதான்..
அந்த பெரியவரின் பாத்திரத்தை பிடுங்கி தரையில் அடித்தார்..சில்லரை காசுகள் ரோடில் உருண்டோடியது..
மக்கள் கூடினர்..
''எனய்யா..அறிவிருக்கிறதா..முடிந்தால் போடு இல்லையென்றால் உன்வேலையைபார்த்துகொண்டிருக்க வேண்டியதுதானே..''சண்டை போட்டு சில்லரையை அவர் பாத்திரத்தில் சேர்த்தனர்..
கடைகார ர் சொன்னார்...''நீங்களும் உண்மை தெரியாமல் பேசுகிறீர்க்ள..
இவருடைய இந்த அழுக்கடைந்த பாத்திரம் தங்கத்தினால் ஆனாது..
அதை வைத்து பிச்சை எடுக்கிறார்
.இந்த பாத்திரத்தை விற்றாலே இந்த கடைதெருவில் பாதியை வாங்கிவிடலாம்..''
என்றார்
...........................................................................................
கதையின் நீதி..
நமது உணமையான பலம் தெரியாமல் நாம் இயங்கிகொண்டிருக்கிறோம்...
-
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-snc6/183408_448903985159936_1332412768_n.jpg)
அம்மாவின் ஞாபகம்....
சுருதிக்கு மூன்று வயதாகிவிட்டது.
பள்ளியில் போடவேண்டும்..
கீரிச்...அவளுக்கு சரி வராது..
அவன் மனைவிக்கோ வங்கியில் புரமோஷன்.
மாலை 4 மணிக்கு வீடு வந்துவிடுகிற கதை நடக்காது..
அவனுக்கோ ஆபிஸில் பொறுப்புக்கள் அதிகம்..
இரவு எட்டு மணிக்குதான வீடு வந்து சேர முடியும்..
படு சுட்டி சுருதியை யார் பார்த்துக்கொளவது..
பொறுப்பாய்..
கணவனும் மனைவியும் சிந்தனையில் குழம்பினார்க்ள.
இதற்கு என்னாதன் தீர்வு...
சிந்தித்து சிந்தித்து மனடையை உடைத்தபிறகு அவர்களுக்கு அவர்களுக்கு ஞாபகம் வந்த்து..
இங்கு இட வசதி இல்லை..நகரம் உனக்கு ஒத்துவராது..
கிராமத்துக்கு அவன் தம்பிவீட்டுக்கு நாலு ஆண்டுக்கு முன் அனுப்பிவைத்த அம்மாவின் ஞாபகம்..
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/37769_449289375121397_582942350_n.jpg)
ஒர் இளம் பெண் கனவு காணுகிறாள்..
ஒர் அடர்ந்த காட்டு வழியே தனியே நடந்து வருவதாக..
அந்த பாதையில் கட்டுமஸ்தான இளைஞன் எதிர்படுகிறான்...
இந்த இளம் பெண் தனியே வருகிறாள் என்று தெரிந்துவிடுகிறது..
அவன்காம பார்வையை வீசுகிறான்..
தனக்கு அவனால் ஆபத்து என தோணுகிறது..
ஒட துவங்குகிறாள்..
இவள் ஒடுவதை பார்த்த அவன் அவளை துரத்துகிறான்.
.
'' தனியாக மாட்டி கொண்டாய்...........விடமாட்டேன்
''கத்திகொண்டே கிட்டதட்டஅவளை நெருங்கி விட்டான்,
,
அவள் ஒட முடியாமல் களைத்து ஓருமரத்தின் மீது சாய்ந்துவிடுகிறாள்..
அவளை கைகளால் அனைக்கும் நிலைக்கு வந்துவிடுகிறான்..
''ஐயோ..நீ என்னை என்ன செய்யப்போகிறாய்...''கதற ஆரம்பிக்கிறாள்..
அவன் சொல்கிறான்...''இது உன்னுடைய கனவு..அதை நீதான் முடிவுசெய்யவேண்டும்..''
...............................................................................................
கனவில் என்ன..வாழ்க்கையில் முடிவு நம் கையில் இருக்க மற்றவர்களை எதிர்பார்க்கிறோம்..
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc7/380069_449406891776312_1300584986_n.jpg) (http://www.friendstamilchat.com)
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/310585_449730848410583_906235610_n.jpg)
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா.
ஆடம்பரமாக விழா நடந்தது.
அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
அவையினர் கேலியாகச் சிரித்தனர்.
அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.
“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.
“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றான்.
அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.
“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.
தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc6/183558_450623008321367_1650446481_n.jpg)
ராமசாமி கடைவீதியில் வந்துகொண்டிருந்த போது ஓரத்தில் குடிகாரர் ...
''என்னை யாரும் நம்பர் 32 சந்தோஷபுரம் கொண்டு போய் விடமாட்டீங்களா...என்னாலே நடக்கமுடியலை..''
...கத்திகொண்டு.உருண்டு புரண்டுகொண்டிருந்தை பார்த்தார்...
நம்ம ராமசாமிக்கு பார்க்க கருனை பிறந்த்து...
என்ன மனிதர்க்ள...எதோ குடித்துவிட்டார்..இப்போது முடியவில்லை ..உதவி செய்ய ஒருத்தரும் இல்லையே..தெளிவாக முகவரி சொல்கிறார்..கொண்டு சேர்த்தால் என்ன..என்று பொருமிக்கொண்டே ஒர் ஆட்டோவை அழைத்தார்..
ஆட்டோக்காரரை இவர் சொல்லும் முகவரிக்கு போக எவ்வளவு ஆகும் என்றார்..
''50 ரூபாய் ஆகும் ''என்றார் ஆட்டோக்காரர்
இந்தா 50 ரூபாய்..இவரை அந்த இடத்தில் இறக்கிவிட்டுங்கள்..ராமசாமி
இந்த ராமசாமிக்கு யார் கஷ்டத்தில் இருந்தாலும் பார்த்துகொண்டிருக்க முடியாது என்று ஆட்டாகாரரிடம் பெருமையாக சொன்னார்..
ஆட்டோக்கார்ரஃ அந்த குடிகாரரை எற்றிய பிறகு சிரித்துகொண்டே சொன்னார்...
இந்த குடிகார ர் சொன்ன முகவரி டாஸ்மாக் கடை..
-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-snc6/249402_452109141506087_1184455219_n.jpg)
தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.
“நீ அழகாய் இருக்கிறாய். உன்னை நேசிக்கிறேன்” என்று அவளிடம் தந்தை அடிக்கடி சொல்லி வளர்த்தார்.
அவளது மனம் மெல்ல மெல்ல மாறியது.
ஊக்கம் உயர்ந்தது. உருவத்திலும் மாற்றங்கள் தென்பட்டன.
அழகிலும் அறிவிலும் தனித்தன்மை மலரும் விதமாய் வளர்ந்தாள்.
பதினெட்டாவது பிறந்த நாளில் பரிசு வழங்கிய தந்தை சொன்னார்,
“நீ மிகவும் அழகான குழந்தை. உன்னை நேசிக்கிறேன்”.
வள் தோழிகளிடையே அறிவித்தாள்,
“நான் அழகாய் இருப்பதால் என் குடும்பம் என்னை நேசிக்கவில்லை.
என் குடும்பம் நேசிப்பதால் நான் அழகாய் இருக்கிறேன்”.
நேசிக்க பழகுங்கள் உங்கள் உலகமே அழகாய் மாறும் !!!
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/550804_452860188097649_420590842_n.jpg)
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும்.
பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும்.
நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும்.
இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது.
கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை.
இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார்.
கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார்.
மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை,
அடுத்ததைத் தொடரும்.
அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார்.
ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல்
செய்துள்ளார்.
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/548090_453060208077647_691320779_n.jpg)
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..
அது வைரம் என்றறியாமல்,
விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..
அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..
ஐந்து ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20
ரூபாய்க்கு பேரம் பேசினான்..
இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்..
ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட
முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..
அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்” என்றான்..
சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும்,
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்..
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/60741_453270031389998_1835324150_n.jpg) (http://www.friendstamilchat.com)
புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.
தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்
.உடனே அமைச்சர்
,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.
நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார்
. தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்
இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.
ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.
உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே
பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து,
''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!.
தொழில் அதிபரே அசந்து விட்டார்.
அரசியல்வாதியா,கொக்கா?
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/35468_453384914711843_1543750087_n.jpg)
ஒரு ஊர்ல ஒரு நம்ம ஆளு நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்..
அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு..
நம்ம ஆளு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி
” டாக்டர்அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.
அப்புறம் உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு..
அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு நம்ம ஆளு வாய்க்குள்ள அப்புனாரு..
நம்ம ஆளு கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.
” அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!
நம்ம ஆளு அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு..
இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி
” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு
இப்பஅதிசய டாக்டருக்கு குழப்பம்.
என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.
.என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.
. நம்ம ஆளு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”
ன்னாரு..
அப்ப கெளம்பி ஓடுனவர்தான் ..நம்ம ஆளு எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே…!!
-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/539358_454148404635494_67366590_n.jpg)
ஒரு செல்வந்தன் தன் தந்தைக்கு,
ஓர் ஓட்டிலே கஞ்சி வார்த்துக்
கொடுத்துக்கொண்டு வந்தான்..
அவன் பிள்ளை ஒருவன் நீண்டநாட்களாக தந்தையின்
செயலை பார்த்தபடியே இருந்தான்..
ஆனால்
அவன் இதயத்தில்
வேதனை பொங்கிவழிந்தது.
ஒருநாள் அவரின் மகன் அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்துவிட்டான்.
அந்த செல்வந்தத் தந்தை மாலை உணவைத் தன்
தந்தைக்கு கொடுப்பதற்காக வந்து ஓட்டைத்
தேடிவிட்டு தந்தையாரிடம் “அந்த ஓடு எங்கே?” எனக்
கேட்டார்..
அவரோ “நானறியேன்” என்றார்..
உடனே தனது மகனிடம்
சென்று “தாத்தாவுக்கு உணவு கொடுக்கும் அந்த ஓட்டைக்
காணவில்லை..
நீ கண்டாயா?” என அதட்டிக் கேட்டார்..
அவனும் தெரியாது என சொல்ல கோபத்துடன், தந்தையாரின்
பக்கம் திரும்பிய செல்வந்தர் தந்தையிடம்,
“எங்கே உனது ஓடு?” என்று கோபமாகக்
கத்தியபடி சண்டையிட்டார்..
இதைக் கவனித்துக்கொண்டிருந்த மகன்
வேதனையோடு ஓடிச்
சென்று, தனது தந்தைப் பிடித்து தடுத்தபடி, “அந்த
ஓடு என்னிடம் தான் இருக்கிறது” என்றான்..
“இதை நீ எதற்கு எடுத்து ஒளித்து வைக்கிறாய்?” என்று அந்த
செலவந்தர் மகனைச் சத்தம் போட்டார்..
“நான் பெரியவனான பின் உங்களுக்கும் வயதாகிவிடும்..
அப்போது நாங்கள் உங்களுக்கு உணவு பரிமாற வேண்டி வரும்..
அதற்கு ஓடு தேவைப்படுமே...
அதற்காக நான்
அதை எடுத்து உங்களுக்காக
பாதுகாத்து ஒளித்து வைத்திருக்கிறேன்” என்றான்..
அப்போதுதான் அந்தச் செல்வந்தனுக்கு தன் தவறான செயலைப்
பற்றித் தெளிவு பிறந்தது. அப்போது முதல் தன்
தந்தையை நல்ல முறையில் பாதுகாக்கத் தொடங்கினான்...
-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/404624_455432134507121_2072114859_n.jpg)
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
நன்றி!!
-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/420878_455780141138987_488766663_n.jpg)
கற்றது கையளவு...
புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்..
அப்போது அங்கு வந்த புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தன் புத்தரிடம், “குருவே, நான் இந்த உலகத்தைத்
தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.. எப்படி?” என்று கேட்டார்..
புத்தர் அவரிடம், “இந்த மரத்தில் ஏறி தழைகளைப்
பறித்து வா!” என்றார்..
ஆனந்தன் அந்த மரத்தின் மேல் ஏறி கைகொள்ளும்
அளவுக்குத் தழைகளைப் பறித்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்..
புத்தர் அவரைப் பார்த்து, “ஆனந்தா, இப்போது உன்
கையில் என்ன உள்ளது?” என்று கேட்டார்..
“தழைகள் குருவே” என்றார்..
“அப்படியானால்.. மரத்தில்...?”
என்று திருப்பிக் கேட்டார் புத்தர்..
“மரத்தில் நிறைய தழைகள் இருக்கின்றன” என்றார் ஆனந்தன்..
உடனே புத்தர்,
“ஆனந்தா, இந்த உலகத்தைத்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே...
அது இதுதான்..
நான் உனக்குப் போதித்தது உன்
கையிலுள்ள அளவுதான்..
நான் உனக்குப்
போதிக்காதது மரத்திலுள்ள தழைகளின் அளவு..
அவ்வளவையும் என்னால் போதிக்க முடியாது..
நீ இந்த உலகத்தை
உன் அனுபவத்தால்தான் அதிகம் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்..
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/200019_455870961129905_1688863394_n.jpg)
ஒருத்தன் இண்டர்வ்யூ போனானாம். ஆஃபீஸர் டேபிள்மேல துப்பாக்கிய வெச்சு, ‘நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை’ன்னாராம்.
”பொண்டாட்டியக் கொன்னு, கிடைக்கற வேலை வேணாம்”ன்னுட்டு போய்ட்டான் அவன்.
ரெண்டாவது வந்தவன்கிட்டயும், ஆஃபீஸர் அதையே -நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை –சொன்னார்.
அவன் துப்பாக்கிய எடுத்துட்டு நேரா அந்த ரூமுக்குப் போனான். அங்க அவனோட மனைவி நின்னுட்டிருந்தாங்க. அவங்க முகத்தைப் பார்த்ததும் மனசு மாறி, துப்பாக்கியை ஆஃபீஸர்கிட்டயே குடுத்து
‘போய்யா – நீயும் உன் வேலையும்’ன்னுட்டுப் போய்ட்டான்.
மூணாவது ஒருத்தன் வந்தான். அவன் பொண்டாட்டி, நெக்ஸ்ட் ரூம்ல இருந்தாங்க. அவன்கிட்டயும் ஆஃபீஸர் அதைச் சொன்னார். அவன் துப்பாக்கியத் தூக்கீட்டு அந்த ரூமுக்குப் போனான்.
கொஞ்ச நேரத்துல அந்த ரூம்லேர்ந்து அவனோட மனைவி ‘ஐயோ.. அம்மா’ன்னு அலர்ற சத்தம்.
ஆஃபீஸர் ஓடிப் போய்ப் பார்த்தார். மனைவி தலைல ரத்தம் ஒழுகுது. வந்த ஆஃபீஸர் ஓடிப்போய்த் தடுக்க, அவன் சொன்னான்:
“சார்…. கொல்லச் சொல்லீட்டு உள்ள புல்லட் வைக்காம குடுத்துட்டீங்க. அதான் திருப்பிப் போட்டுச் சாத்தீட்டிருந்தேன்.
-
பின்னால் வரும் :)(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-snc7/487509_456253071091694_717162524_n.jpg)
ஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது. என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.
இதை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.
முதல் நாய் சொன்னது, ''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன். அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார். அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,''
இரண்டாவது நாய் சொன்னது, ''அன்பு நண்பனே , நானும் அந்த மகானைப் பார்த்த போது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார். நானும் முயற்சி செய்து பார்த்து விட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன். ஆனால் அதற்குப் பின் அதைப் பற்றிக் கவலைப் படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன். ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது. அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''
டிஸ்கி : நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது. நாம் நம் கடமைகளை சரிவர செய்து வந்தால், மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/580391_457068491010152_480016719_n.jpg)
விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் கணவன்
மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கதவு தட்டும் சத்தம்
கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து போனான்.
கதவை திறந்தால்
அங்கே ஒரு குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.
“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட முடியுமா?”
என்று அந்த குடிகாரர் கேட்டார்.
கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3
மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப்
போய் விட்டான்.
“யாரது?” என்று மனைவி கேட்டாள்.
“எவனோ ஒரு குடிகாரன்,
வந்து காரோ எதையோ தள்ளி விட
முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி,
மழை வேற பெய்யுது எவன்
போவான்?”
“பார்த்தீங்களா? 3 மாசம்
முன்னாடி நம்ம கார்
ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப
இரண்டு பேர்
நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப
நீங்க
அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?
கடவுள் குடிகாரர்களையும்
நேசிப்பார்”
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ்
பண்ணிக்கிட்டு மழையில்
நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில்
சரியா தெரியாதாதால
சத்தமா கேட்டான்.
“ஹலோ, நீங்க இன்னும்
இருக்கீங்களா?”
“ஆமா சார்”
“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே,
இப்ப செய்யலாமா?”
“ஆமா சார் வந்து கொஞ்சம்
தள்ளிவிட்டீங்கன
்னா நல்லா இருக்கும்”
“எங்கே இருக்கீங்க”
“இங்கதான் ஊஞ்சல் மேல
உட்கார்ந்திருக்கேன் வாங்க
வந்து தள்ளிவிடுங்க....
-
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/155524_457450180971983_552525539_n.jpg)
கொடியில் அசைந்த மலருக்கு கர்வம் தாங்கவில்லை.
தன்னை முத்தமிட வந்த காற்றைக் கண்டு முகந்திருப்பிக் கொண்டது.
அதிர்ந்து வீசிய காற்று மலரைக் கொடியிலிருந்து உதிர்த்தது. கீழே விழுந்த மலர் கதறியது.
காற்று மலரைத் தரையில் இழுத்தது. மலர்அழுதது.
திடீரென்று முரட்டுக் கரமொன்று தன்னைப் பற்றித் தூக்குவதை உணர்ந்தது.
ஆஜானுபாகுவான மனிதர் தன்னைத் தூக்கிச் செல்வதை உணர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டது.
மீண்டும் கீழே விழுந்தது தெரிந்து விழித்துப் பார்த்தால்
ஆலயமொன்றில் ஆண்டவனின் அழகிய மலர்ப்பாதங்களில் அர்ச்சனைப் பூவாய் விழுந்தது தெரிந்தது.
தனது கர்வம், வெறுப்பு, அச்சம் அனைத்தும் கரைந்து தன் பிறவியின் பயனை உணர்ந்தது மலர்.
எல்லாத் திறமைகளும் ஆண்டவனுக்கு அர்ப்பணமாகும்போதுதான் அர்த்தம் பெறுகின்றன.
-
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-snc7/385735_458234030893598_1695390394_n.jpg)
ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.
அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்
.ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.
அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று
பூனையை விட்டு வந்தான்.
சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது
.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்
,''போனை பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''
-
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/66265_458340020882999_859590521_n.jpg)
ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில்
வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்.
ஆனால் அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் "இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினான். ஆனால் அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர்.
நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக்
கொண்டான்.
அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கிவிட்டான். மேலே வந்ததும் அவன் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான். பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லை எடுத்து, அந்த பெரிய கல்லின் மீது "இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்" என்று தட்டி தட்டி
எழுதினான்.
இதைப்பார்த்த காப்பாற்றிய நண்பனுக்கு ஒன்றும் புரியாமல், "உன்னை அறைந்த போது மணலில் எழுதினாய், இப்போது உன்னை காப்பாற்றிய போது கல்லில் எழுதுகிறாய். இதற்கு
என்ன அர்த்தம்? ஒன்றும் புரியவில்லை" என்று சொல்லி கேட்டான்.
அதற்கு அறை வாங்கிய நண்பன் "யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும். அதுவே நமக்கு
யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்தது அழியாது" என்று சொன்னான்.
-
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/644009_458617574188577_319786573_n.jpg) (http://www.friendstamilchat.com)
உயிருக்குள் உயிர் பொதிந்த காதலர்கள் அவர்கள். எல்லா காதலர் தினத்திலும் காதலிக்கு ஸ்பெஷல் பூங்கொத்தை பரிசளிப்பான் காதலன். காதல் வளர்ந்து திருமணமானது. வருடங்கள் வளர வளர காதலும் வளர்ந்தது. பூங்கொத்தும், பிரியமும் தொடர்ந்தது. இந்தக் காதலை மரணம் கூட பிரிக்கக் கூடாதென மன்றாடினர் இருவரும். ஆனால் ரணத்தின் தேரேறி மரணம் ஒருநாள் வந்தது. காதலன் மறைந்தான், காதலி உறைந்தாள்.
அடுத்த காதலர் தினம் துயரத்துடன் வந்தது. அவளுடைய அழுகை அணை உடைத்தது. அவனில்லாத முதல் காதலர் தினம் அது. படுக்கையில் புரண்டு கண்ணீர் விட்டாள். திடீரென கதவு தட்டும் ஓசை. வாசலில் பூங்கொத்துடன் ஒருவன். பூங்கொத்தை வாங்கினாள்.
இறந்து போன காதலன் அனுப்பியிருந்தான்.
பூங்கொத்தில் ஒரு வாசகம். 'மரணம் உயிரைத்தான் பிரிக்கும், காதலையல்ல. நான் உன்னை நேசிக்கிறேன்'.
அவளுக்கோ கோபம்.
பூ அனுப்பிய கடைக்காரரிடம் சென்றாள்.
'வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயா?' என சீறினாள்.
அவன் நிதானமாய்ச் சொன்னான்.
'அம்மா, உங்க வீட்டுக்காரர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கிட்டாரு. எல்லா காதலர் தினத்துக்கும் உங்க வாசலில் ஒரு பூங்கொத்து வைக்கச் சொல்லி பணம் கொடுத்தாரு. ஒருவேளை நான் நேரடியா கடைக்கு வந்து பூ தேர்வு செய்யலேன்னா, நான் இறந்துட்டேன்னு அர்த்தம். ஆனாலும் நீ பூங்கொத்து கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. ஒருவேளை மரணம் வந்து அவளையும் சந்தித்தால் கடைசியாய் ஒருமுறை அவள் கல்லறையில் பூங்கொத்தை வை.
எப்போதும் கடிதத்தில் தவறாமல் எழுது - 'மரணம் உயிரைப் பிரிக்கும், காதலையல்ல'... என்று.
இதாம்மா நடந்தது' அவன் சொன்னான்.
அவள் அழுதாள். அவளுடைய கண்ணீர்த் துளிகள் காதலில் கரைந்து பெருமிதம் அடைந்தன.
உண்மைக் காதல் ஆழமானது.
காதலின் உண்மை வேர்களில் தெரியும், பூக்களில் அல்ல.
போலிகளைப் புறக்கணியுங்கள்.
உயிரில் உலவும் உண்மை
அதுவே காதலின் தன்மை!
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/534671_458814500835551_1008702283_n.jpg)
பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள்.
ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!
ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,
காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து
. கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.
முதலில் ஜன்னலை மூடுங்கள்..ஒருத்தி செத்து விடுவாள்.
அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!.
.சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..
பெரியவர் கூறினார்:
அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/66499_459849704065364_284647507_n.jpg)
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார
அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.
சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ”அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்…”
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ”இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி
முடிவுபண்ணலாம்?” என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.
அவரிடமும் அதே புகைப்படம்… அதே கேள்வி! ”ஹா… இவனுக்கு
ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!” என்றார் அந்த சர்தார்ஜி.அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ”அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!” என்றார். அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய
ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!
”என்னால நம்பவேமுடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?” என்று கேட்டார் அதிகாரி.
சர்தார்ஜி சொன்னார்
- ”இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது… ஒரு கண்ணுதானே இருக்கு!
-
"அழகான வேலை "
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/155562_460364447347223_1408633320_n.jpg)
முல்லா ஒருநாள் தன் கிராமத்தில் இருந்த ஒரு கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றார். கடை வாசலில் தன் கழுதையை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்றார்.
திரும்ப வந்து பார்த்தபோது யாரோ அவருடைய கழுதையின் மீது சிவப்பு வண்ண பெயிண்டை அடித்து வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் அவருக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது.
அவர் சப்தம் போட்டு, ''யார் என் கழுதைக்கு இப்படி பெயின்ட் அடித்தது? இன்று அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்.'' என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.
அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன், ''யாரோ ஒரு புதியவர் கழுதையின் மீது பெயின்ட் அடித்துவிட்டு இப்போதுதான் அந்த மதுக் கடைக்குள் சென்றார்,'' என்றான்.
முல்லாவும் மதுக்கடைக்குள் சென்று, ''யார் என் கழுதையின் மீது பெயின்ட் அடித்தது?'' என்று ஆத்திரத்துடன் கேட்டார். ஒரு வாட்டசாட்டமான ஆள் ஒருவர் முன் வந்து, ''நான்தான் அடித்தேன். இப்போது என்ன செய்யப் போகிறாய்?'' என்று இளக்காரமாகக் கேட்டார்.
அந்த ஆளின் புஜ பலத்தைப் பார்த்தவுடன் அரண்டு போன முல்லா "'ஹி,ஹி.. .நீங்கள் தானா. வேறு ஒன்றுமில்லை, கழுதையின் மீது நீங்கள் அடித்த முதல் பெயின்ட் காய்ந்து உலர்ந்து விட்டது.எனவே நீங்கள் வந்து அடுத்த கோட் பெயின்ட் அடிக்கலாம் என்பதைச் சொல்ல வந்தேன்.'' என்று வழிந்தார்.
இப்படித்தான், நாம் ஒவ்வொருவரும் நாம் பலசாலியாக இருந்தால் சண்டைக்கு தயாராகி விடுகிறோம். எதிரி பலசாலியாக இருந்தால் அங்கு நம் கோபம் செல்லுபடி ஆவதில்லை. நாம் பயந்து சரண் அடைந்து விடுகிறோம்.
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/541344_460845843965750_1552311519_n.jpg)
அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது அறுபதாவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது ஒரு தேவதை.
உங்களின் இணைபிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன் எனது அன்பு பரிசாக “ஆளுக்கொரு வரம் தருகிறேன் கேளுங்கள்” என்றது.
மனைவி கேட்டாள், “இத்தனை காலம் எங்கள் வாழ்க்கை ஏழ்மையிலேயே கழிந்துவிட்டது. அடுத்த ஊரைக்கூட பார்க்க இயலாத பரிதாப நிலைமையிலேயே இருந்துவிட்டோம் உலகம் முழுக்க நாங்கள் சுற்றிப் பார்க்க உதவி செய்தாலே போதும்.”
கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா சொன்ன தேவதை அடுத்த விநாடியே கைநிறைய விமான டிக்கெட்டுகளை வரவழைத்துத் தந்தது. இப்போது கணவனின் முறை. மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயங்கித் தயங்கிக் கேட்டான், “என்னைவிட முப்பது வயது குறைந்த பெண்ணுக்கு நான் புருஷனாக வேண்டும்.”
அவனது விபரீத ஆசையைக் கேட்டு திடுக்கிட்ட தேவதை சற்றே யோசித்து கண்களை மூடி கைகளைச் சுழற்றி ஜீபூம்பா சொன்னது. அவன் தனது மனைவியைவிட முப்பது வயது கூடுதலான குடுகுடு கிழவனாக மாறியிருந்தான்.
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/22607_461095783940756_1725155525_n.jpg)
ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.
அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.
‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.
‘தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டாதான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. ‘இதை எப்பவும் மறந்துடாதே!’
அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. ‘நெய் சாப்பிட்டா பலமாயிடமுடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை’ என்று நினைத்தான். ஆனாலும் பாட்டி மனம் கோணக்கூடாதே என்பதற்காக வாங்கிக்கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.
அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்கதான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். சிவப்புக் கலரில் ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.
அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாத விஷயம், அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில். டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.
சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். ‘யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?’
‘நான்தான்ங்க. ஏன்?’ அப்பாவியாக விசாரித்தான் இவன்.
‘யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!’
அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது. ‘எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!’ என்று நெகிழ்ந்தான்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜென் குரு அவன் தலையில் குட்டினார். ‘முட்டாளே, ஒருவர் நிலாவைச் சுட்டிக் காட்டினால், நிலாவைப் பார்க்கப் பழகு. சுட்டிக் காட்டுகிற விரலையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்காதே!’ என்றார்.
-
(ரயில் பயணங்கள்..)
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/374047_462820110434990_1425162134_n.jpg)
''நீங்களும் உங்க மனைவியும் சென்னை வரைக்கும் வர்றீங்களாய''..
''ஆமாங்க.''
..
''நானும் என்மனைவியும் சென்னை வரைக்கும் வர்றோம்..நான் பேங்கிலே ஆபிசராக இருக்கேன்..நீங்க.''
.
''நான் தொடக்கப்ப.ள்ளி ஆசிரியராய் இருந்தேன்..ரிடையாராயிட்டேன்.''
''ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும்அ...ஆ...சொல்லி காலத்தை ஓட்டி இருப்பீங்க.''
..
''அ..ஆ..மாறவே இல்லையே..அதைத்தானே சொல்லதரமுடியும்..நீங்கஉங்க குழந்தைகளை மட்டும் பார்த்திருப்பீங்க..இரண்டு மூணு வருஷம் மட்டும்..நாங்க வாழ்க்கை முழுதும் குழந்தைகளை பார்த்துக்கிட்டு இருந்தோம்.''
.
''என்ன இருந்தாலும் சின்ன பசங்களோடு உங்க உத்தியோகம் முடிந்துடுது..இப்ப பாருங்க ..நான் பேங்க் மேனேஜர்..எல்லா மனிதருடனும் தொடர்பு உண்டு.. நான் இந்த ரயில்லே எக்மோர் வர்ரேன் சொன்னதும் ஒரு பெரிய பார்ட்டி ஸ்டேனுக்கே வந்து காரில் அழைச்சு வீட்டிலே கொண்டுவந்துவிடறன்னூ வர்றார்..உங்க உத்தியோக்த்தில் முடியுமா..பஸ் பிடிச்சு கூட்டத்திலே போக முடியும்..''
ஆசிரியருக்கு பேங்க்கார்ரிடம் எதுவும் பேச விருப்பம் இல்லை.
சென்னை வந்தது..மேனஜர் சொன்ன பெரிய மனிதரும் வந்தார் ..
.
எதேச்சையாக ஆசிரியரை பார்த்தார்..அந்த பெரிய மனிதர்
''ஆ..சார் நீங்களா..வில்லிவாக்கத்திலே மகன் வீட்டுக்கு போறீங்களா..நானே கொண்டுவந்துவிடுகிறேன்..
மேனேஜர் சார்..இவர் என்னோட ஆசிரியர்..அரி ஓம
சொல்லிகொடுத்தவர்..இவருக்கு பணி செய்ய கொடுத்து இருக்கனும்..நீங்க எதாவது ஆட்டோ பிடித்து போங்க..வருத்தபடாதீங்க.''.என்று கிளம்பினார்.
பேங்க் மேனேஜர் பரிதாபமாக நின்றார்..
-
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/60770_463229150394086_1895328399_n.jpg)
ஒரு ஐ.டி துறையை சார்ந்த ஒரு மனிதன் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டர வச்சுகிட்டு ஒரு ஆற்றின் ஓரமா தன்னோட வேலைய அதுல
பாத்துட்டுருந்தான்.அப்பொழுது கைத்தவறி அந்த கணினி ஆத்துல
விழுந்துருச்சு.அந்த சமயத்துல கடவுள பாத்து வேண்டுறான்,
எப்படியாவது கிடைச்சுரனும்னு. அப்படியே வேண்டிட்டு இருக்கும்போது அந்த ஆத்துல இருந்து ஒரு தேவதை வந்து என்ன ஆச்சுனு கேட்டது. இவனும் நடந்த விவரங்கள் எல்லாத்தையும் கூறினான். உடனே தேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு சின்ன வடிவத்தினால் ஆன ஒரு பென் ட்ரைவ் (pen drive) மாதிரி ஒன்ன எடுத்துட்டு வந்து இதுதானா? அப்படினு கேட்டது, இவன் அதற்கு”இது இல்ல”னு பதிலளித்தான்.
உடனே அது திரும்பவும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு “கால்குலேட்டர்(calculator)” மாதிரியான பொருளை கொண்டு வந்து இதுதானா என வினவியது. இப்பவும் மனிதன் “இது இல்ல”னு சொன்னான், .தேவதை மூணாவது முறையும் மூழ்கி இவனுடைய
லேப் டாப்(laptop) ப எடுத்துட்டு வந்தது. இந்த முறை மனிதன் இதுதான் என்னுடையதுனு சொன்னான்.
(நம்ம கதையில வர மனுஷ பய புள்ள இருக்கானே இந்த மாதிரியெல்லாம் நடந்த உடன் அவனோட சிறு வயது நியாபகம் வந்தது.உழவன் ஒருவன் இந்த மாதிரி கோடாரி ஒன்ன ஆத்துல தவற
விட்ருவான்,அப்ப தேவதை என்ன பண்ணும்,வெள்ளி ல ஒன்னும்,தங்கத்துல ஒன்னுமா எடுத்துட்டு வந்து கேட்கும்.உழவன் அவனோட கோடாரிய மட்டும் என்னோடதுனு சொன்ன உடனே இவனோட நேர்மைய பாராட்டி அந்த மூன்று கோடாரியயும்
அவனிடமே கொடுத்து விடும்.)
இப்ப இங்க வருவோம்.மனிதன் சொன்னானா,லேப் டாப் மட்டும்தான் என்னோடதுனு.அதற்கு தேவதை லேப்டாப் ப குடுத்துட்டு ஒரு சிரிப்பு
சிரித்தது..மனிதன் கேட்டான் ஏன் சிரிக்கிற என்னைய பாத்துனு?
தேவதை சொன்னது” நான் முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் காட்டினது பல மில்லியன் ,ட்ரில்லியன் குடுத்து வாங்க வேண்டிய எதிர்
காலத்துல வரக்கூடிய கம்ப்யூட்டர்”எதுவுமே நமக்குதான் தெரியும்னு இருக்காதேனு சொல்லிட்டு மறைந்தது .மனிதனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தன் தவறு.
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-snc7/431667_463849030332098_767984771_n.jpg)
ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி “ஐஸ் கிரீம்
செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி
செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா
எனக்குன்னு அழ யாரு இருக்கா”ன்னு கேட்டுச்சாம்..அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!
அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
வருதாம்..!!
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/527346_464727530244248_1064647019_n.jpg)
கலைக்கூடமொன்றில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தாள் ஓவியர் ஒருவர்.
அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,
"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர்.
.
"உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல சேதி ஒன்றும், கெட்ட சேதி ஒன்றும் உள்ளது."
அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்"
"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார். ஆம். கூடும் என்று நான் சொன்னவுடன், 15 ஓவியங்களையும் அவரே வாங்கி விட்டார்."
"அப்படியா? மிகவும் நல்லது. சரி. அந்த கெட்ட சேதி?"
"அந்த ஆள் வேறு யாருமில்லை. உங்கள் குடும்ப டாக்டர் தாம்."
-
குரங்குகளை எப்படிப் பிடிப்பது?
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/387733_465226580194343_534440820_n.jpg)
ஒரு காலத்தில் செர்ரிப் பழங்கள் மீது பெரும் விருப்பம் கொண்ட குரங்கொன்று வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் ருசியைத் தூண்டும் வகையில் இருந்த செர்ரிப் பழத்தைப் பார்த்து , அதைத் தின்பதற்காக மரத்தை விட்டுக் கீழிறங்கி வந்தது அந்தக் குரங்கு.
ஆனால் அருகில் வந்தவுடன்தான், அப் பழமானது கண்ணாடிக் குடுவைக்குள் இருப்பதைக் கண்டது அக்குரங்கு.
சிற்சில முயற்சிகளுக்குப் பிறகு, குடுவையின் கழுத்துப் பகுதியின் வழியாகத் தன் கையை விட்டுத்தான் பழத்தை எடுக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டது குரங்கு.
அப்படி குடுவையின் கழுத்துப் பகுதி வழியாக கையை விட்டு, பழம் கையில் தட்டியவுடன் அதைத் தன் உள்ளங் கைக்குள் மூடிக் கொண்டது குரங்கு. அந்தப் பழத்துடன் மூடியவாறே தன் மணிக்கட்டை வெளியே எடுக்க முயன்ற குரங்கு, அப்படி முடியாதென உணர்ந்து கொண்டது.
ஏனென்றால் கையை வெளியே எடுக்க முடியா வண்ணம் குடுவையின் கழுத்துப் பகுதி குறுகலாக இருந்தது.
இந்த விஷயங்களனைத்தும் கவனமாக முன்னே திட்டமிடப் பட்டவை.
குரங்குகள் எப்படி யோசிக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்த வேட்டைக்காரன் ஒருவன்தான் செர்ரிப் பழத்தை, குரங்கைப் பிடிப்பதற்கான பொறியாக வைத்திருந்தான்.
கை மாட்டிக் கொண்ட பீதியில் குரங்கு போட்ட சப்தத்தைக் கேட்டு வேட்டைக்காரன் வெளி வந்தான். அவனைப் பார்த்த பின்பு தப்பிக்க எண்ணிய குரங்கின் கை குடுவையினுள் மாட்டியிருந்ததால் அதனால் வேகமாக ஓட முடியவில்லை.
ஆனால் குரங்கிற்கு ’தன் கைக்குள்தான் பழம் உள்ளது. . பழம் வேறு எங்கும் போய் விடவில்லை' என்ற ஆறுதலான நினைப்பிருந்தது.
வேட்டைக்காரன் குரங்கைத் தூக்கினான். அடுத்த நொடியில் குரங்கின் முழங்கைக் கணுவில் பலமாக ஒரு சுண்டு சுண்டினான். சுண்டப்பட்ட அதிர்ச்சியில் குரங்கு பழத்தின் மீதிருந்த பிடியை விட்டது. இப்போது குரங்கு சுதந்திரமடைந்துவிட்டது. ஆனால் வேட்டைக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டது. வேட்டைக்காரன் பழத்தையும், கண்ணாடிக் குடுவையையும் பயன்படுத்தினாலும் அந்த உடமைகள் இழக்கப்படாமல் அவன் வசம் தங்கின.
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/148107_466124820104519_1444866995_n.jpg)
காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி,
அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
நாலாவது நாள்...
பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால்,
எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை
பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர்
. யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)
அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார்.
நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை.
இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.
அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி,தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.
காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு,
தேடுதல் வேட்டையைத் துவங்கியது. அடுத்த பத்தாவது நிமிடத்தில்,
ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும்கண்டுபிடித்துவிட்டார்கள்.
புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!
நீதி உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,செல்வமோ கிடையாது.
நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/391623_466537453396589_754528238_n.jpg)
குப்பு சுப்பு ரெண்டு பேரும், இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற போனாங்க.
அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு.
கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி
மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே சுப்பு எடுத்தாரு ஓட்டம்,
ஆனா குப்பு தன்னோட பேக்-ல இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.
இதை பார்த்த சுப்பு “ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா? சீக்கிரம் வா புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்” மின்னு சொன்னாரு
“நெசம் தாம்லே புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்
-
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/536716_468774269839574_1994598377_n.jpg)
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.
அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.
பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.
-
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/46020_469029353147399_527363930_n.jpg)
மிகப் பெரிய பூங்கா அது. பூக்கள் பல வண்ணங்களில் சிரித்தன..போவோர், வருவோர் எல்லாம் பூக்களை கிள்ளிச்
சென்றனர். அது தோட்டக்காரனுக்கு வலித்தது.
ஒரு பலகையில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று
எழுதி வைத்துச் சென்றான். அன்று முதல் யாரும்
பூக்களின் மீது கை வைப்பதில்லை.
ஒரு நாள் காற்று கொஞ்சம் பலமாக அடித்தது.
பூக்களின் சில இதழ்கள் உதிர்ந்தன. அதைப் பார்த்த
தோட்டக்காரன் சொன்னான். “பாவம், காற்றுக்குப்
படிக்கத் தெரியாது’
ஆம். நல்ல இதயம் உள்ளவன் பூக்களுக்குத்
தோழனாகவும் இருப்பான். காற்றையும் பகைத்துக்
கொள்ளமாட்டான்.
-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/559052_469790989737902_73969185_n.jpg)
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை.
அத்துடன் கோபம் வேறு பொங் கியது…
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது.
ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென் றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.
-
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc1/526746_476457895737878_1344080750_n.jpg)
கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் பக்கத்திலிருந்த நகரத்திற்கு சென்றார்கள்.அங்கு ஒரு மதுக் கடையைப் பார்த்தவுடன் உள்ளே நுழைந்தவர்கள் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தனர்.
நீண்ட நேரம் சென்றபின் ஒருவன் சொன்னான்,''டேய் மாப்பிள்ள,கடைசி பேருந்தைப் பிடித்தாவது ஊருக்குப் போக வேண்டுமே,''என்றான்.உடனே இருவரும் பேருந்து நிலையம் சென்றனர்.அப்போது கடைசிப் பேருந்து போய்விட்டிருந்தது.என்ன செய்வது என்று இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.
உற்சாகமாக ஒருவன் கத்தினான், ''பக்கத்தில்தானே பேருந்து டெப்போ இருக்கிறது!ஏதாவது ஒரு பஸ்ஸை வெளியே எடுத்து நாமே ஓட்டிக் கொண்டு நம் ஊருக்குப் போனால் என்ன?''என்று கேட்க முழு போதையில் இருந்த அடுத்தவன்,''நானே சென்று பேருந்தை எடுத்து வருகிறேன்,''என்று கூறி உள்ளே சென்றான்.நீண்ட நேரம் ஆகியும் அவன் வெளியே வரவில்லை.திடீரென பல பேருந்துகளை இடித்துக் கொண்டும் சேதப்படுத்திக் கொண்டும் ஒரு பேருந்து வெளி வந்தது.அதை அவன் ஓட்டிக் கொண்டு வந்தான்.
''ஏண்டா இவ்வளவு நேரம்?''என்று இவன் கேட்க அவன் சொன்னான்,''என்ன செய்வது? நம்ம ஊருக்குப் போற பேருந்தைக் கடைசியில் நிறுத்தி வச்சிருந்தாங்க.அதைத் தேடி எடுத்து வர தாமதமாயிருச்சி,''
-
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/16193_478567078860293_699422256_n.png)
ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்..
கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரையும் இல்லை..''அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார்..
''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்..
''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்..
இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..அந்த விருந்தாளி..
அவர் வெளியேறிவிட்டதும் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்..
''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே...''என்றான் கணவன்..
''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்றாள் மனைவி..
''பிராமாதம்..'' என்றான் கணவன்..
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது..
''நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்..'' அந்த விருந்தாளிதான்..
கதையின் நீதி...நடிப்பு என்றுமே உதவாது...
-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/45302_480295955354072_585548033_n.jpg)
திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது.
ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருவன் பாய்ந்து வந்து அனாயாசமாக அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன்.நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். பின் அவனுக்குத் தனது தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான்.அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான்.பின் சர்க்கஸ்காரனிடம் அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை. அவன் தயங்கியவாறு நின்றிருந்தான்.திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''அய்யா,என்னைத் தவறாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்.என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர்.அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன்.அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.
''அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை!
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/481492_481502791900055_940128406_n.jpg) (http://www.friendstamilchat.com)
ஊரில் ஒரு பெரிய மனுஷன்.
புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள...தன் மகன்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தாராம்.
ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி... தன் வீட்டின் ஒரு அறையை பூராவும் நிறைக்க வேண்டும் என்பதே அந்தப் போட்டி.
ஒரு மகன் விவசாயி.
ஆயிரம் ரூபாய்க்கும் வைக்கோலாய் வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.
ஆனால் பாவம், அறை கால்வாசிகூட நிரம்பவில்லை.
அடுத்த மகன் வியாபாரி.
ஆயிரம் ரூபாய்க்கும் பஞ்சு வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.
ஆனால் பரிதாபம், அறை அரைவாசிகூட நிரம்பவில்லை.
கடைசி மகனோ அரசியல்வாதி.
அவன் ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுவர்த்தி அறையில் ஏற்றினானாம்.
அறை முழுவதும் ஒளியால் நிரம்பியது.
பெரியவர் மற்ற இரு மகன்களைப் பார்த்து பெருமையாய் சொன்னாராம்.
"புரிந்ததா புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று.?"
கேட்டதும் மகன்கள் இருவரும் தலையைக் குனிய, அரசியல்வாதி மகனின் பிஏ தனக்குள் முணுமுணுத்தானாம்.
"ஆமாமா... எந்த லூஸாவது 'மீதி தொள்ளாயிரத்து தொண்ணூதொம்பது ரூபா எங்கே'னு கேட்டுச்சா பாரு.!!!".
.
.
அந்த லூசுங்க நாம் தானா ???
-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/530390_481920531858281_2137196476_n.jpg) (http://www.friendstamilchat.com)
ஒரு மனிதர் அன்பு சேவை இவைகளை மையமாக வைத்து வாழ்ந்து வந்தார்..
யாரோ ஒருவர் ''கடவுளை நேசிக்கும் மனிதர்கள் ''பற்றி பட்டியல் இருக்கும் புத்தகம் ஒன்று வைத்துள்ளார் என்று கேள்விப்பட்டு அவரை தேடிப்போய் அந்த புத்தகத்தை பார்த்தார்...
அந்த புத்தகத்தில் அவரது பெயர்எங்கு தேடியும் இல்லை....
அடுத்த ஆண்டும் அவரை சந்தித்து அந்த புத்தகத்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா பார்த்தார்..
அவர் பெயர் இல்லை..
புத்தகத்தை அளித்தவர் ''கடவுள் நேசிக்கும் மனிதர்கள் என்ற சின்ன புத்தகம் உள்ளது அதில் இருக்கிறதா பாருங்கள் ''என்றார்..
அந்த புத்தகத்தில் அவரது பெயர் முதலாவது பக்கத்திலேயே இருந்தது...
பிறரை நீங்கள் நேசித்தால்... பிறரும் உன்னை நேசிப்பர்...
-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/522706_482685741781760_1410167677_n.jpg)
ஒரு பெரிய நிறுவனத்தில
வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி நோய்
வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்
பார்த்து,
மருந்து ,இஞ்செக்ஷன் எல்லாம்
வாங்கிப் போட்டும்,
எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.
-
கடைசியில் அவனுடைய
புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல
வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)
போய் உடம்மைபைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்கு சரியான
ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.
-
என்னது மிருக டாக்டர்கிட்டேயா ?
உனக்கென்ன மூளை கெட்டுப்
போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
-
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான ் எல்லாமே கெட்டுப்
போய் கிடக்கு!
காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்
க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி ‘லபக்
லபக்’னு ரெண்டு வாய் தின்னுட்டு ,
பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக
ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
-
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க
மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே,
ஆடு மாடுங்க
மாதிரி பஸ்லே அடைஞ்சு
வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும்
வராததுமா,
நாள் பூராவும் வேலை செஞ்ச
களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க!
அப்புறம்
முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக்
சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடு மாதிரி போய்
படுத்து தூங்கறீங்க!
-
மறுபடியும்
விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனுஷ
டாக்டர்
எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன்,
நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப்
போய் பாருங்க!”
என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்
மனைவி.
-
என்ன பதில் சொல்வதென்று தெரியாம
கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’
போங்கன்னு உதாரணம் வச்சாளாம்
மனைவி..
-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/430856_483008385082829_338402210_n.jpg)
மன்னர்: யாரங்கே!!
அமைச்சர்: சொல்லுங்கள் மன்னா....
மன்: இதுவரை நான் கண்டிறாத பழங்களை உன்ன விருப்பம் எனக்கு,, விரைவில் ஏற்பாடுசெய்யுங்கள்...
அமைச்: உத்தரவு...
சபைகூடுகிறது!!!
மன்னா இதோ இங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான கணிகளை கொன்டுவந்துள்ளனர்.
மன்: நான் உண்ட கனி இருக்குமெனில் அதை கொண்டுவந்தவனை விழுங்கச்செய்துவிடுவேன் என எச்சரியுங்கள்.... வரச்சொல்லுங்கள்,,,...
முதலில் வாழைபழத்தோடு வருகிறான் ஒருவன்..
மன்: இது நான் உண்டு இரசித்த கனியாதலால் நீரே விழுங்கிவிடு....
உத்தரவு...
மற்றொருவன்: மன்னா இதோ மாங்கணி...
மன்: யாம் இதையும் உண்டுவிட்டோம்.. நீயே விழுங்கு..
உத்தரவு....
இன்னொருவன் அண்ணாச்சி பழத்தோடு வருகிறான்..
மன்: இதையும் யாம் உண்டுவிட்டோம் ... அப்படியே விழுங்கு...
இவனும் விழுங்குகிறான்... வாயெல்லாம் இரத்தம் வழிகிறது.. இருந்தும் சிரித்தவாறே விழுங்குகிறான்...
மன்: என்ன?இரத்தம்வழிகிறது என்வாயில்... இருப்பினும் ஏன்இந்த சிரிப்பு.. சொல்லிவிட்டு விழுங்கு...
அது வேறொன்றும் இல்லை மன்னா.... எனக்குபின்னால் ஒருவன்பலாபழத்துடன் நிற்கிறான்.. அவன்நிலையை நினேத்துப்பார்த்தேன்.. அதான் சிரிப்பை அடக்கமுடியவில்லை... அதான் ஹாஹாஹாஹாஹா...
-
''பிட்''(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/15983_483337438383257_1252760393_n.jpg)
வழக்கம் போல் சிவா கல்லூரி இறுதி தேர்வுக்கு உடலின் எல்லா இடங்களிலும் பதில் களை தயார் செய்து 'பிட்' வைத்திருந்தான்..
ஆனால் நடந்தது வேறு..கண்டிப்பான ஓரு கண்காணிப்பாளரை தேர்வு எழுதும் அறைக்கு நியமித்துவிட்டார்கள்..
அறைக்குள் நுழையும் முன்னேரே ஓவ்வொருவரையும் முழமையாக சோதனைபோட்டே அறைக்குள் அனுப்பிவைத்தார்..
சிவா வால் தப்பமுடியவில்லை..மூன்று நாடகளாக இரவு பகலாக பிட் எழுதியது அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட்டது..
பறி முதல்செய்த கணகாணாப்பளருக்கு ஆச்சரியம்..
நுணுக்கி நுணுக்கி எழுதி இவ்வளவு தாள்களா..
பறி முதல் செய்த கண்காணிப்பாளர் கேட்டார்..
''இவ்வளவையும் நீதான எழுதினாயா..?''
''ஆம்''
'எல்லாம் போச்சு ''என்றான்..
''கிட்டதட்ட முழுபாடத்திற்கும் தயார் செய்திருப்பாய் போலிருக்கிறது..
உள்ளே உள்ளவர்கள் யாரும் இந்த அளவுக்கு படித்துஇருக்கமாட்டார்க்ள..
நீ எழுதிபார்த்திருக்கிறாய்..
இப்போது உனக்கு வேண்டியது நம்பிக்கை..எழுதிய பிட்டின் கருத்துக்கள் உன்னுள் எறியிருக்காலம் ..வெளுத்து கட்டு..''
என்றார்..
வேண்டா வெறுப்பாக முதல் கேள்விக்குபதில் எழத ஆரம்பித்தான்..
முதலில் சற்றே தடங்கல்..
அப்புறம் சரளமாக வந்தது...
தேர்வு தாளை தரும்போது கண்காணிப்பளரிடம் சொன்னான்..
''எனது கண்ணை திறந்தீர்க்ள ..நன்றி ஐயா..''என்றான்
# யானையின் பலம் அதற்க்கு தெரியாது..
-
தென்னாலிராமன் கதைகள்- நீர் இறைத்த திருடர்கள்(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/3878_485176114866056_966944908_n.jpg)
ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.
இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.
"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.
"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.
அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.
திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.
பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.
சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.
இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.
அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.
திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.
-
முல்லாவின் கதை - "கடன் வாங்கிய ஏழை"(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/65146_485565361493798_684071249_n.jpg)
முல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். "ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத் திருப்பிக்கொடுக்க முடியாது தினறுகின்றான். அவன் தற்கொலை செய்து விடுவானோ என்று கூட எனக்குப்பயமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு ஆயிரம் பொற்காசுகள் அந்த மனிதனுக்கு அவனின் கடனை அடைப்பதற்கு கொடுத்தால் அவன் உரிய காலத்தில் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்" என்று முல்லா மிகவும் உருக்கமாகக் கூறினார்.
அதைக்கேட்டு மனம் உருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து "அவ்வளவு கஷ்டப்படும் மனிதன் யார்?" என்று கேட்டார். "வேறு யாருமல்ல நான்தான்" என்று கூறிச்சிரித்தவாறு முல்லா சென்று விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்து முல்லா அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். இரண்டொரு மாதங்கள் கழிந்தபின்பு மீண்டும் ஒருநாள் முல்லா அப்பணக்காரரிடம் வந்தார். "யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கஷ்டப்படுகின்றாராக்கும் அதை என்னிடம் வாங்கிக் கொடுக்க வந்நிருகின்றீராக்கும்" என்றார் செல்வந்தர். "ஆமாம்" என்றார் முல்லா.
"அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே" என்று செல்வந்தர் கேட்டார். "இல்லை உண்ணமையிலையே ஒரு ஏளைதான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான்" என்றார் முல்லா. "உம்மை எவ்வாறு நம்புவது பணத்தை வாங்கிய பின் 'நான்தான் அந்த ஏழை' என்று கூறமாட்டீர் என்பதற்கு என்ன நிச்சயம்" என்று செல்வந்தர் கேட்டார். "நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறேன்" என்றார் முல்லா.
பிறகு வாசல்ப்பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார். " நீர்தான் கடன் வாங்கி கஷ்டப்படும் ஏழையா? " என்று கேட்டார் செல்வந்தர். "ஆமாம்" என்று அந்த ஏழை பதில் சொன்னான். செல்வந்தர் முல்லா சொன்ன தொகையினை ஏழையிடம் நீட்டினார். அதனை முல்லா கை நீட்டி வாங்கிக்கொண்டார். " என்ன பணத்தை நீர் வாங்குகிறீர் பளையபடி என்னை ஏமாற்றுகிறீரா?" என செல்வந்தர் கேட்டார். " நான் பொய் சொல்ல வில்லையே கடன்வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடனை இப்பொழுது வசூல் செய்கிறேன்" என்று கூறியவாறு ஏழையை அழைத்துக்கொண்டு முல்லா நடந்தார்.
-
"பீர்பால் கதை - பரிசு 50 கசையடிகள்"(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc6/248745_495061620544172_1266564637_n.jpg)
மகேஷ் தாஸ் என்பவன் அக்பரின் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன். ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் மகேஷ். அதற்குப் பிரதியாகத் தன் மோதிரம் ஒன்றைப் பரிசளித்த அக்பர் , அரண்மனைக்கு வந்தால் அங்கே அவனுக்கு நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்கிறார் அக்பர்.
அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறான் மகேஷ் தாஸ். காவலாளி விடவில்லை. பிறகு மோதிரத்தைக் காண்பித்தவுடன் ' இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான் ; அதில் நாமும் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் என்ன ?' என்று நினைக்கும் காவலாளி "உன்னை உள்ளே விட்டால் உனக்குக் கிடைக்கும் பரிசில் எனக்கும் பாதி பங்கு தர வேண்டும்" என்று சொல்லி உள்ளே விடுகிறான்.
உள்ளே சென்ற மகேஷ் தாஸ் அக்பரைச் சந்தித்து மோதிரத்தைக் காண்பிக்க , " உனக்கு என்ன பரிசு வேண்டும் , கேள் ?" என்று கேட்க , "50 கசையடிகள் வேண்டும்" என்கிறான் மகேஷ். ' இவனுக்கு என்ன பைத்தியமா ?' என்று நகைக்கின்றனர் சபையோர். ஆச்சரியமுற்ற அக்பரும் "ஏன் இப்படிக் கேட்கிறாய் ?" என்று கேட்க , " பரிசை வாங்கிக் கொண்டு சொல்கிறேன்" என்கிறான் மகேஷ். 25 கசையடிகள் முடிந்ததும் நிறுத்தச் சொல்லி மீதி அடிகளை வாயிற்காப்போனுக்குத் தரும்படி கூறுகிறான் மகேஷ். அப்போதுதான் மன்னருக்கு விஷயம் விளங்குகிறது.
வாயிற்காப்போனுக்கு 50 கசையடிகளும் , 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்த அக்பர் , மகேஷின் புத்தி சாதுர்யத்தை வியந்து அவனைத் தன் பிரதான மந்திரியாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.
-
மிஸ்டர்.மொக்கையின் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டகாலம்..!
கடவுளை உள்ளம் உருக வேண்டினார்.. (https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/298935_495526863830981_556580902_n.jpg)
"சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!"
குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து , மொக்கை ரொம்ப பீல் ஆயிட்டாரு.
அடுத்த மாத குலுக்கல் நேரம்.. மொக்கை இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ மொக்கையின் பக்கத்து வீட்டுக் காரனுக்கு..!
"அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?
கடவுள் சொன்னார்..
" மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா மூதேவி..!"
-
"சுமை"(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/481276_498361323547535_260073518_n.png)
ஓர் ரயில் பயணி தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் எறி அமர்ந்தார்..
ரயில் அவரை இழுத்துக்கொண்டு பயணித்தது
ஆனால் அவரோ தமது மூட்டைகளை தாமே தலையில் சுமந்து கொண்டு பயணம் செய்தார்...
பகவான் ரமணன் கூறுகிறார்...
உண்மையில் மூட்டையையும் அந்த நபரையும் சேர்த்துதான் ரயில் பயணிக்கிறது..
சுமந்து கொண்டு சென்றாலும் சரிசுமக்காமல் இருந்தாலும்சரி இரண்டையும் இழுப்பது ரயில் அல்லவா...?
மூட்டை இறக்கிவைத்துவிட்டால் ரயில் இழுக்க மறுப்பதில்லை.
.
அவர் சுமந்து கொண்டு சென்றாலும் இற்க்கி வைத்தாலும் ரயிலின் சுமையின் மாற்றம் இல்லை..
கூடுவதில்லை..
அவருக்குதான் சுமை குறைகிறது..
இது போல்தான்வாழ்க்கை எனும் பயணத்தில் துயரம் எனும் சுமையை இறைவன் மீது இறக்கிவைத்தால் பயண்ம் எளிதாக இருக்கும்...
வீணாக சுமையை சுமக்கவேணடாமே..