FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on January 23, 2013, 10:34:56 AM

Title: டீ போடும் முறை -- புதினா டீ, கிரீன் டீ
Post by: kanmani on January 23, 2013, 10:34:56 AM
tea kooda poda therialai endru thitu vaangaum sagotharikalukum .. dhinamum osi tea ( kekum )  kudikum aatkalukum  ingae tea podum murai solgiren ...  seidhu payanadaiyungal ....

நிறைய பேருக்கு எவ்வளவு பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்து, எப்படி டீ போடுவது என்றே தெரியாது. நல்ல திக்கான பாலாக இருந்தால், 1/2 லிட்டர் பாலுக்கு 200 மிலி டம்ளரில், 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். மொத்தமாக 5 டம்ளர் அளவு வரும். கால் டம்ளர் சேர்த்து ஊற்றினால் கொதித்து குறைவதற்கு சரியாக இருக்கும்.

தேவையான பாத்திரங்கள்:
கெட்டில், டீ வடிகட்டி, டீ வடிக்க ஒரு பாத்திரம், டம்ளர்கள்.

தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்,
தண்ணீர் - 2 டம்ளர் + 1/4 டம்ளர்,
டீத்தூள் - 5 தேக்கரண்டி,
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி.

செய்முறை:

பாலுடன் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

பொங்கி வரும் போதெல்லாம் கலக்கி, கலக்கி, திரும்ப வைக்க வேண்டும். பொங்கி வழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

நன்கு கொதித்ததும், வடித்தால் டீ ரெடி. (ஒரு ஏலக்காயும், சிறிது தோல் சீவிய இஞ்சியையும் சின்ன இடிப்பானில் நசுக்கி, டீ கொதிக்கும் போது போட்டால் டீயின் சுவை இன்னும் கூடும்.)

டீயை சரியாக கொதிக்க விடலைன்னா, பால் வாசம் அடிக்கும். டீத்தூள் குறைவாக போட்டாலும் டீ நன்றாக இருக்காது. எப்போதுமே டீ போட்டதுமே, வடித்து, டம்ளர்களில் ஊற்றி விட வேண்டும். அப்போது தான் சூடு ஆறாமலிருக்கும்.

இந்த அளவுகள் 5 பேருக்கானது. அவ்வளவு பேர் இல்லையே, ஒருத்தருக்கு மட்டும் தான் போடணுமானால் என்ன செய்யணும்னு கேட்கறீங்களா? சொல்றேனே.

எப்படியும் 1/2 லிட்டர் பால் வாங்குவீர்கள். பாலை காய்ச்சி தனியே வைத்துக் கொள்ளவும். 3/4 டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி டீத்தூள், 3/4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2,3 முறை நன்கு பொங்கி வர வர கொதிக்க விட்டு, இறக்கி உடனே வடிக்கட்டினால் டீ ரெடி.

ரொம்ப தலைவலியாக இருந்தால், ஒரு சிறு துண்டு இஞ்சி நசுக்கி டீ கொதிக்கும் பொழுது போட்டு, கொதித்ததும் வடிகட்டி அருந்தினால் தலைவலி குறையும்.

டீயைப் பற்றி சொல்லும் போது புத்துணர்ச்சி தரும் புதினா டீ பற்றியும், உடலுக்கு நன்மை பயக்கும் கிரீன் டீ பற்றியும் சொல்லாமல் விட்டு விட்டேன்.

அதே போல் காஃபியிலும் பித்தம் போக்கும் கொத்தமல்லி காஃபி, கடுங்காப்பி என கிராமத்தில் அழைக்கப்படும் காஃபியையும் சொல்ல வேண்டும்.

புதினா டீ

Black teaவழக்கமாக 5 பேருக்கு டீ போடுவது போல் போட்டு, டீ நன்கு கொதித்து, அதை இறக்கப் போகும் போது, அதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலை ஒரு கைப்பிடி, சிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டு, ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் களைப்பெல்லாம் பறந்து, புத்துணர்வு வரும். ஒருவருக்கு மட்டும் என்றால், ஆறேழு புதினா இலைகள், கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும்.

புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால், நிறைய கிடைக்கும் போது வாங்கி சுத்தம் செய்து கழுவி, காயவைக்கவும். நன்கு காய்ந்தபின் பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும். ஒருவருக்கான டீ போடுவது என்றால் கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால், ஒரு தேக்கரண்டி அளவும் புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.

கிரீன் டீ

கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. கான்சர், ஆர்த்தரைடீஸ், இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது. தினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை ரொம்ப சூடாகவோ, ரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லது. எந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. கிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாது. ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாது. அல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.

கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால், தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

பிளாக் டீ

சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்து, பால் சேர்க்காமல் வைப்பது தான் பிளாக் டீ. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு (சுமாராக 5 நிமிடம்) இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடி. இதனுடன் கால் மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு கட்டுப்படும். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நல்லது. குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால், சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்க்கலாம். சீனாக்காரர்கள், ஜப்பானியர்கள் பிளாக் டீயைத்தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள்.

ரோஸ்மெரி டீ


    ரோஸ்மெரி நெட்டுகள் - 4
    டீ பாக்ஸ் - 2
    சீனி & பால் - அவரவர் சுவைக்கேற்ப

 

    அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்திலிட்டு ஒன்றரை கோப்பை கொதிநீர் விட்டு மூடி, குறைந்தது பத்து நிமிடங்கள் ஊறவிடவும்.
    இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் போழுது, இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டுவரவும்.
    இரண்டு பாக் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக் கொள்ளவும்.
    தேவைக்கு பால், சீனி சேர்த்துக் கலக்கினால் சுவையான, புத்துணர்ச்சியூட்டும் ரோஸ்மெரி டீ தயார்.

Note:

ரோஸ்மெரி டீ தலைவலி, தடிமல் வேளைகளில் இதம் தரும். பூக்கள், மொட்டுகள் & பூச்சிகள் இல்லாத இளம் ரோஸ்மெரி நெட்டுகளை மட்டும் தெரிந்துகொள்ளவும்.

 ( tea kudithaal thalaivali pogum endraaal .. tea poduradhae thalaivali ena karudhum anbu thozhigalae ini olunga tea podunga )
Title: Re: டீ போடும் முறை --
Post by: SuBa on January 23, 2013, 10:39:23 AM
tis is top kodumai of forum :D :D :D :D
Title: Re: டீ போடும் முறை --
Post by: Gotham on January 23, 2013, 10:41:29 AM
Tea kooda poda theriyaathavantha thaan.. 1st reply potirukarathu..  8) 8)
Title: Re: டீ போடும் முறை -- புதினா டீ, கிரீன் டீ
Post by: SuBa on March 14, 2013, 11:59:37 PM
halo halo excuse me me ku tea ellam poda teriyum :@:@:@
Title: Re: டீ போடும் முறை -- புதினா டீ, கிரீன் டீ
Post by: kanmani on March 15, 2013, 12:26:51 AM
suba neenga tea nala poduveenga ana oruorumuraiyum neenga tea podumpodhu indha tea-ya kooda unala olunga poda theriyadhanu unga mom kekaradhu engalukum theriyumunga ...

Title: Re: டீ போடும் முறை -- புதினா டீ, கிரீன் டீ
Post by: SuBa on March 20, 2013, 01:12:04 PM
ippidi publicaa sollurangaleeeeee... :'( mumyeee  :'(