FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on January 23, 2013, 04:42:45 AM

Title: கற்றாழை ஜெல்லின் சரும நன்மைகள்!!!
Post by: kanmani on January 23, 2013, 04:42:45 AM
வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்றான கற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும். குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவை முகப்பரு மற்றும் பிம்பிளை நீக்குகின்றன.

 மேலும் இந்த கற்றாழையை வைத்து நிறைய அழகுப் பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கற்றாழையை வீட்டிலேயே வளர்த்து, தினமும் முகத்திற்கு தடவி வந்தால், முகம் நன்கு பட்டுப் போன்று மாறிவிடும். இப்போது அதன் மற்ற நன்மைகளைப் பார்ப்போமா!!!

 benefits aloe vera gel on skin

 * முகப்பருவை குறைக்க வேண்டுமென்பவர்கள், இதனை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

 * வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும்.

 * ஆண்கள் ஷேவிங் செய்த பின்னர், முகத்திற்கு லோசனை தடவுவார்கள். ஏனெனில் ஷேவிங் செய்த பின்னர், அந்த இடத்தில் அரிப்புகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமென்று தடவி மசாஜ் செய்வார்கள். அவ்வாறு கெமிக்கல் கலந்த லோசனை தடவுவதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லை தடவினால், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

* உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். ஆனால் கற்றாழையை வைத்து, மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும். பொதுவாக இந்த மார்க்குகள் உடல் எடை அதிகரிப்பது அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும்.

 * முதுமை தோற்றம் சிலருக்கு இளமையிலேயே ஏற்படுகிறது. எனவே இத்தகைய தோற்றத்தை தடுக்க கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வர, தளர்ந்து இருக்கும் சருமம் நன்கு இறுக்கமடைந்து, இளமை தோற்றதை வைக்கும். அதுமட்டுமின்றி கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. இதனால் சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும்.

* சூரிய கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சருமம் கருமையான நிறத்தில் காணப்படும்.
அதுமட்டுமின்றி சில நேரங்களில் கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தை பாதிப்பிலிருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்