FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: Dharshini on September 26, 2011, 10:38:05 PM
-
கத்தரிக்காய் - 6
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு
வறுத்து அரைக்க:
கடுகு - சிறிது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடலை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 8 இதழ்
இஞ்சி பூண்டு (நசுக்கியது) - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 3 தேக்கரண்டி
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
கத்தரிக்காயை 10 நிமிடம் கொதிக்கும் நீரில் வேக விட்டு, எடுத்து உலர்த்தவும்.
வறுக்க கொடுத்தப் பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
வறுத்த பொருட்களை அரைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி உப்பு சேர்த்து கெட்டியாக இருக்கும்படி கலக்கவும்.
கத்தரிக்காயை நான்காக பிளந்து உள்ளே அரைத்த மசாலாவை ஸ்டஃப் செய்யவும்.
பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய்களை போட்டு வறுத்து எடுக்கவும்.
க்ரிஸ்பியான ஸ்பைஸியான ஸ்டஃப்ட் கத்தரிக்காய் ரெடி. வெரைட்டி ரைஸ் வகைகளுக்கு பிரமாதமாக இருக்கும்.
காயை வேக வைக்காமலும் செய்யலாம். ஆனால் அதிக நேரம் எண்ணெயில் வறுக்க வேண்டி வரும். எண்ணெய் குறைவாக பயன்படுத்துபவர்கள் இம்முறையில் செய்யலாம்