FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on January 23, 2013, 05:32:01 PM

Title: இதுவும் கவிதைகள்தானே!!!
Post by: vimal on January 23, 2013, 05:32:01 PM
இன்று கல்லூரியில் உணவு இடைவேளைக்கு பிறகு வகுப்பறை சென்றேன், பின் பாடம் நடத்த தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே என்னை தாயாக்கிவிட்டார்கள்(தூங்கிவிட்டார்கள்)  :(
என்ன செய்வது பின் பாடத்தை விட்டு உங்களால் முடிந்த கவிதையை எழுதி கொடுங்கள் என்றேன் இதோ அவர்களின் கவிதைகள் நீங்களே சொல்லுங்க இவையும் கவிதைகளா என்று :D


1)நீ பேசியபோது பேசும் பூவைப்பார்தேன்
   என்று சொன்னேன் நண்பர்களிடம் யாரும்
   நம்பவில்லை உன்னை பார்க்காத வரை!!!
   _____________________________________
   உன் வீட்டுத் தோட்டத்தின் துணிக்கொடியில்
   தேனிக்கள் சுற்றின, உன் இதழ் மலரை தழுவும்
   கைக்குட்டையில் இருக்கும் தேனை எடுப்பதற்காக!!!
   _____________________________________
   உன் இதழ் மலரில் முத்தமிட்டதற்க்கு மன்னிக்கவும்
   மருத்துவர்தான் தேன் சாப்பிடச் சொன்னார்!!!
   _____________________________________
   நான் உன்னைப்பார்க்கையில் நீ மன்னைப்பார்கிறாய்
   என்னைவிட மண்ணைப்பிடிக்குமென்றால் சொல்
   நானும் மண்ணோடு மன்னாகிறேன்!!!
                                                அரவிந்த்(ஏசி மெக்கானிக்)
   
   _____________________________________
2)என் வீட்டுத்தோட்டத்தில் பூத்த ரோஜாவிடம்
   உளறினேன், உன்னைப்போல இருந்ததால்!!!
   _____________________________________
   தெருவில் கண்ட பெண்ணை நேசிப்பதைவிட
   கருவில் சுமந்த தாயை நேசி!!!
                                               RP சியான் ப்ரான்சிஸ்(ஏசி மெக்கானிக்)
   _____________________________________

3)அடியே சிட்டு
   உனக்கு வயது 18
   உன்மேல ஆசைப்பட்டு
   ஏந்தினேன் காதல் மொட்டு!!!
   _____________________________________
   தென்றல் மோதியதால் இனிமை
   நீர் மோதியதால் அலை
   வார்த்தை மோதியதால் கவிதை
   கண்கள் மோதியதால் காதல்!!!
   _____________________________________
   அடியேய் நில்லு
   வேலியில் இருக்குது முள்ளு
   என் காதல்ல இருக்குது தில்லு
   நீதான் என் காதலின்னு சொல்லு
   நீ நடப்பது தார்ரோடு
   நான் இருப்பது ஈரோடு
   நீ என்றும் இருப்பது என் மனதோடு!!!
                                             பொல்லாதவன் மகேஷ்(ஏசி மெக்கானிக்)
   _____________________________________

4)மனிதனாய் பிறந்தவர்கள் அனைவரும் காதல்
   எனும் வலையில் வீழ்வார்கள், அதில் நீயும்
   வீழ்வாய் என காதிதிருக்கிறேன்!!!
                                              சுறா தினேஷ்குமார் ((ஏசி மெக்கானிக்)
   _____________________________________

5)நூறு விக்கல் வந்தாலும் தண்ணீர் குடிக்கமாட்டேன்
   ஏன் என்றால் நீ என்னை நினைப்பதை நிறுத்திவிடுவாய் என்று!!!
                                              S.நந்தினி(செவிலியர்)
   _____________________________________

6)முடியும் என்று முன்நூரை எழுது, முடியாது என்று
   முடிவுரை எழுதாதே!!!
                                              V.சாமுண்டீஸ்வரி(செவிலியர்)
   _____________________________________

7)அன்பே
   உன் தலைமுடி செம்மறி ஆட்டின் முடி போன்றது!
   உன் கண்ணம் தீஞ்சி போன பன்னு போன்றது!
   உன் கண்கள் தேவாங்கு கண் போன்றது!
   உன் வாய் பெரிய தவளை வாய் போன்றது!
   உன் மூக்கு முந்திரிகொட்டை போன்றது!
   உன் பற்கள் பனங்காயை போன்றது!
   உன் கழுத்து ஒட்டகத்தை போன்றது!
   உன் இடை கிரைண்டர் போன்றது!
   உன் பாதம் தேய்ந்த செருப்பு போன்றது!
   ஆனால்!!
   உன் இதயம் மட்டும் குட்டுத்தீவைப் போன்றது!
                                            பேபிஷாலினி(செவிலியர்)
Title: Re: இதுவும் கவிதைகள்தானே!!!
Post by: ஸ்ருதி on January 23, 2013, 06:21:54 PM

5)நூறு விக்கல் வந்தாலும் தண்ணீர் குடிக்கமாட்டேன்
   ஏன் என்றால் நீ என்னை நினைப்பதை நிறுத்திவிடுவாய் என்று!!!
                                              S.நந்தினி(செவிலியர்)
   _____________________________________

6)முடியும் என்று முன்நூரை எழுது, முடியாது என்று
   முடிவுரை எழுதாதே!!!
                                              V.சாமுண்டீஸ்வரி(செவிலியர்)



செம!!! செம!!! டாப்!!!!! 
Title: Re: இதுவும் கவிதைகள்தானே!!!
Post by: Global Angel on January 26, 2013, 02:25:14 AM
அழகான கவிதை தொகுப்புகள்